அப்பப்பா இந்த பையன் வேறலெவல்.. தொடரும் அசத்தல் – சாய் சுதர்சன் இந்திய அணிக்கு ஆடப்போவது உறுதி

Sai-Sudharsan
- Advertisement -

டொமஸ்டிக் கிரிக்கெட்டில் தமிழக அணிக்காக விளையாடி வந்த சாய் சுதர்சன் டி.என்.பி.எல் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடும் வாய்ப்பினை பெற்றார். அப்படி தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் அசத்தலாக செயல்பட்ட அவருக்கு இந்திய ஏ அணியிலும் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

அப்படி இந்திய ஏ அணி விளையாடிய போட்டிகளிலும் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் அடுத்ததாக இங்கிலாந்து சென்று கவுண்டி கிரிக்கெட்டில் சர்வே அணிக்காக விளையாடினார். அங்கும் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அறிமுக போட்டியிலேயே 73 ரன்கள் குவித்து இங்கிலாந்து மண்ணிலும் அசத்தியிருந்தார்.

- Advertisement -

இப்படி டொமஸ்டிக் கிரிக்கெட், இந்தியா ஏ, டி.என்.பி.எல், ஐபிஎல், கவுன்டி கிரிக்கெட் என அனைத்திலும் அசத்தி வரும் சாய் சுதர்சன் ஏற்கனவே ரஞ்சி தொடர், விஜய் ஹசாரே தொடர் என அனைத்துமே சிறப்பாக செயல்பட்டுள்ளார். இப்படி தொடர்ச்சியாக எந்த தொடராக இருந்தாலும் சரி எந்த பேட்டிங் வரிசையில் களமிறங்கினாலும் சரி அனைத்து இடத்திலுமே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் கவுண்டி போட்டியில் விளையாடிய பின்னர் நாடு திரும்பியுள்ள சாய் சுதர்சன் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் இராணி கோப்பை தொடருக்கான ரெஸ்ட் ஆப் இந்தியா அணியில் துவக்கவீரராக நேற்று சௌராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கி விளையாடினார்.

- Advertisement -

அப்படி அவர் விளையாடிய இந்த போட்டியில் மாயங்க் அகர்வால், ஹனுமா விகாரி, சர்ப்ராஸ் கான் என முக்கிய வீரர்கள் ஆட்டம் இழந்து வெளியேறினாலும் பொறுப்புடன் விளையாடிய சாய் சுதர்சன் 164 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் குவித்து அசத்தினார். பொதுவாகவே நம்பர் 3 நம்பர் 4 இடங்களில் விளையாடும் அவர் ரெஸ்ட் ஆப் இந்தியா அணியில் துவக்க வீரராகவும் களமிறங்கி அரைசதம் அடித்துள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க : அஷ்வின் பிளேயிங் லெவன்ல கண்டிப்பா ஆடனும். அதுக்கு காரணமும் இருக்கும் – சுனில் கவாஸ்கர் பளீச்

அவரது இந்த தொடர்ச்சியான செயல்பாடுகளை பார்த்து வரும் தமிழக ரசிகர்கள் பலரும் எந்த இடத்தில் களமிறங்கினாலும் எந்த நாட்டில் விளையாடினாலும் சாய் சுதர்சன் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். கட்டாயம் அவர் இந்திய அணிக்காக விரைவில் விளையாடப்போவது உறுதி என்று அவருக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement