தாக்கூரை வெச்சுகிட்டு பாகிஸ்தானை ஜெயிக்க முடியாது.. அவர கொண்டு வாங்க.. ஆகாஷ் சோப்ரா கோரிக்கை

Aakash Chopra
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய 3வது போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதுவரை நடைபெற்ற முதலிரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை தோற்கடித்த இந்தியா புள்ளி பட்டியலில் ஏற்கனவே பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி 2வது இடத்திற்கு முன்னேறி அசத்தி வருகிறது.

அதை தொடர்ந்து அக்டோபர் 14ஆம் தேதி உலகின் மிகப்பெரிய அகமதாபாத் மைதானத்தில் பாகிஸ்தானையும் தோற்கடித்து காலம் காலமாக பரம எதிரியிடம் தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை இந்தியா மீண்டும் காப்பாற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. முன்னதாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டு சர்துள் தாக்கூர் சேர்க்கப்பட்டது பலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

- Advertisement -

தாக்கூர் வேண்டாம்:
ஏனெனில் பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கக்கூடிய அவர் பேட்டிங்கில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவராக இல்லை. அதன் காரணமாக முகமது ஷமி விளையாடியிருக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் ஏற்கனவே விமர்சித்திருந்தார். இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற கண்டிப்பாக சர்துல் தாக்கூருக்கு பதிலாக ஷமி விளையாட வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா கேட்டுக் கொண்டுள்ளார்.

அதற்கான காரணத்தை விளக்கி தம்முடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “தாக்கூர் தாம் பேட்டிங் செய்யும் இடத்தில் எதிர்கொள்ளும் பந்துக்கு சமமான ரன்களை மட்டுமே எடுக்கக் கூடியவர். குறிப்பாக 20 பந்துகளில் 45 ரன்கள் தேவைப்பட்டால் அதை அவர் எடுக்கக்கூடியவர் கிடையாது. அவர் எப்போதும் அவ்வாறு விளையாடுவதில்லை. இருப்பினும் பேட்டிங்கில் 8வது இடம் வரை ஆழம் தேவைப்படுவதாக அணி விரும்புவதாலேயே அவர் வாய்ப்பு பெற்றுள்ளார்”

- Advertisement -

“ஆனால் அந்த இடத்தில் ஷமி இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். மேலும் தாக்கூர் அல்லது ஷமி ஆகியோரில் யார் விளையாட வேண்டும் என்ற விவாதங்கள் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. அதைப்பற்றி நானும் விவாதித்து நான் ஷமி விளையாடுவதை விரும்புகிறேன். ஆனால் அணி நிர்வாகம் 8வது இடத்தில் ஒரு பேட்ஸ்மேன் தேவை என்பதற்காக தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பார்கள்”

இதையும் படிங்க: கே.எல் ராகுலை பாத்து கத்துக்கோங்க. முகமது ரிஸ்வானுக்கு அறிவுரை கூறிய – சோயிப் அக்தர்

“இருப்பினும் பொதுவாகவே 8வது இடத்தில் விளையாடுபவருக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்காது. ஒருவேளை ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அந்த வாய்ப்பு கிடைத்திருந்தால் தொடர்ந்து அவரை நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால் என்னை பொறுத்த வரை அந்த இடத்தில் விளையாடுபவருக்கு பெரும்பாலும் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காது. எனவே பாகிஸ்தானுக்கு எதிராக ஷமி விளையாட வேண்டும் என்று நான் கருதுகிறேன்” என கூறினார்.

Advertisement