CWC 2023 : அடுத்த மேட்ச்ல அஷ்வினை விளையாட வைக்காதீங்க.. இந்திய அணிக்கு சேவாக் கோரிக்கை

Virender Sehwag
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து வெற்றிப் பயணத்தை துவங்கியுள்ளது. குறிப்பாக தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 200 ரன்களை இந்தியா சேசிங் செய்து வென்ற விதம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

ஏனெனில் கேப்டன் ரோஹித், இசான் கிசான், ஸ்ரேயாஸ் ஆகியோர் ஆரம்பத்திலே டக் அவுட்டானதால் தோல்வி உறுதி என்று ரசிகர்கள் கவலையடைந்த போது மிடில் ஆர்டரில் 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை தூக்கி நிறுத்திய விராட் கோலி 85 ரன்களும் ராகுல் 97* ரன்களும் எடுத்து அபாரமான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து தலைநகர் டெல்லிக்கு சென்றுள்ள இந்திய அணியினர் அங்கு அக்டோபர் 11ஆம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது போட்டியில் களமிறங்க தயாராகி வருகின்றனர்.

- Advertisement -

சேவாக் கோரிக்கை:
இந்நிலையில் அப்போட்டியில் சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஓய்வு கொடுக்குமாறு இந்திய அணி நிர்வாகத்தை வீரேந்திர சேவாக் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் 1 விக்கெட் எடுத்து அசத்தலாக செயல்பட்ட அஸ்வினை வயது காரணமாக பெரிய போட்டிகளில் மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு.

“அப்போட்டியில் ரவிச்சந்திரன் ஓய்வெடுப்பார் என்று நினைக்கிறேன். சமீபத்திய ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் 5 விக்கெட்டுகளை எடுத்த ஷமி நல்ல ஃபார்மில் இருக்கிறார். மேலும் டெல்லி மைதானம் வித்தியாசமானதாகவும் சற்று சிறியதாகவும் இருக்கும். அந்த சூழலில் அஸ்வின் வயதை பார்க்க வேண்டும். எனவே இந்தியா அவரை பெரிய போட்டிகளில் பயன்படுத்துவதற்காக மட்டும் சேமிக்க வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் கேஎல் ராகுல் அசத்தியத்திற்கு டிராவிட், ரோஹித்தை பாராட்டிய சேவாக் ஆஸ்திரேலிய போட்டியில் டக் அவுட்டான இசான் கிசான் மற்றும் ஸ்ரேயாஸ் ஆகியோருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டும் என்று மேலும் பேசியது பின்வருமாறு. “கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு சம்மதிக்க வைத்த டிராவிட் மற்றும் ரோகித்தை நாம் பாராட்ட வேண்டும். ஏனெனில் ராகுல் இந்த இடத்தில் விளையாடுவதால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் அதிக வலுவாகியுள்ளது”

இதையும் படிங்க: CWC 2023 : அந்த வசதி சரில்ல தான்.. அதுக்காக இந்தியா மீது குறை சொல்ல மாட்டோம்.. ஜோஸ் பட்லர் பேட்டி

“ஒருவேளை அவர் துவக்க வீரராக களமிறங்கி அவுட்டாகியிருந்தால் நாம் பாண்டியா அல்லது சூரியகுமார் போன்றவர்களை நம்பி இருந்திருக்க வேண்டும். மேலும் இந்தியா 2 விக்கெட்டுகளை இழந்த சூழ்நிலையில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் சற்று நேரம் எடுத்து விளையாடியிருக்க வேண்டும். அதே போல இஷான் கிசான் அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்தார். இவர்களைப் போல் நானும் பலமுறை அவுட்டாகியுள்ளேன் என்பதால் விமர்சிப்பதற்கு பதிலாக ஆதரவளிக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement