டேபிள் டாப்பராக தெ.ஆ மிரட்டல் வெற்றி.. 48 வருட உ.கோ வரலாற்றில் ஆஸ்திரேலியா வரலாறு காணாத தோல்வி

AUs vs RSA
- Advertisement -

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 12ஆம் தேதி மதியம் 2 மணிக்கு லக்னோவில் நடைபெற்ற 10வது லீக் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின. அதில் தங்களின் முதல் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு டீ காக் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய நிலையில் மறுபுறம் 108 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த போதிலும் தடுமாற்றமாக செயல்பட்ட கேப்டன் பவுமா 35 ரன்களில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து வந்த டுஷன் 26 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக செயல்பட்ட குவிண்டன் டீ காக் 8 பவுண்டரை 56 உடன் சதமடித்து 109 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

வரலாற்று தோல்வி:
அதே போல மிடில் ஆர்டரில் ஐடன் மார்க்கம் அதிரடியாக 56 (43) ரன்கள் எடுத்தது அவுட்டான நிலையில் ஹென்றிச் கிளாஸின் 29, டேவிட் மில்லர் 17, மார்க்கோ யான்சன் 26 ரன்களில் அவுட்டாகி சென்றனர். இறுதியில் 50 ஓவர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்கா 311/7 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச்களை விட்டு ஃபீல்டிங்கில் சொதப்பிய ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக தலா 2 விக்கெட் வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து 312 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு மிட்சேல் மார்ஷ் 7 டேவிட் வார்னர் 13 என துவக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அடுத்த சில ஓவர்களிலேயே ஸ்டீவ் ஸ்மித் சர்ச்சைக்குரிய எல்பிடபிள்யூ முறையில் 19 ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த ஜோஸ் இங்லீஷ் 5, கிளன் மேக்ஸ்வ்ஸ்ல் 3 ரன்களில் பொறுப்பின்றி அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர். போதாகுறைக்கு மார்கஸ் ஸ்டானிஸ் 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் 70/6 என தடுமாறிய ஆஸ்திரேலியா 150 ரன்கள் தாண்டுமா என்ற கவலை அந்நாட்டு ரசிகர்களிடம் ஏற்பட்டது.

- Advertisement -

அப்போது லபுஸ்ஷேனுடன் சேர்ந்து நங்கூரமாக விளையாடிய மிட்சேல் ஸ்டார்க் 7வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்னர்ஷிப் அமைத்து போராடி 27 ரன்களில் அவுட்டானார். அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் போராடிய லபுசேனும் 46 ரன்களில் அவுட்டானதால் இறுதியில் கேப்டன் கமின்ஸ் 22 ரன்கள் எடுத்த போதிலும் 40.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா 177 ரன்களுக்கு சுருண்டது.

அந்தளவுக்கு பந்து வீச்சில் அனலை தெறிக்க விட்ட தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ரபாடா 3 விக்கெட்டுகளையும் கேசவ் மகாராஜ், மார்கோ ஜான்சன், தப்ரீஸ் சம்ஸி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அதனால் 134 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை சுவைத்த தென்னாப்பிரிக்கா 2 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவு செய்து ரன் ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

இதையும் படிங்க: டேபிள் டாப்பராக தெ.ஆ மிரட்டல் வெற்றி.. 48 வருட உ.கோ வரலாற்றில் ஆஸ்திரேலியா வரலாறு காணாத தோல்வி

மறுபுறம் 2019 உலகக்கோப்பையில் கடைசி 2 போட்டிகளில் தென்னாபிரிக்கா, இங்கிலாந்துக்கு எதிராக தோற்ற ஆஸ்திரேலியா இந்த உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்காவிடம் முதலிரண்டு போட்டிகளில் தோற்றுள்ளது. இதன் வாயிலாக 1975 முதல் தற்போது வரையிலான 48 வருட உலகக்கோப்பை வரலாற்றில் 5 சாம்பியன் பட்டங்களை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் ஆஸ்திரேலியா முதல் முறையாக 4 தொடர் தோல்விகளை கண்டுள்ளது அந்நாட்டு ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்துள்ளது.

Advertisement