CWC 2023 : அந்த வசதி சரில்ல தான்.. அதுக்காக இந்தியா மீது குறை சொல்ல மாட்டோம்.. ஜோஸ் பட்லர் பேட்டி

Jos Buttler England
- Advertisement -

இந்தியாவில் கோலாகலமாக துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி 2023 உலகக் கோப்பையில் அக்டோபர் 10ஆம் தேதி நடைபெறும் 7வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. அதில் இங்கிலாந்து தங்களுடைய முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியை சந்தித்தது. எனவே இந்த போட்டியில் இன்று கத்துக்குட்டியாக கருதப்படும் வங்கதேசத்தை அடித்து நொறுக்கி இங்கிலாந்து வெற்றி பாதைக்கு திரும்பும் என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதை விட இந்த போட்டி ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் தரம்சாலா நகரில் இருக்கும் அழகான எச்பிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. குறிப்பாக பின்புறத்தில் பனி சூழ்ந்த மலை தொடர்களுடன் இதமான வானிலை நிலவக்கூடிய தரம்சாலா உலகிலேயே பார்த்ததும் ரசிகர்களின் மனதை கவரும் மிகவும் அழகான மைதானமாக அனைவராலும் வர்ணிக்கப்படுகிறது.

- Advertisement -

பட்லர் ஆதரவு:
ஆனால் அழகு இருக்கும் இடத்தில் ஆபத்து இருக்கும் என்று சொல்வது போல் இம்மைதானத்தில் 30 யார்ட் உள் வட்டத்திற்கு வெளியே இருக்கும் களப்பகுதிகள் மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. அதாவது பொதுவாகவே பெரும்பாலான மைதானங்களில் ஃபீல்டிங் செய்யும் போது வீரர்கள் காயத்தை தவிர்ப்பதற்காகவே பச்சை புற்கள் அதிகமாக வளர்க்கப்படுவது வழக்கம். ஆனால் இம்மைதானத்தில் குளிர்ச்சியான வானிலை நிலவுவதால் எப்போதுமே பச்சைப் புற்களை வளர்ப்பதில் பெரிய சவால் இருந்து வருகிறது.

சொல்லப்போனால் கடந்த சில வருடங்களுக்கு முன் இங்கு நடைபெறவிருந்த இந்தியாவின் ஒரு போட்டி இந்தூருக்கு மாற்றப்பட்டது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம். அந்த நிலையில் இங்கு நடைபெற்ற முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் பவுண்டரியை தடுக்கும் போது புல் இல்லாததால் டைவ் செய்யும் போது தடுக்கப்பட்ட போதிலும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பித்தார்.

- Advertisement -

அதனால் தர்மசாலா மைதானம் பற்றி வெளிநாட்டை சேர்ந்தவர்கள் விமர்சித்து வரும் நிலையில் தாங்கள் அதை குறை சொல்லப்போவதில்லை என்று இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் அதிருப்தியை வெளிப்படுத்தினாலும் ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஆம் சிலரை போல என்னைப் பொறுத்த வரையும் அது சுமாராகவே இருக்கிறது. அதனால் நீங்கள் ஃபீல்டிங் செய்யும் போது டைவ் அடிப்பதில் மிகவும் எச்சரிக்கையாகவும் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டுமென பேச வேண்டியுள்ளது”

இதையும் படிங்க: NZ vs NED : கூடிய சீக்கிரம் எங்களோட ஃபுல் ஸ்ட்ரெத்தை பாப்பீங்க. வெற்றிக்கு பின்னர் – டாம் லேதம் பேட்டி

“ஏனெனில் ஒரு அணியாக அது உங்களுக்கு எதிராக இருக்கலாம். மேலும் ரன்களை சேமிப்பதற்காகவே நாம் டைவ் அடிப்போம். அந்த சூழ்நிலையில் இது போன்ற களங்கள் அதற்கு சாதகமானதாக இருக்காது. ஆனால் அதற்காக இதை சாக்காக சொல்லாமல் நாங்கள் அதற்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். அதே சமயம் உலகக்கோப்பையில் தொடர்ந்து விளையாட நீங்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்” என்று கூறினார்”

Advertisement