CWC 2023 : மிராக்கிள் நிகழ்ந்து.. பாகிஸ்தானை தனது கோட்டையில் அடிக்க வருவாரா கில்.. வெளியான முக்கிய அப்டேட்

Shubaman Gill Practice
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்று 2011 போல சரித்திரம் படைக்கும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. அதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா டெல்லியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 2வது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதை தொடர்ந்து அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் இந்தியா தன்னுடைய 3வது போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. முன்னதாக இத்தொடரில் சிறப்பான ஃபார்மில் இருக்கும் இளம் வீரர் சுப்மன் கில் சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் காய்ச்சல் காரணமாக பங்கேற்காதது இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்தது.

- Advertisement -

கோட்டைக்கு வருவாரா:
மேலும் சென்னையில் உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது போட்டியிலும் பங்கேற்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அத்துடன் அவருடைய உடல்நிலை இன்னும் சரியாக இருந்தால் பாகிஸ்தானுக்கு எதிரான 3வது போட்டியில் விளையாடுவாரா என்பதும் சந்தேகமாகவே இருந்து வருகிறது.

ஏனெனில் அவர் சந்தித்த காய்ச்சலிலிருந்து பொதுவாக ஒரு நபர் முழுமையாக குணமடைவதற்கு 10 முதல் 12 நாட்கள் தேவைப்படும் என்று செய்திகள் வெளியாகின. அதனால் சென்னையிலேயே தொடர்ந்து சிகிச்சைகளை எடுத்து வந்த அவர் 2வது போட்டி நடைபெற்ற டெல்லிக்கு இந்திய அணியினருடன் பயணிக்கவில்லை. இந்நிலையில் அக்டோபர் 11ஆம் தேதி சென்னையிலிருந்து சிகிச்சைகளை முடித்துக் கொண்டு சுப்மன் கில் அகமதாபாத் நகருக்கு வந்து இந்திய அணியுடன் இணைந்துள்ளார்.

- Advertisement -

அத்துடன் ஒரு வாரமாக மீண்டும் தம்முடைய ஃபார்மை மீட்டெடுப்பதற்காக அவர் அக்டோபர் 12ஆம் தேதி மாலை நடைபெற்ற வலைப்பயிற்சியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேட்டிங் செய்தார் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் செய்தியாக அமைந்துள்ளது. இதன் காரணமாக 3வது போட்டியில் விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: AUS vs RSA : உங்களுக்கு என்னாச்சு.. ஆஸி சொதப்பலை பேனர் வைத்த ரசிகர்கள்.. டீ காக் அதிரடியால் தெ.ஆ மிரட்டல்

சொல்லப்போனால் தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் மற்ற மைதானங்களை காட்டிலும் அகமதாபாத் மைதானத்தில் 10 டி20 போட்டிகளில் 3 சதங்கள் உட்பட 698 ரன்களை 87.25 அபாரமான சராசரியில் எடுத்துள்ளார். குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிராக இங்கு தன்னுடைய முதல் சர்வதேச டி20 சதத்தை அடித்த அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2023 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் சதத்தையும் அடித்தார். எனவே தன்னுடைய கோட்டையில் பாகிஸ்தானை அடித்து நொறுக்க மெடிக்கல் மிராக்கிள் நிகழ்ந்து அவர் இப்போட்டியில் விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Advertisement