உ.கோ பிளேயிங் லெவனில்.. எடுத்த எடுப்பில் அவருக்கும் சூர்யாவுக்கும் சான்ஸ் கொடுக்காதீங்க.. சேவாக் பேட்டி

Virender Sehwag 5
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரை சொந்த மண்ணில் வென்று சரித்திரம் படைப்பதற்காக தயாராகி வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது. அதற்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் கிட்டத்தட்ட அனைத்து வீரர்களுமே நல்ல ஃபார்மில் இருப்பதால் யாருக்கு இறுதிக்கட்ட 11 பேர் அணியில் வாய்ப்பு கொடுப்பது என்ற குழப்பம் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இருக்கும் என்று சொல்லலாம்.

ஏனெனில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை முக்கிய வீரர்கள் காயத்தை சந்தித்து முதுகெலும்பு வீரர்கள் சுமாரான ஃபார்மில் திண்டாடிக் கொண்டிருந்தனர். ஆனால் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பையில் கே.எல் ராகுல் மற்றும் பும்ரா ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்து சிறப்பாக செயல்பட்டு நல்ல ஃபார்முக்கு திரும்பி தங்களுடைய இடத்தை பிடித்து இந்திய அணிக்கு வலு சேர்க்கின்றனர்.

- Advertisement -

சேவாக் கருத்து:
அதே போல ஆசிய கோப்பையிலும் தடுமாறிய ஸ்ரேயாஸ் ஐயர் சமீபத்திய ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் சதம்டித்து நல்ல ஃபார்முக்கு திரும்பியுள்ளார். அதன் காரணமாக ஆசிய கோப்பையில் ராகுல் இல்லாத சமயத்தில் விளையாடி நிலைமையை அற்புதமாக சமாளித்த இசான் கிசான் மற்றும் ஆஸ்திரேலிய தொடரில் அசத்தி ஒருநாள் கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்ற விமர்சனங்களை உடைத்த சூரியகுமாருக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது.

இருப்பினும் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் தேவை என்பதற்காக இசான் கிசானும் ஃபினிஷிங் செய்வதற்காக சூரியகுமாரும் வாய்ப்பு பெற வேண்டுமென சில முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு எடுத்த எடுப்பில் வாய்ப்பு கொடுக்கக்கூடாது என்று தெரிவிக்கும் சேவாக் அதற்கான காரணத்தை விளக்கி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“6, 7 ஆகிய இடங்களில் கே.எல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் விளையாட தயாராக இருக்கின்றனர். எனவே சூரியகுமார் அங்கு மட்டுமல்லாமல் 5வது இடத்தில் விளையாடுவதற்கான சூழலும் இல்லை. ஆனால் ஒருவேளை ஹர்திக் பாண்டியா உங்களுடைய 6வது பவுலராக இருந்தால் ராகுல் 5வது இடத்திலும் பாண்டியா 6வது இடத்திலும் விளையாடுவார்கள். அதே போல இசான் கிசான் ஏதோ ஒரு இடத்தில் வாய்ப்பு பெறுவார் என்று நினைத்தோம்”

இதையும் படிங்க: அஸ்வின் எனக்கு போன் பண்ணி அதை கத்துக்கிட்டாரு.. சர்ச்சைக்கு சிவராமகிருஷ்ணன் முற்றுப்புள்ளி

“ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்த சதத்தை வைத்து 4வது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயரும் 5, 6 இடங்களில் ராகுல் மற்றும் பாண்டியாவும் விளையாடுவது உறுதியாகியுள்ளது. எனவே அவர்களுக்கான வாய்ப்பு இந்தியா எம்மாதிரியான கலவையை தேர்ந்தெடுக்கிறது என்பதை பொறுத்தே அமையும். ஒருவேளை பாண்டியா 10 ஓவர்கள் வீசினால் கூட சூரியகுமாருக்கு வாய்ப்பு கிடைக்காது. ஏனெனில் இசான் கிசான் இடதுகை வீரராக இருப்பதால் முன்னுரிமை பெறுவார்” என்று கூறினார்.

Advertisement