நல்லவேளை சச்சின் அதை செய்யல.. இல்லைனா 2011 உ.கோ’யில் பாகிஸ்தானிடம் தோத்துருப்போம்.. சேவாக் வெளிப்படை

Virender Sehwag 3
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் தங்களுடைய முதல் 2 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவு செய்துள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி செமி ஃபைனலுக்கு தகுதி பெறும் பயணத்தை வெற்றியுடன் துவக்கியுள்ளது. குறிப்பாக முதல் போட்டியிலேயே வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக போராடி வென்ற இந்தியா 2வது போட்டியில் ஆப்கானிஸ்தானை எளிதாக தோற்கடித்து புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தானை முன்னேறி 2வது இடத்திற்கு முன்னேறியது.

அதைத் தொடர்ந்து அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத் நகரில் இந்தியா தங்களுடைய 3வது போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அந்த போட்டியிலும் வென்று 1992 இதுவரை உலகக் கோப்பைகளில் பாகிஸ்தானிடம் தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை இந்தியா காப்பாற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

- Advertisement -

தவறிய சதம்:
முன்னதாக கடைசியாக சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 2011 உலகக்கோப்பையில் போட்டியில் பெரும்பாலான இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறிய போது சிம்ம சொப்பனமாக நின்ற சச்சின் டெண்டுல்கர் 85 ரன்கள் குவித்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார். சொல்லப்போனால் முன்னதாகவே சச்சின் கொடுத்த சில கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்ட பாகிஸ்தான் கடைசியில் அப்போட்டியில் போராடி தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் அந்த போட்டியில் ஒரு வழியாக சயீத் அஜ்மல் சுழலில் அவுட்டாகி பெவிலியன் வந்து தமது அருகே அமர்ந்த சச்சினை பார்த்து தாம் புன்னகைத்ததாக வீரேந்தர் சேவாக் கூறியுள்ளார். அப்போது நான் சதமடித்திருந்தால் இந்தியா தோல்வியை சந்தித்திருக்கும் என்பதால் தானே சிரிக்கிறீர்கள் என்று தாம் மனதுக்குள் நினைத்ததை சச்சின் கண்டுபிடித்து நேரடியாகவே தம்மிடம் சொன்னதாகவும் சேவாக் ரசிகர்கள் அறியாத பின்னணியை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

அதாவது 90களில் இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் சச்சின் டெண்டுல்கர் சதமடித்த நிறைய போட்டிகளில் இந்தியா தோல்விகளை சந்தித்துள்ளது. அந்த வகையில் அப்போடியில் சச்சின் சதமடிக்காததால் இறுதியில் இந்தியாவும் வென்றதாக கலகலப்புடன் தெரிவிக்கும் சேவாக் இது பற்றி சமீபத்திய பேட்டி பேசியது பின்வருமாறு. “அந்த சமயத்தில் நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும் என சச்சின் என்னிடம் சொன்னார். அதற்கு நான் ஏன் என்று அவரிடம் கேட்டேன்”

இதையும் படிங்க: டேபிள் டாப்பராக தெ.ஆ மிரட்டல் வெற்றி.. 48 வருட உ.கோ வரலாற்றில் ஆஸ்திரேலியா வரலாறு காணாத தோல்வி

“அப்போது நான் சதமடிப்பதற்கு முன்பாகவே அவுட்டாகி விட்டேன் ஒருவேளை நான் சதமடித்திருந்தால் நாம் தோல்வியை சந்தித்திருப்போம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என என்னிடம் சச்சின் சொன்னார். அதற்கு நான் மனதில் நினைத்ததை நீங்கள் எப்படி படித்தீர்கள் என்றும் நீங்கள் சதமடித்த 2 போட்டிகளில் (தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்துக்கு எதிராக) ஒன்றில் இந்தியா தோற்றது மற்றொன்று சமனில் முடிந்தது என்று சச்சினிடம் சொன்னேன். நல்லவேளையாக அவர் அப்போட்டியில் சதமடிக்கவில்லை. நாங்களும் உலகக்கோப்பை வென்றோம். அதற்கு கடவுளுக்கு நன்றி” என்று கூறினார்.

Advertisement