- Advertisement -
ஐ.பி.எல்

இவ்வளவு எனர்ஜியை வைத்திருக்கும் விராட் கோலி.. ஏன் இந்த முடிவை எடுத்தார்ன்னு சொல்லனும்.. சேவாக் அதிருப்தி

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 23ஆம் தேதி லக்னோவில் 65வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் பெங்களூருவை 42 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய ஹைதராபாத் அதிகபட்சமாக இஷான் கிசான் 94*, அபிஷேக் சர்மா 34 ரன்கள் எடுத்த உதவியுடன் 232 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அடுத்து விளையாடிய பெங்களூரு அணிக்கு 7 ஓவரில் 80 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த விராட் கோலி நல்ல துவக்கத்தைக் கொடுத்து 43 (25) ரன்னில் அவுட்டானார். அவருடன் சேர்ந்து விளையாடிய பில் சால்ட் 62 (32) ரன்கள் எடுத்தார். ஆனால் மற்ற வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறியதால் 19.5 ஓவரில் 189க்கு ஆல் அவுட்டான பெங்களூரு 4வது தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

எனர்ஜியுடன் விராட் கோலி:

ஹைதராபாத் அதிகபட்சமாக கேப்டன் பட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்நிலையில் இப்போட்டியில் பவர்பிளேவில் வெளுத்து வாங்கிய விராட் கோலி 7 பவுண்டரி 1 சிக்ஸருடன் 172.00 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியதாக வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். மேலும் ஃபீல்டிங் செய்வதில் துடிதுடிப்பாக செயல்பட்ட விராட் கோலி குறைந்தது இன்னும் 2 வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் ஃபிட்னஸ் மற்றும் திறமையைக் கொண்டிருப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

அதையும் தாண்டி ஏன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் என்பதை விராட் கோலி தான் சொல்ல வேண்டும் என்று தெரிவிக்கும் சேவாக் இது பற்றி பேசியது பின்வருமாறு. “கண்டிப்பாக விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் முன்னதாகவே ஓய்வு பெற்று விட்டார் என்று நான் கருதுகிறேன். ஃபிட்னஸை மெயின்டன் செய்யும் விதத்தை வைத்து அவரால் எளிதாக இன்னும் 2 வருடங்கள் விளையாடியிருக்க முடியும்”

- Advertisement -

சேவாக் அதிருப்தி:

“ஆனால் அந்த ஓய்வு முடிவுக்கான பின்னணியில் என்ன காரணம் இருக்கிறது என்பதை விராட் கோலியால் மட்டுமே சொல்ல முடியும். இது அந்த வீரரின் தனிப்பட்ட சொந்த முடிவாக இருக்கும். அல்லது இனிமேலும் விளையாடுவதற்கு ஒன்றுமில்லை என்று சோர்வடைந்து அந்த முடிவை எடுத்திருக்கலாம்”

இதையும் படிங்க: இந்த தொடரில் இருந்து வெளியேறினாலும் அற்புதமான ஒரு வீரரை கண்டுபிடிச்சிருக்கோம் – பேட் கம்மின்ஸ் மகிழ்ச்சி

“ஆனால் என்னைப் பொறுத்த வரை விராட் கோலி விளையாடும் விதம், எனர்ஜியை காண்பிக்கும் விதத்தை வைத்து அவர் இன்னும் 2 வருடங்கள் விளையாடியிருக்க முடியும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து விராட் கோலி இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளார். இந்தப் போட்டியில் தோற்ற பெங்களூரு குவாலிபயர் 1இல் விளையாடும் வாய்ப்பைக் 90% இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -