IPL 2023 : கிரிக்கெட் விளையாடுவதற்காக 12வது பள்ளி தேர்வுக்கு போகலே – இக்கட்டான பின்னணியை பகிர்ந்த இளம் இந்திய வீரர்

Bishnoi
- Advertisement -

இந்தியாவுக்காக பல தரமான இளம் வீரர்களை கண்டறிந்து கொடுக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 31 முதல் துவங்குகிறது. அதன் பயனாக ஒரே சமயத்தில் முதன்மை அணியையும் கத்துக்குட்டிகளுக்கு எதிராக 2வது தர இளம் அணியையும் களமிறக்கும் அளவுக்கு இந்தியா சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் வலுவாக மாறியுள்ளது. அந்த வகையில் ஐபிஎல் தொடரால் இளம் வீரர் ரவி பிஷ்னோய் இந்திய கிரிக்கெட்டின் வருங்கால நம்பிக்கை நட்சத்திர ஸ்பின்னராக கிடைத்துள்ளார் என்றே சொல்லலாம். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2018 ஐபிஎல் தொடரில் நெட் பந்து வீச்சாளராக தேர்வாகி பின்னர் தனது மாநில அணிக்காக உள்ளூர் அளவில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்.

Ravi Bishnoi

- Advertisement -

அதனால் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2020 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையில் விளையாட தேர்வாகி அதிக விக்கெட்கள் எடுத்த வீரராக சாதனை படைத்த அவர் இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றி ஐபிஎல் தொடரிலும் பஞ்சாப் அணியில் ஏலத்தில் வாங்கப்பட்டு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். அதன் காரணமாக கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் இதுவரை 10 டி20 மற்றும் 1 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார்.

12ஆம் வகுப்பு தேர்வு:
இருப்பினும் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் போன்ற முன்னணி ஸ்பின்னர்கள் இருப்பதால் நல்ல ஃபார்மில் இருந்தும் இந்திய அணியில் வாய்ப்பு பெறாமல் இருந்து வரும் அவர் இந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாட காத்திருக்கிறார். இந்நிலையில் கிரிக்கெட்டுக்காக கடந்த 2018ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு பொது தேர்வை தவற விட்டதாக தெரிவிக்கும் ரவி பிஷ்னோய் அதற்காக தமது தந்தை மிகவும் வருத்தப்பட்டதாக கூறியுள்ளார். அதனால் தந்தைக்காக அடுத்த வருடம் 12ஆம் வகுப்பு தேர்வை மீண்டும் எழுதி விட்டு மேற்கொண்டு படிக்காமல் கிரிக்கெட்டில் விளையாடி வருவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

Bishnoi-1

“ராஜஸ்தான் அணியின் நெட் பந்து வீச்சாளராக இருந்த காரணத்தால் 12ஆம் வகுப்பை தவற விட வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது. அதனால் கோபமான என்னுடைய தந்தை என்னை நேராக அழைத்து மீண்டும் படிக்குமாறு சொன்னார். ஆனால் என்னுடைய பயிற்சியாளர் நான் ஐபிஎல் தொடரில் இருக்க வேண்டும் என்று என்னிடம் உறுதியாக சொல்லிவிட்டார். அதன் காரணமாக 12ஆம் வகுப்பு தேர்வுகளை தவற விட்ட நான் அதை அடுத்த வருடம் தான் நிறைவு செய்தேன். எனக்கு 10 வயது இருக்கும் போது முதல் முறையாக கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்தேன்”

- Advertisement -

“எனக்கு 15 வயதாகும் போது கிரிக்கெட்டில் முழுமையாக விளையாடுவதற்கு தேவையான நேரம் கிடைக்காததால் என்னுடைய படிப்பை விட்டு விடலாம் என்று முடிவெடுத்தேன். அதற்காக என்னுடைய பெற்றோர்களை சமாதானம் செய்தது மிகவும் கடினமாக இருந்தது. இருப்பினும் என்னுடைய திறமையை உணர்ந்த என்னுடைய பயிற்சியாளர் என்னுடைய பெற்றோர்களிடம் அதைப் பற்றி பேசி புரிய வைத்து சமாதானப்படுத்தினார்” என்று கூறினார்.

bishnoi

முன்னதாக 2020 அண்டர்-19 உலகக்கோப்பை ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்த கர்வத்தால் அதிகமாக ஆட்டம் போட்டு ஸ்லெட்ஜிங் செய்த வங்கதேச வீரர்களுக்கு களத்திலேயே நேருக்கு நேராக பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய வீரர்கள் சண்டை போட்டுக் கொண்டது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. அந்த நிகழ்வு பற்றிய ரவி பிஷ்னோய் மேலும் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அண்டர்-19 உலகக் கோப்பை ஃபைனலில் வங்கதேச வீரர்கள் எங்களுடைய பேட்ஸ்மேன்களை அதிகமாக ஸ்லெட்ஜிங் செய்தனர். குறிப்பாக அவர்கள் எல்லை மீறி நடந்து கொண்டதால் எங்களுடைய நேரம் வந்த போது நாங்களும் அதை திருப்பி கொடுத்தோம். இறுதியில் அவர்கள் வென்ற பின் மீண்டும் எல்லை மீறினார்கள். குறிப்பாக அவர்கள் எங்களது முகத்துக்கு நேராக கிண்டலடித்தார்கள்”

Bishnoi

இதையும் படிங்க:விராட் கோலி இல்ல, ஆஸ்திரேலியர்களுக்கு அவரை கண்டாலே பிடிக்காது – இந்திய வீரரை வெறுப்புடன் பாராட்டும் ஜோஸ் ஹேசல்வுட்

“அதனால் அனல் பறந்த அந்த தருணத்தில் பெருமைப்படாத சில வார்த்தைகளை பயன்படுத்தி நானும் அவர்களுக்கு பதிலடி கொடுத்தேன். இருப்பினும் அந்த ஃபைனலுக்கு பின் நான் யாரையும் ஸ்லெட்ஜிங் செய்வதில்லை. அதன் பின் ஐபிஎல் தொடரில் விளையாடுவேனா இல்லையா என்பது மட்டுமே என்னுடைய கவனமாக மாறியது” என்று கூறினார்.

Advertisement