அஸ்வின் எனக்கு போன் பண்ணி அதை கத்துக்கிட்டாரு.. சர்ச்சைக்கு சிவராமகிருஷ்ணன் முற்றுப்புள்ளி

lakshman sivaramakrishnan 3
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் 2011க்குப்பின் கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் கடைசி நேரத்தில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. குறிப்பாக காயத்தை சந்தித்து வெளியேறிய அக்சர் பட்டேலுக்கு பதிலாக எதிரணியில் இருக்கும் இடது கை பேட்ஸ்மேன்களை திணறடிக்க ஆஃப் ஸ்பின்னர் தேவை என்ற நோக்கத்துடன் அவர் தேர்வாகியுள்ளார்.

இருப்பினும் அதற்கு சில முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன் உச்சகட்டமாக விமர்சித்தது மொத்த ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தது. இத்தனைக்கும் உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்பட்டதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பாக ட்விட்டரில் வாழ்த்து சொன்ன அவர் அஸ்வின் தம்முடைய பவுலிங் ஆக்சனில் சிறிய மாற்றம் செய்ய வேண்டும் என்று ஆலோசனையும் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

அஸ்வின் போன் பண்ணாரு:
அந்த சூழ்நிலையில் 2023 உலகக்கோப்பை வர்ணனையாளர்கள் பற்றிய விவாதத்தில் அஸ்வின் பெயரை ஒரு ரசிகர் கூறினார். அதனால் திடீரென கொந்தளிக்க ஆரம்பித்த அவர் அஸ்வின் அதிக விக்கெட்களை எடுக்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே இந்திய மைதானங்கள் சுழலுக்கு சாதகமாக அமைக்கப்படுவதாலேயே சமீப காலங்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் சுழலுக்கு எதிராக தடுமாறுவதாக முதலில் விமர்சித்தார்.

அதை தொடர்ந்து சுழலுக்கு சாதகமான மைதானங்களை அமைக்குமாறு மைதான பராமரிப்பாளர்களிடம் அஸ்வின் சொன்னதை தாமே பார்த்துள்ளதாக தெரிவித்த அவர் தோனி மற்றும் சிஎஸ்கே இல்லாமல் போயிருந்தால் ஹர்பஜன் இருந்ததன் காரணமாக இந்திய அணியில் வாய்ப்பே கிடைத்திருக்காது என்று பதிவிட்டு அடுத்த விமர்சனத்தை வைத்தார். மேலும் அது போன்ற மைதானங்களில் முட்டாள் கூட விக்கெட்டுகளை எடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

- Advertisement -

அப்போது பதிலடி கொடுத்த ரசிகர்களுக்கு வேண்டுமானால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் அவரின் சாதனைகளை புரட்டிப் பாருங்கள் என்றும் சிவராமகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் சுமாரான ஃபீல்டர், கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு தகுதியற்ற வீரர், சொந்த சாதனைக்காக விளையாடும் சுயநலவாதி என்று அஸ்வினை பற்றி அவர் தாறுமாறாக விமர்சித்தது ரசிகர்களை கடுப்பாக வைத்தது.

இதையும் படிங்க: 2023 உலக கோப்பையில் அவர் தான் உலகின் பெஸ்ட் ஸ்பின்னரா இருக்காரு.. 81 வயது மூத்த பாக் வீரர் பாராட்டு

அந்த விமர்சனங்களின் இறுதியாக அஸ்வின் தமக்கு போன் செய்து சில சந்தேகங்களைக் கேட்டதாக அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிவராமகிருஷ்ணன் ட்விட்டரில் விட்டுள்ளது பின்வருமாறு. “ரவி அஸ்வின் சிறிது நேரத்திற்கு முன்பு என்னை அழைத்து தனது பவுலிங் ஆக்சன் பற்றி விவாதித்தார். மேலும் இந்த கிண்டல்களை பார்த்து என்னைப் போலவே அவரும் உறைந்து போனார். அத்துடன் என்னுடன் வாக்குவாதம் செய்தவர்களுக்கும் தமக்கும் எந்த தொடர்புமில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார். உங்களுக்கு வாழ்த்துக்கள் அஸ்வின். எங்களை பெருமைப்படுத்துங்கள்” என்று கூறியுள்ளார்.

Advertisement