IPL 2023 : சும்மா சும்மா கேட்டு டார்ச்சர் பண்ணாதீங்க, ஃபீரியா விளையாட விடுங்க அது அவரோட முடிவு – சேவாக் விளாசல்

Sehwag
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் சென்னை இதுவரை பங்கேற்ற 10 போட்டிகளில் 5 வெற்றிகளைப் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற போராடி வருகிறது. முன்னதாக இந்தியாவுக்கு 3 விதமான உலக கோப்பையை வென்று கொடுத்தது போலவே ஐபிஎல் துவங்கப்பட்ட 2008 முதல் மிகச் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்து சென்னைக்கு 4 கோப்பைகளை வென்று கொடுத்து 2வது வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ள எம்எஸ் தோனி விரைவில் 42 வயதை தொடுவதால் இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

குறிப்பாக தன்னை தல என்று கொண்டாடி வரும் தமிழக ரசிகர்களுக்காக தன்னுடைய கேரியரின் கடைசி போட்டி சென்னை மண்ணில் தான் நடைபெறும் என்று அவர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் 2019க்குப்பின் 4 வருடங்கள் கழித்து தற்போது சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த நிலையில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியின் முடிவில் தன்னுடைய கேரியரின் கடைசியில் இருப்பதால் மகிழ்ச்சியுடன் விளையாடி வருவதாக தோனி தெரிவித்திருந்தார். அதை விட ஈடன் கார்ட்னஸ் மைதானத்தில் தம்மை வழியனுப்பும் வகையில் கொல்கத்தாவை மிஞ்சி தமக்காக சென்னை அணிக்கு ஆதரவு கொடுத்த உள்ளூர் ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

சேவாக் அதிருப்தி:
இந்த அடுத்தடுத்த கருத்துக்கள் ஏற்கனவே முழங்கால் வலியால் அவதிப்பட்டு வரும் தோனி இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவதை அவரே மறைமுகமாக உறுதி செய்ததாகவே பார்க்கப்பட்டது. அந்த நிலையில் லக்னோவுக்கு எதிராக மே 3ஆம் நடைபெற்ற போட்டியில் அந்த கருத்துக்களை அடிப்படையாக வைத்து உங்களுடைய இந்த கடைசி சீசனில் எவ்வளவு மகிழ்ச்சியாக விளையாடி வருகிறீர்கள்? என்று தோனியிடம் முன்னாள் நியூசிலாந்து வீரர் டேனி மோரிசன் கேட்டார். ஆனால் “இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவதைப் பற்றி நீங்கள் தான் முடிவு செய்துள்ளீர்கள். நான் இல்லை” என்று தோனி பதிலளித்தது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

அதாவது ஓய்வு பெறுவது பற்றி தாம் அதிகாரப்பூர்வமாக எதுவும் சொல்லாத நிலைமையில் நீங்களே முடிவு எடுத்துக் கொண்டால் எப்படி என்ற வகையில் தெரிவித்த தோனி அடுத்த வருடம் விளையாடுவேன் என்பதை மறைமுகமாக சொன்னார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற 2020 முதலே ஐபிஎல் தொடரிலும் எப்போது ஓய்வு பெறுவீர்கள் என்று தோனியிடம் ஏன் தொடர்ச்சியாக கேட்டு அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறீர்கள் என முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக இத்தனை வருடங்கள் விளையாடிய தோனிக்கு எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது தெரியும் என்பதால் அந்த முடிவை அவரையே சுதந்திரமாக எடுக்க விடுங்கள் என்று கூறும் அவர் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “முதலில் இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதை ஏன் அவர்கள் தோனியிடம் கேட்கிறார்கள்? ஒருவேளை இந்த வருடம் அவருடைய கடைசி வருடமாக இருந்தாலும் அதைப்பற்றி நீங்கள் ஏன் கேட்க வேண்டும்? ஏனெனில் இது அவருடைய முடிவு. அதை அவரை சுதந்திரமாக எடுக்க விடுங்கள்”

Sehwag

“ஒருவேளை இதுதான் அவருடைய கடைசி வருடமா என்பதற்கான பதிலை தோனியிடமிருந்து நேரடியாக பெறுவதற்கு மோரிசன் விரும்பியிருக்கலாம். என்னைப் பொறுத்த வரை இது அவருடைய கடைசி வருடமா இல்லையா என்பது தெரியாது. அது எம்எஸ் தோனிக்கு மட்டுமே தெரியும்” என்று கூறினார். இருப்பினும் வரலாற்றின் மகத்தான வீரராக போற்றப்படும் தோனி ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று உள்ளூர் அளவிலும் வேறு வெளிநாட்டு தொடர்களிலும் விளையாடாமல் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார்.

இதையும் படிங்க:வீடியோ : 102 மீட்டர் சிக்சருடன் ஸ்டம்ப்பை உடைத்ததற்கு திலக் வர்மா பழிக்கு பழி – சொதப்பிய அர்ஷ்தீப் மோசமான உலக சாதனை

அதனால் தங்களுக்கு மிகவும் பிடித்த தோனி இந்த வருடத்துடன் ஓய்வு பெறாமல் இன்னும் ஒரு வருடம் விளையாட வேண்டும் என்ற ஆர்வத்துடனேயே ரசிகர்களும் மோரிசனும் அவ்வாறு தொடர்ந்து கேட்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement