IPL 2023 : எல்லாரும் என்னோட டி20 கேரியர் முடிஞ்சுன்னு சொல்றாங்க ஆனா – விமர்சனங்களுக்கு விராட் கோலி கொடுத்த பதிலடி என்ன?

Kohli 1
- Advertisement -

உச்சகட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் 2023 டி20 தொடரின் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று முடிவுக்கு வந்துள்ளன. அதில் லட்சிய முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மீண்டும் முக்கிய தருணங்களில் சுமாராக செயல்பட்டு வரலாற்றில் 16வது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. குறிப்பாக ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து கடந்த வருடம் தடுமாறிய விராட் கோலி இந்த வருடம் மிகச் சிறப்பாக செயல்பட்டு 639 ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடியும் மீண்டும் ஏமாற்றத்தை சந்தித்ததால் மனமுடைந்து போனார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக குஜராத்துக்கு எதிராக சொந்த ஊரில் நடைபெற்ற கடைசி போட்டியிலும் இதர வீரர்கள் கைகொடுக்க தவறிய போது தனி ஒருவனாக போராடிய அவர் சதமடித்து 101* (61) ரன்கள் விளாசினார். ஆனாலும் பந்து வீச்சில் சிராஜ் தவிர்த்து ஏனைய பவுலர்கள் ரன்களை வாரி வழங்கியதால் தோற்ற பெங்களூரு வழக்கம் போல எதிரணி ரசிகர்களின் கிண்டல்களை சந்தித்துள்ளது. முன்னதாக ஐபிஎல் போலவே சர்வதேச கிரிக்கெட்டில் 25000+ ரன்களையும் 75 சதங்களையும் விளாசி கடந்த 10 வருடங்களாக 3 வகையான இந்திய அணியிலும் ஏராளமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் அவர் 2019க்குப்பின் சதமடிக்காமல் தடுமாறினார்.

கேரியர் முடிந்ததா:
அப்போது ஏராளமான முன்னாள் வீரர்கள் இந்திய அணியிலிருந்து நீக்குமாறு போர்க்கொடி உயர்த்திய நிலையில் எதற்கும் அசராமல் தொடர்ந்து போராடிய அவர் கடந்த ஆசிய கோப்பையில் அந்த விமர்சனங்களை அடித்து நொறுக்கி கடந்த 8 மாதங்களுக்குள் டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சதமடித்து முழுமையான ஃபார்முக்கு திரும்பி தன்னை சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளார். இருப்பினும் கடந்த டி20 உலக கோப்பையில் பெரும்பாலான சீனியர்கள் சுமாராக செயல்பட்டதால் அவர்களை கழற்றி விட்டு 2024 டி20 உலக கோப்பைக்கு முன் ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பளித்து இளம் அணியை உருவாக்கும் வேலையை பிசிசிஐ துவங்கியுள்ளது.

Virat Kohli Sanjay Manjrekar

குறிப்பாக அதே உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸ் விளையாடி 82* ரன்கள் விளாசி வெற்றி பெற வைத்த விராட் கோலியையும் சுமாராக செயல்படும் ராகுல், ரோகித் சர்மா போன்ற வீரர்களுடன் சேர்த்து கழற்றி விட முடிவெடுத்துள்ளதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. அது போக வருங்காலத்தை கருத்தில் கொண்டு விராட் கோலிக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் மட்டும் வாய்ப்பளித்து விட்டு டி20 அணியில் ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்குமாறு சில முன்னாள் வீரர்கள் பேசி வருகின்றனர்.

- Advertisement -

மேலும் அடித்து நொறுக்க வேண்டிய டி20 கிரிக்கெட்டில் கிளாஸ் பேட்டிங்கை வெளிப்படுத்தி குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் சுயநலத்துடன் விளையாடுவதாக சமீபத்தில் அவரை மைக்கேல் வாகன், சஞ்சய் மஞ்ரேக்கர், சைமன் டௌல் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். ஆனால் அவர்கள் அனைவருக்கும் தொடர்ந்து செயல்படுகளால் பதிலடி கொடுத்து வரும் விராட் கோலி இப்போதும் நிறைய இளம் வீரர்களை விட அனுபவத்தால் அட்டகாசமாக செயல்படுகிறார் என்பதற்கு கடந்த 2 போட்டியில் அடித்த சதங்களே சாட்சியாகும்.

Kohli

இந்நிலையில் அனைவரும் தம்முடைய டி20 கேரியர் மங்குவதாகவும் முடிந்து விட்டதாகவும் நினைத்தாலும் தாம் மிகுந்த மகிழ்ச்சியுடன் விளையாடுவதாக விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் சிறப்பாக உணர்கிறேன். இங்கே நிறைய பேர் என்னுடைய டி20 கிரிக்கெட் குறைந்து வருவதாக நினைக்கின்றனர். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. இப்போது தான் நான் என்னுடைய சிறந்த டி20 கிரிக்கெட்டை விளையாடுகிறேன்”

இதையும் படிங்க:IPL 2023 : எல்லாரும் என்னோட டி20 கேரியர் முடிஞ்சுன்னு சொல்றாங்க ஆனா – விமர்சனங்களுக்கு விராட் கோலி கொடுத்த பதிலடி என்ன?

“சொல்லப்போனால் இப்போது தான் நான் மகிழ்ச்சியுடன் விளையாடுகிறேன். நான் இடைவெளிகளை பார்த்து நிறைய பவுண்டரிகளை அடித்து கடைசி நேரத்தில் சூழ்நிலை அனுமதித்தால் பெரிய ஷாட்டுகளை அடிக்கிறேன். இப்படித்தான் நான் டி20 கிரிக்கெட்டை விளையாடுகிறேன்” என்று கூறினார். அப்படி நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் அடுத்ததாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவுக்காக விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement