இந்தியா ஆமை மாதிரி கரை சேர்வாங்க.. நீங்க முயல் மாதிரி போங்க.. இங்கிலாந்தை விமர்சித்த சேவாக்

Virender Sehwag 5
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதி வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் 12 வருடங்கள் கழித்து தோற்கடிப்போம் என்று ஆரம்பத்திலேயே எச்சரித்த இங்கிலாந்து முதல் போட்டியில் வென்று முன்னிலையும் பெற்றது.

ஆனால் அங்கிருந்து சுதாரித்த இந்தியா அதற்கடுத்த 3 போட்டிகளில் வென்று ஹாட்ரிக் வெற்றிகளை பதிவு செய்து கம்பேக் கொடுத்தது. அதனால் 4 போட்டிகளில் முடிவில் 3 – 1* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை வென்றுள்ள இந்தியா சொந்த மண்ணில் எங்களை எவ்வளவு எளிதாக வீழ்த்த முடியாது என்பதை இங்கிலாந்துக்கு காண்பித்துள்ளது. இந்த வெற்றியால் இந்தியா 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 64.58% புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.

- Advertisement -

விளாசிய சேவாக்:
மறுபுறம் அடுத்தடுத்த படுதோல்விகளால் இங்கிலாந்து 19.44% புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 9வது இடத்திற்கு சரிந்து பாதாளத்தில் தவிக்கிறது. முன்னதாக இங்கிலாந்தின் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் டி20 போல அதிரடியாக விளையாடி ரசிகர்களை மகிழ்வித்து டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு புத்துயிர் கொடுக்கப் போவதாக தெரிவித்தனர். அவர்களுடைய பஸ்பால் அணுகுமுறையை பயன்படுத்தி பாகிஸ்தானில் 3 – 0 என்ற கணக்கில் வென்றது உட்பட இங்கிலாந்தும் சில மகத்தான வெற்றிகளை பெற்றது.

ஆனால் அதற்காக அனைத்து நேரங்களிலும் அதிரடியாகவே விளையாடுவோம் என்று அடம் பிடிக்கும் இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறையாக இந்தியாவுக்கு எதிரான இந்த தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது. அதனால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 9வது இடத்திற்கும் சரிந்துள்ள அந்த அணி மீண்டும் ஃபைனலுக்கு தகுதி பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.

- Advertisement -

குறிப்பாக 2021, 2023 வருங்களில் தங்களுடைய சொந்த ஊரில் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறாத அந்த அணி தற்போது பென் ஸ்டோக்ஸ் தலைமையிலும் முதல் முறையாக 2025இல் லண்டனில் நடைபெற உள்ள ஃபைனல் வாய்ப்பை தவற விட தயாராகியுள்ளது. இந்நிலையில் முயல் போல அதிரடியாக பேட்டிங் செய்து ரசிகர்களை மகிழ்விக்கிறோம் என்ற பெயரில் விளையாடும் இங்கிலாந்து 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் திண்டாடுவதாக விரேந்தர் சேவாக் விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆஸி தொடரில் தேர்வான நெய்ல் வாக்னர்.. பாதியிலேயே திடீரென கண்ணீர் மல்க ஓய்வு.. காரணம் என்ன?

ஆனால் ஆமை போல் அலுப்புத்தட்டும் ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இந்தியா 2வது இடத்தைப் பிடித்து அசத்துவதாக கூறும் அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “நீங்கள் என்டர்டைன்மென்ட் செய்யுங்கள் இங்கிலாந்து. போரிங் அடிப்பது போல இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து விளையாடி மேலே செல்லட்டும்” என்று கூறியுள்ளார்.

Advertisement