AUS vs RSA : உங்களுக்கு என்னாச்சு.. ஆஸி சொதப்பலை பேனர் வைத்த ரசிகர்கள்.. டீ காக் அதிரடியால் தெ.ஆ மிரட்டல்

Aus Fielding.jpeg
- Advertisement -

இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 12ஆம் தேதி மதியம் 2 மணிக்கு லக்னோவில் நடைபெற்ற 10வது லீக் போட்டியில் வெற்றிகரமான ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின. தங்களின் முதல் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா இப்போட்டியில் வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்புடன் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு குயிண்டன் டீ காக் மீண்டும் சிறப்பாக விளையாடிய நிலையில் எதிர்ப்புறம் 108 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் தடுமாற்றமாகவே செயல்பட்ட கேப்டன் தெம்பா பவுமா 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த வேன் டெர் டுஷன் 26 ரன்களில் அவுட்டாகி சென்ற போதிலும் மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக விளையாடி டீ காக் 8 பவுண்டரி 5 சிக்சருடன் சதமடித்து 109 (106) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

ஆஸியின் சொதப்பல்:
குறிப்பாக கடந்த போட்டியில் இலங்கையையும் வெளுத்து வாங்கிய இதையும் சேர்த்து அடுத்தடுத்த சதங்கள் அடித்து தென்னாப்பிரிக்காவுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் மீண்டும் அதிரடியாக விளையாடிய ஐடன் மார்க்கம் தம்முடைய பங்கிற்கு 7 பவுண்டரி 1 சிக்சருடன் 56 (44) ரன்களும் ஹென்றிச் கிளாசின் 29 (27) ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.

இருப்பினும் அடுத்ததாக வந்த டேவிட் மில்லரை 17 (13) ரன்களில் அவுட்டாக்கிய ஸ்டார்க் அடுத்து வந்து அதிரடியாக விளையாடிய மார்க்கோ யான்சனையும் 26 (22) ரன்களில் அவுட்டாக்கினார். இறுதியில் 50 ஓவர்களில் தென்னாபிரிக்கா சிறப்பாகவே செயல்பட்டு 311/7 ரன்கள் எடுத்து அசத்திய நிலையில் ஆஸ்திரேலியா சார்பில் கிளன் மேக்ஸ்வெல் மற்றும் மிட்சேல் ஸ்டார்க் ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர்.

- Advertisement -

அந்த வகையில் 43 ஓவரில் 263/3 நிலையில் இருந்த தென்னாபிரிக்கா 330 ரன்கள் தாண்டாத அளவுக்கு டெத் ஓவர்களில் ஆஸ்திரேலியாவின் பவுலின் சிறப்பாக இருந்தது என்றே சொல்லலாம். ஆனால் இந்த இன்னிங்ஸில் ஆரம்பம் முதலே அந்த அணியின் ஃபீல்டிங் படுமோசமாக இருந்தது பார்த்த ரசிகர்களையே கடுப்பாக வைத்தது. ஏனெனில் ஆஸ்திரேலியர்கள் என்றாலே கடினமான கேட்ச்களையும் அசால்டாக பிடிக்கும் திறமை கொண்டவர்கள் என்பதை அனைவரும் அறிவோம்.

இதையும் படிங்க: AUS vs RSA : உங்களுக்கு என்னாச்சு.. ஆஸி சொதப்பலை பேனர் வைத்த ரசிகர்கள்.. டீ காக் அதிரடியால் தெ.ஆ மிரட்டல்

ஆனால் அதற்கு நேர்மாறாக இந்த போட்டியில் 6 கேட்ச்களை அவர்கள் தவற விட்டதை மைதானத்தில் இருந்து பார்த்து ஏமாற்றமடைந்த ரசிகர்கள் பேனரில் எழுதி வைத்து ஆஸ்திரேலியாவுக்கு என்ன ஆச்சு? என்பது போல் சுட்டி கட்டினார்கள். முன்னதாக சென்னையில் நடைபெற்ற முதல் பகுதியில் 2/3 இந்தியா சரிந்து தடுமாறிய போது விராட் கோலி கொடுத்த கேட்ச்சை மார்ஷ் தவற விட்டது ஆஸ்திரேலியாவுக்கு தோல்வியை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement