இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 65-ஆவது லீக் போட்டியானது நேற்று லக்னோ நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஜிதேஷ் சர்மா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
இந்த தொடரில் எங்களுக்கு ஒரு அற்புதமான வீரர் கிடைச்சிருக்காரு : பேட் கம்மின்ஸ்
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் குவித்தது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பாக அதிகபட்சமாக இஷான் கிஷன் 94 ரன்களையும், அபிஷேக் சர்மா 34 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது சன்ரைசர்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக சன்ரைசர்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில் : இந்த வெற்றி சற்று தாமதமாக கிடைத்துள்ளது. ஆனாலும் எங்களது அணியின் ஒட்டுமொத்த செயல்பாடும் சிறப்பாக இருந்தது. நிதிஷ் ரெட்டி மீண்டும் பந்துவீச ஆரம்பித்து விட்டார். எங்களுக்கு இவரின் மூலம் சரியான ஆறாவது பந்துவீச்சாளர் கிடைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.
அதேபோன்று அபிஷேக் ஷர்மாவும் பந்து வீசுகிறேன் என்று தயாராக இருக்கிறார். மற்ற வீரர்களை விட இஷான் கிஷன் உயரமாக இல்லை என்றாலும் பேட்டிங்கில் அதிகபலம் வைத்துள்ளார். இங்க போட்டியில் 170 ரன்கள் வரை அடித்தாலே போதும் என்ற நிலையில் எங்களது பேட்ஸ்மேன்கள் கூடுதலாக ரன்களை குவித்தனர்.
இதையும் படிங்க : அதுக்கான பதிலே தெரியல.. இந்த தோல்வி நல்லது.. எப்படி கம்பேக் கொடுக்குறோம் பாருங்க.. ஜிதேஷ் பேட்டி
இந்த தொடரில் இருந்து நாங்கள் ஏற்கனவே வெளியேறி இருந்தாலும் இஷான் மலிங்கா மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் இந்த தொடரில் நாங்கள் கண்டுபிடித்த அற்புதமான வீரர் என்று கூறிவேன். அவரிடம் நல்ல யார்க்கர் பந்துகள் இருக்கிறது. அதேபோன்று ஸ்லோவர் பந்துகளையும் சிறப்பாக வீசுகிறார் என பேட் கம்மின்ஸ் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.



