ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 23ஆம் தேதி லக்னோவில் 65வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் பெங்களூரு அணியை 42 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து தங்களுடைய 5வது ஆறுதல் வெற்றியை பெற்றது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஹைதராபாத் 232 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக இசான் கிசான் 94*, இஷான் கிசான் 34 ரன்கள் எடுத்தார்கள்.
அடுத்து விளையாடிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி 62, பில் சால்ட் 43 ரன்களை அதிரடியாக எடுத்து அபாரமான துவக்கத்தைக் கொடுத்தனர். அதனால் ஒரு கட்டத்தில் 173/3 என்ற வலுவான துவக்கத்தைப் பெற்ற அந்த அணி எளிதாக வெல்லும் என்று நம்பப்பட்டது. ஆனால் மயங் அகர்வால் 11, ரஜத் படிதார் 18, ஜிதேஷ் சர்மா 24, செபார்ட் 0, க்ருனால் பாண்டியா 8, டிம் டேவிட் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
பெங்களூரு சொதப்பல்:
அதனால் 19.5 ஓவரில் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டான பெங்களூரு தங்களுடைய 4வது தோல்வியைப் பதிவு செய்தது. அதன் காரணமாக குவாலிபயர் 1 சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெங்களூரு அணி கிட்டத்தட்ட கோட்டை விட்டுள்ளது. ஹைதெராபாத் அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 3, எஷன் மலிங்கா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
இந்நிலையில் 173/3 என்ற வலுவான நிலையில் இருந்தும் கடைசியில் எப்படி தோற்றோம் என்பதற்கான பதில் தம்மிடம் இல்லை என்று ஆர்சிபி கேப்டன் ஜிதேஷ் சர்மா தெரிவித்துள்ளார். மேலும் இந்த தோல்வி தங்களுடைய பலவீனங்களை சரி செய்வதற்கான வாய்ப்பு என்றும் அவர் கூறியுள்ளார். அந்த பலவீனங்களை சரி செய்து கம்பேக் கொடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கம்பேக் கொடுப்போம்:
இது பற்றி ஜிதேஷ் பேசியது பின்வருமாறு. “இலக்கு 20 – 30 ரன்கள் எக்ஸ்ட்ராவாக இருந்தது. வலுவான நிலையில் இருந்து ஆர்சிபி எப்படி தோற்றது என்று சொல்வதற்கான பதில் என்னிடம் இல்லை. நாங்கள் அவசரப்பட்டோம், சிறப்பாக விளையாடுவதற்கான தீவிரம் இல்லை என்று நினைக்கிறேன். இருப்பினும் இப்போட்டியில் தோல்வியை சந்தித்தது நல்லது”
இதையும் படிங்க: 173/3 டூ 189 ஆல் அவுட்.. சொதப்பலை ஆரம்பித்து தங்க வாத்தை தவற விட்ட ஆர்சிபி.. ஹைதராபாத் வெற்றி
“நான் அவுட்டான விதத்தில் ஏமாற்றத்தை சந்தித்தேன். இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது நல்லது என்று நினைக்கிறேன். ஏனெனில் இதை வைத்து நீங்கள் எங்கே தடுமாறுகிறீர்கள் என்பதை கண்டறிந்து சோதித்து முன்னேற முடியும். டாப் ஆர்டரில் நாங்கள் நன்றாக பேட்டிங் செய்தது நேர்மையான விஷயமாகும். இந்த தோல்வியால் கிடைத்த பின்னடைவு எங்களுக்கு நல்லது. இதை வைத்து அடுத்து வரும் போட்டிகளில் சிறந்த வழியில் நாங்கள் கம்பேக் கொடுப்போம்” எனக் கூறினார்.



