பும்ராவின் இந்த புதிய செலிபெரேஷனுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா? – அவரோட ஸ்டைல் தான் இது

Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முக்கியமான 9-ஆவது லீக் ஆட்டமானது நேற்று அக்டோபர் 11-ஆம் தேதி டெல்லி அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்த உலகக் கோப்பை தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

அதோடு புள்ளி பட்டியலில் தற்போதைய நிலவரப்படி இந்திய அணி இரண்டாம் இடத்தினையும் பிடித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்ப்ரீத் பும்ரா 10 ஓவர்கள் வீசி 39 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

- Advertisement -

காயத்தில் இந்து வெளியேறி வந்த பும்ரா சமீப காலமாகவே தான் விளையாடி வரும் அனைத்து போட்டிகளிலும் விக்கெட்டை வீழ்த்தி வருவது ரசிகர்கள் மத்தியில் பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது ஆப்கானிஸ்தான அணியின் துவக்க வீரரான இப்ராஹீம் ஜார்டான் விக்கெட்டை முதல் விக்கெட்டாக பும்ரா வீழ்த்தி இருந்தார். அப்படி அவர் முதல் விக்கெட்டை எடுத்ததுமே தலையில் கை வைத்த படி அவர் விக்கெட்டை கொண்டாடிய விதம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனத்தில் ஈர்த்தது.

- Advertisement -

ஏனெனில் வழக்கமாக பவுலர்கள் விக்கெட் எடுத்தால் ஆக்ரோஷமாக கொண்டாடும் வேளையில் உம்ரா சிரித்தபடியே தலையில் கை வைத்து ஏதோ கூறியபடி அந்த விக்கெட் செலிப்ரேஷனில் ஈடுபட்டார். இந்நிலையில் இப்படி பும்ரா வித்தியாசமாக செலிப்ரேஷனில் ஈடுபடுவதற்கு முன்னோடி யார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அந்த வகையில் :

இதையும் படிங்க : தாக்கூரை வெச்சுகிட்டு பாகிஸ்தானை ஜெயிக்க முடியாது.. அவர கொண்டு வாங்க.. ஆகாஷ் சோப்ரா கோரிக்கை

இங்கிலாந்து அணியின் கால்பந்து வீரரான மார்க்கஸ் ராஷ்போர்டு என்பவர் தான் பிரீமியர் லீக் மான்செஸ்டர் கால்பந்து போட்டிகளில் இதே போன்ற கொண்டாட்டத்தில் ஈடுபடுவார். அவரது கொண்டாட்டத்தையே தற்போது பும்ரா கடைப்பிடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த செலிப்ரேஷனுக்கு காரணம் யாதெனில் : என்னிடம் மூளை இருக்கிறது அதனை நான் உங்களுக்கு பயன்படுத்தி காட்டுகிறேன் என்பது மட்டும்தான் அர்த்தம்.

Advertisement