IPL 2023 : அந்த ஜாம்பவான் பயிற்சியில் சாதிக்காத நீங்க எப்டி தான் முன்னேறுவிங்களோ – இளம் இந்திய வீரரை விமர்சித்த சேவாக்

virender sehwag
- Advertisement -

இறுதி கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 2016க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆரம்பம் முதலே சுமாராக செயல்பட்டு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து லீக் சுற்றுடன் வெளியேறியது. அதை விட அந்த அணியில் நம்பிக்கை நட்சத்திர இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் பெரும்பாலான போட்டிகளில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டது பல சர்ச்சைகள் ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அவர் கடந்த 2021 சீசனில் அறிமுகமாகி தொடர்ந்து 145 கி.மீ வேகத்தில் பந்து வீசி அப்போதைய கேப்டன் விராட் கோலி உட்பட பலரது பாராட்டுகளை அள்ளினார்.

அதனால் கடந்த சீசனில் தக்க வைக்கப்பட்டு முழுமையான வாய்ப்பு பெற்ற அவர் 22 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியதால் இந்தியாவுக்காக அறிமுகமானார். ஆனால் ஆரம்பம் முதலே வேகத்தை மட்டும் நம்பி பந்து வீசி ரன்களை வாரி வழங்கியதால் 2 போட்டிகளுடன் கழற்றி விடப்பட்ட அவர் உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்று சில யுக்திகளை கற்று சமீபத்திய இலங்கை மற்றும் நியூசிலாந்து தொடரில் நல்ல லைன், லென்த் போன்ற விவேகத்தைப் பின்பற்றி குறைந்த ரன்களை கொடுத்து பெரிய விக்கெட்டுகளை எடுத்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அதிவேகப் பந்தை வீசிய இந்தியராக சாதனையும் படைத்தார்.

- Advertisement -

சேவாக் விளாசல்:
அதனால் நல்ல பயிற்சியும் ஆதரவும் கொடுத்தால் அசத்துவேன் என்று நிரூபித்த அவர் இந்த சீசனில் ஆரம்பகட்ட போட்டிகளில் ரன்களை வாரி வழங்கியதால் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். அப்போது டேல் ஸ்டைன் போன்ற ஜாம்பவான் பயிற்சியாளராக இருந்தும் அவரை சரியாகப் பயன்படுத்தாமல் ஹைதராபாத் தவறு செய்து விட்டதாக இர்பான் பதான், ஜாகிர் கான் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். போதாக்குறைக்கு “துருப்பச்சீட்டு வீரராக இருந்தும் உம்ரான் மாலிக் ஏன் 11 பேர் அணியில் விளையாடவில்லை” என்பது தமக்கு தெரியவில்லை என கேப்டன் மார்க்ரம் தெரிவித்ததார். அதனால் ஹைதராபாத் அவரை சரியாக பயன்படுத்தவில்லை என்று மீண்டும் விமர்சனங்கள் எழுந்தன.

அதன் காரணமாக மும்பைக்கு எதிரான போட்டியில் மீண்டும் வாய்ப்பு பெற்ற அவர் கொஞ்சமும் முன்னேறாமல் 3 ஓவரில் 41 ரன்களை வாரி வழங்கினார். இந்நிலையில் கடந்த வருடம் ரன்களை வாரி வழங்கிய உம்ரான் மாலிக் இந்த வருடம் டேல் ஸ்டைன் போன்ற ஜாம்பவான் பயிற்சியில் கூட முன்னேறாமல் எந்த லென்த்தில் வீச வேண்டும் என்று தெரியாமல் தடுமாறுவதாக முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார். அப்படி ஜாம்பவான் பயிற்சியில் முன்னேறாத நீங்கள் எப்படி தான் எப்போது தான் முன்னேறுவீர்கள் என்று உம்ரான் மாளிகை விளாசும் அவர் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“உம்ரான் மாலிக்கிடம் இருக்கும் பிரச்சனை என்னவெனில் அவர் தொடர்ந்து தன்னுடைய லென்த்தை மாற்றுகிறார். அவருக்கு இன்னும் அனுபவம் கிடைக்கவில்லை. குறிப்பாக டேல் ஸ்டைன் மேற்பார்வையில் அவர் நீண்ட காலம் பயிற்சி எடுத்துள்ளார். ஆனாலும் எந்த லென்த்தில் வீச வேண்டுமென்ற ஐடியா இன்னும் அவருக்கு வரவில்லை. டேல் ஸ்டைன் போன்ற மகத்தானவரிடம் நீண்ட காலம் பயிற்சிகளை எடுத்தும் அவர் கடந்த வருடம் செய்த அதே தவறை மீண்டும் இம்முறை செய்துள்ளார்” என்று கூறினார்.

முன்னதாக டேவிட் வார்னர் போல ஹைதராபாத் அணி நிர்வாகத்துடன் ஏதோ ஒரு காரணத்துக்காக ஏதோ ஒரு சூழ்நிலையில் உம்ரான் மாலிக் சண்டை போட்டிருப்பார் என்று தெரிவித்திருந்த சேவாக் அதன் காரணத்தாலேயே அவரை அந்த அணி நிர்வாகம் பெஞ்சில் அமர வைத்ததாக கூறினார்.

இதையும் படிங்க:IPL 2023 : எல்லாரும் என்னோட டி20 கேரியர் முடிஞ்சுன்னு சொல்றாங்க ஆனா – விமர்சனங்களுக்கு விராட் கோலி கொடுத்த பதிலடி என்ன?

அத்துடன் கிடைக்கும் வாய்ப்பில் அசத்தாத நீங்கள் வாய்ப்புக்காக காத்திருந்து அடுத்த முறை செயலால் பதிலடி கொடுக்க வேண்டுமே தவிர சண்டையில் ஈடுபடக் கூடாது என்றும் தெரிவித்த சேவாக் தற்போது டேல் ஸ்டைன் போன்ற ஜாம்பவான் பயிற்சியிலும் முன்னேறாமல் இருக்கும் உம்ரான் மாலிக்கை மீண்டும் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement