கே.எல் ராகுலை பாத்து கத்துக்கோங்க. முகமது ரிஸ்வானுக்கு அறிவுரை கூறிய – சோயிப் அக்தர்

Akhtar
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே ஒரு வெற்றியை பெற்றிருந்த பாகிஸ்தான் அணி தங்களது இரண்டாவது போட்டியில் இலங்கை அணியை எதிர்த்து ராஜீவ்காந்தி கிரிக்கெட் மைதானத்தில் விளையாடியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 345 ரன்கள் குவித்தது.

இருந்தாலும் அடுத்ததாக விளையாடிய பாகிஸ்தான அணி அப்துல்லா ஷபிக் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோரது மிகச்சிறப்பான சதம் காரணமாக அந்த போட்டியில் வெற்றி பெற்று அசத்தியது. மேலும் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் சேசிங் செய்த சாதனையுடன் அந்த வெற்றியை பதிவு செய்திருந்தது.

- Advertisement -

இந்த போட்டியின் போது முகமது ரிஸ்வான் இறுதிவரை ஆட்டமிழக்காமல் தங்களது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற வேளையில் போட்டியின் போது அவ்வப்போது தசைப்பிடிப்பு காரணமாக அவர் அவதிப்பட்டதையும் பார்க்க முடிந்தது. அதோடு போட்டி முடிந்து தான் சில நேரங்களில் வலியால் துடித்ததாகவும், சில நேரங்களில் நடித்ததாகவும் முகமது ரிஸ்வான் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்படி 50 ஓவர் போட்டியில் விளையாடும் போது விக்கெட் கீப்பராக முதலில் 50 ஓவர்களில் முழுவதுமாக கீப்பிங் செய்துவிட்டு பேட்டிங் செய்வது கஷ்டம் என்றாலும் அதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து கே.எல் ராகுலை பார்த்து முகமது ரிஸ்வான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : ரிஸ்வான் அவ்வப்போது தசை பிடிப்பால் அவதிப்பட்டதை நாம் காண முடிந்தது. இது போன்ற ஒருநாள் போட்டிகளில் ஒரு முழுமையான அணி விளையாட வேண்டும் என்பதை நான் உணர்ந்து கொள்கிறேன். அதே வேளையில் 50 ஓவர் முழுவதுமாக பேட்டிங் செய்து விட்டு ஒரு செஞ்சுரி அடிப்பது எவ்வளவு உடல் களைப்பை தரும் என்பது எனக்கு தெரியும். ஆனாலும் சென்னை மைதானத்தில் அவ்வளவு சூட்டுக்கு மத்தியிலும் இந்திய வீரர் கே.எல் ராகுல் 50 ஓவர் முழுவதுமாக கீப்பிங் செய்தது மட்டுமின்றி கிட்டத்தட்ட சதம் அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

இதையும் படிங்க : CWC 2023 : மிராக்கிள் நிகழ்ந்து.. பாகிஸ்தானை தனது கோட்டையில் அடிக்க வருவாரா கில்.. வெளியான முக்கிய அப்டேட்

அவரைப் பார்த்து எவ்வாறு அந்த சூழலை கையாள வேண்டும் என்பதை ரிஸ்வான் கற்றுக்கொள்ள வேண்டும் என சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில் : ரிஸ்வான் பாகிஸ்தான் அணியை தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இரண்டாவது பாதியில் அவரது இன்னிங்ஸ் மிகவும் முக்கியமான ஒன்றாக அமைந்தது. அவர் அந்த போட்டியில் 70 ரன்களை தாண்டி சதத்தை நெருங்கி விளையாடிய சூழல் எனக்கு மிகவும் பிடித்திருந்ததாக சோயிப் அக்தர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement