எங்க காலத்துல சச்சினை விட அவர் தான் ரொம்ப டேஞ்சரான பேட்ஸ்மேன், இந்தியாவை வீழ்த்த அவங்கள சாய்க்கணும் – அப்துல் ரசாக்

Razzaq
- Advertisement -

ஆசிய கண்டத்தின் டாப் 2 கிரிக்கெட் அணிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் கடந்த 10 வருடங்களாக எல்லை பிரச்சினை காரணமாக ஆசிய மற்றும் ஐசிசி உலக கோப்பைகளில் மட்டுமே மோதி வருகின்றன. ஆனால் அதற்கு முன்பாக அடிக்கடி இரு தரப்பு தொடர்களில் மோதுவதை வழக்கமாக வைத்திருந்த இவ்விரு அணிகளும் மிகவும் ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள். ஏனெனில் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் கௌரவமாக கருதும் இவ்விரு அணிகளும் அதில் வெற்றி பெறுவதற்கு முழுமூச்சுடன் போராடும் என்பதால் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிகளில் பரபரப்புக்கு பஞ்மிருக்காது. அந்த சமயங்களில் இந்தியாவை சாய்க்க வேண்டுமெனில் முதலில் அதன் முதுகெலும்பாக கருதப்பட்ட சச்சின் டெண்டுல்கரை எப்படியாவது அவுட்டாக்க பாகிஸ்தான் பவுலர்கள் வெறித்தனமாக பந்து வீசுவார்கள்.

sachin

- Advertisement -

குறிப்பாக வாசிம் அக்ரம், வகார் யூனிஸ், சோயப் அக்தர் ஆகியோர் சச்சினை பார்த்தாலே வேண்டுமென்றே அதிரடியான வேகத்தில் வீசி அவுட்டாக முயல்வார்கள். எதுவுமே வேலைக்கு ஆகவில்லை என்றாலும் பவுன்சர், பீமர் பந்துகளை வீசி காயமடைய வைத்ததாவது சச்சினை பெவிலியனுக்கு அனுப்ப வேண்டும் என்பதில் பாகிஸ்தான் பவுலர்கள் குறியாக இருந்ததை அந்த காலத்து இந்திய ரசிகர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இருப்பினும் அதற்கு பலமுறை சிம்ம சொப்பனமாக மாறி பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்த சச்சின் டெண்டுல்கர் நிறைய வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.

டேஞ்சரான பேட்ஸ்மேன்:
அவருக்கு நிகராக இந்திய கிரிக்கெட்டில் அதிரடி எனும் வார்த்தைக்கு உண்மையான அர்த்தத்தை காட்டிய விரேந்தர் சேவாக்கும் பல போட்டிகளில் பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். குறிப்பாக முதல் பந்திலேயே பவுண்டரியுடன் அதிரடியை தொடங்கக்கூடிய அவர் 2004ஆம் ஆண்டு முல்தானில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் சிதைத்து சிக்ஸருடன் முச்சதம் அடித்த முதல் இந்திய வீரராக சாதனை படைத்தது யாராலும் மறக்க முடியாது.

Sehwag

இந்நிலையில் தம்முடைய காலங்களில் சச்சினை விட வீரந்திர சேவாக் தான் ஆபத்தான இந்திய பேட்ஸ்மேனாக பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலை கொடுத்ததாக முன்னாள் வீரர் அப்துல் ரசாக் பாராட்டியுள்ளார். குறிப்பாக சேவாக் விக்கெட்டை எடுப்பது ஜேக்பாட் போன்றது என்று பாராட்டும் அவர் அவரையும் சச்சினையும் அவுட்டாக்கினால் தான் இந்தியாவை சாய்க்க முடியும் முடியும் என்பதால் அவர்களுக்கு எதிராக ஸ்பெஷல் திட்டங்களை போடுவோம் என்று கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“விரேந்தர் சேவாக் அந்த சமயங்களில் மிகவும் அபாயகரமான வீரராக இருந்தார். அவருக்கு பின்பு தான் சச்சின் டெண்டுல்கர். எனவே நாங்கள் எப்போதும் சேவாக் மற்றும் சச்சினுக்கு எதிராக திட்டங்களை வகுப்போம். குறிப்பாக சேவாக் மற்றும் சச்சினின் விக்கெட்டை எடுத்தால் வெற்றி நமதாகி விடும் என்ற கோணத்தில் நாங்கள் திட்டங்களை போடுவோம். அதே போல் எங்களது பேட்ஸ்மேன்கள் ஜாஹீர் கானுக்கு எதிராக திட்டங்களை வகுப்பார்கள். இர்பான் பதான் சில காலங்கள் இருந்தார்”

Razzaq

“ஹர்பஜன் சிங் போன்ற மேலும் சிலரும் அவர்களுடைய நாட்டுக்காக பெரிய போட்டிகளில் விளையாடி சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளனர். அந்த காலங்களில் இந்திய மிடில் ஆர்டரில் யுவராஜ் சிங் மிக முக்கியமானவராக இருந்தார். எனவே சேவாக், சச்சின், யுவராஜ் போன்றவர்கள் பெரிய பெயர்களாகும். அவர்களை அவுட்டாக்கினால் இன்றும் நாம பெரிய விக்கெட்டை எடுத்து விட்டோம் என்ற திருப்தியை அடைவோம். அந்த வீரர்களுக்கு எதிராகத்தான் பாகிஸ்தான் வலுவான திட்டங்களை வகுக்கும்”

இதையும் படிங்க:IPL 2023 : கிரிக்கெட் விளையாடுவதற்காக 12வது பள்ளி தேர்வுக்கு போகலே – இக்கட்டான பின்னணியை பகிர்ந்த இளம் இந்திய வீரர்

“குறிப்பாக எப்படி என்ன பந்து வீசுவது, எந்த இடத்தில் அவர்களுக்கு பந்து வீச வேண்டும், ஃபீல்ட் செட்டிங், வித்தியாசமான பவுலர்கள் மற்றும் வித்தியாசமான பந்துகளை அவர்களுக்கு எதிராக வீசுவது போன்றவை எங்களது திட்டமாக இருக்கும். அதேபோல எங்களுடைய பேட்ஸ்மேன்கள் ஜாஹிர் கான், ஹர்பஜன் சிங், இர்பான் பதான் ஆகியோர்களுக்கு எதிராக திட்டங்களை வகுப்பார்கள்” என்று கூறினார். அப்படி தரமான வீரர்களைக் கொண்ட இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இப்போதெல்லாம் அடிக்கடி மோதுவதை பார்க்க முடிவதில்லை என்பதே இருநாட்டு ரசிகர்களின் ஆதங்கமாக இருந்து வருகிறது.

Advertisement