IPL 2023 : எல்லா நேரமும் விராட் – டு பிளேஸிஸ் காப்பாத்த மாட்டாங்க, நீங்க என்ன செய்றீங்க? 2 நட்சத்திர ஆர்சிபி வீரர்களை விளாசும் சேவாக்

sehwag
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் தங்களது லட்சிய முதல் கோப்பையை வென்று சரித்திரம் படைக்கும் முனைப்புடன் 16வது முறையாக களமிறங்கியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதல் போட்டியில் வெற்றிகரமான மும்பையை அசால்டாக தோற்கடித்து இத்தொடரை வெற்றிகரமாக துவங்கியது. ஆனால் காலம் காலமாக முக்கிய நேரங்களில் சொதப்பி வெற்றியை தாரை வார்ப்பதை வழக்கமாக வைத்துள்ள அந்த அணி கொல்கத்தாவுக்கு எதிரான 2வது போட்டியில் 81 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தாவை டேவிட் வில்லி மற்றும் கரண் சர்மா ஆகியோர் சிறப்பாக பந்து வீசி ஒரு கட்டத்தில் 89/5 என கட்டுக்குள் வைத்திருந்தனர்.

ஆனால் கடைசி 8 ஓவரில் எப்போதாவது மட்டுமே அடிக்கக்கூடிய சர்துல் தாக்கூர் சரமாரியாக விளாசி 68 (29) ரன்களும் – ரிங்கு சிங் 46 (33) குவித்து வெற்றியை பறிக்கும் அளவுக்கு மீண்டும் டெத் ஓவர்களில் சொதப்பிய பெங்களூரு பாதி வெற்றியை நழுவ விட்டது. அதை விட ஷார்துல் தாகூர் போன்ற பகுதி நேர பேட்ஸ்மேன் வெளுத்து வாங்கிய அதே பிட்ச்சில் விராட் கோலி 21 (18) கேப்டன் டு பிளேஸிஸ் 23 (12) என தொடக்க வீரர்கள் 44 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியாக ரன்களை குவிக்க முயற்சித்து கிட்டத்தட்ட தங்களது வேலையை செய்து ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

சேவாக் விமர்சனம்:
ஆனால் அடுத்து வந்த கிளன் மேக்ஸ்வெல் 5 (7) ரன்களில் வருண் சக்கரவர்த்தி சுழலில் கிளீன் போல்டான நிலையில் கடந்த சீசனில் அதிரடியாக விளையாடி மிகச்சிறந்த பினிஷராக செயல்பட்டதால் இம்முறை காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் அறிமுக போட்டியில் அசத்திய சூயஸ் சர்மாவின் சுழலில் 9 (8) ரன்களில் சிக்கினார். மொத்தத்தில் பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் முக்கிய நேரத்தில் சொதப்பி வெற்றியை தாரை வார்த்த பெங்களூரு இப்போது தான் உண்மையான ஃபார்முக்கு திரும்பியுள்ளதாக ஏராளமான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வழக்கம் போல கலாய்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் முதல் போட்டியில் 148 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றியது போல் அனைத்து போட்டிகளிலும் விராட் கோலி – டு பிளேஸிஸ் ஆகியோர் வெற்றி பெற வைக்க மாட்டார்கள் என்று தெரிவிக்கும் முன்னாள் வீரர் வெற்றிக்கு சேவாக் கிளன் மேக்ஸ்வெல் – தினேஷ் கார்த்திக் ஆகியோர் மிடில் ஆடரில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று விமர்சித்துள்ளார். மேலும் இதுபோன்ற மோசமான தோல்வி ஆரம்பத்திலேயே கிடைத்துள்ளது நல்லது தான் என்று தெரிவிக்கும் அவர் இதிலிருந்து பெங்களூரு கம்பேக் கொடுக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் எப்போதும் இருவரை மட்டும் நம்பியிருக்கக் கூடாது. குறிப்பாக விராட் கோலி – டு பிளேஸிஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடினால் தான் பெங்களூரு வெல்கிறது. இந்த நிலைமை இருக்கக் கூடாது. கிளன் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் ஆகியோர் பங்காற்ற வேண்டும். இதர வீரர்களும் கணிசமான ரன்களை எடுக்க வேண்டும். குறிப்பாக இம்பேக்ட் வீரராக வந்த அனுஜ் ராவத் சிறப்பாக செயல்பட வேண்டும். அவருக்கு பதிலாக இம்பேக்ட் வீரர் இடத்தில் வேறு சிறந்தவர் இருக்கிறாரா என்று ஆர்சிபி பார்க்க வேண்டும்”

“கடந்த சீசனில் நிறைய ரன்கள் அடித்து சதமடித்த ரஜத் படிதார் காயத்தால் விலகியுள்ளது பெங்களூருக்கு பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது. ஆர்சிபி சந்தித்த இது போன்ற போட்டிகள் இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் சந்திக்க நேரிடும். குறிப்பாக பேட்டிங் சரிவுகள் ஒவ்வொரு நாளும் நடைபெறுவது தான் ஐபிஎல் தொடரின் வரலாறாகும். சிலருக்கு அது தொடரின் ஆரம்பத்திலும் சிலருக்கு கடைசியிலும் நடைபெறும். அந்த வகையில் பெங்களூருவுக்கு இப்போதே அது நடைபெற்றுள்ளது நல்லதாகும்”

இதையும் படிங்க:வீடியோ : 91/4 என சரிந்த அணியை கேப்டனாக காப்பாற்றிய புஜாரா – ஃபைனலுக்கு தயாராகும் வேளையில் கேரியரை காப்பாற்றியதற்கு நன்றி

“ஒருவேளை 8 – 9 போட்டிகளுக்குப் பின் இது போன்ற சரிவு ஏற்பட்டிருந்தால் அது புள்ளி பட்டியலின் நெட் ரன் ரேட்டில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கும். அதனால் வேறு வழியின்றி எஞ்சிய போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள். ஆனால் தற்போது அவர்களால் இதிலிருந்து கம்பேக் கொடுக்க முடியும்” என்று கூறினார்.

Advertisement