IPL 2023 : அந்த சின்ன பையன் மாதிரி அடிங்க இல்லைனா ஐபிஎல் விளையாட வராதீங்க – வார்னரை ஓப்பனாக விமர்சித்த சேவாக்

- Advertisement -

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வரும் நிலையில் தங்களது முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ஆரம்பத்திலேயே ரிசப் பண்ட் காயத்தால் வெளியேறியது பின்னடைவாக அமைந்தது. அந்த நிலையில் 2016இல் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக சாம்பியன் பட்டம் வென்று கொடுத்து ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வெளிநாட்டு பேட்ஸ்மேனாக சாதனை படைத்த ஆஸ்திரேலியாவின் நட்சத்திரம் டேவிட் வார்னர் டெல்லியை வழி நடத்தி வருகிறார். ஆனால் அவரது தலைமையில் இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளிலும் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த டெல்லி புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் திண்டாடி வருகிறது.

அந்த அணிக்கு இந்த 3 போட்டிகளிலும் பேட்டிங் துறையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா, ரோவ்மன் போவல், ரிலீ ரோசவ், சர்ப்ராஸ் கான், அக்சர் படேல் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் நிதானமாக விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட டேவிட் வார்னர் 56 (48), 37 (32), 65 (55) என 3 போட்டிகளிலும் பெரிய ரன்களை எடுத்து வெற்றிக்கு போராடி ஆட்டமிழந்தார்.

- Advertisement -

சேவாக் விளாசல்:
குறிப்பாக 158 ரன்களை 117.03 என்ற சுமாரான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து ஆரஞ்சு தொப்பி பட்டியலில் 2வது இடத்தில் உள்ள அவரால் இதர பேட்ஸ்மேன்கள் கைகொடுக்க தவறும் போது எப்படி அவரால் அதிரடியாக விளையாடி வெற்றி பெற வைக்க முடியும் என்று சில ரசிகர்கள் கூறுகின்றனர். ஆனால் உண்மை என்னவெனில் அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் 3 போட்டிகளிலுமே வார்னர் மெதுவாக விளையாடிய காரணத்தாலேயே எதிர்புறம் அழுத்தம் ஏற்பட்டு இதர பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட முயற்சித்து சொற்ப ரன்களில் அவுட்டாக்கி சென்றனர்.

மேலும் 6000 ரன்களை வேகமாக குவித்த அனுபவம் நிறைந்த அவர் ஆரம்பத்தில் மெதுவாக விளையாடினாலும் 3 போட்டிகளிலும் நன்கு செட்டிலாக பின் கடைசி வரை அதிரடியை துவக்காமல் தடவலாக செயல்பட்டவதால் அக்சர் படேல் போன்ற லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு அவுட்டானார்கள். அதனால் இந்த ஹாட்ரிக் தோல்விகளுக்கு நீங்கள் தான் பொறுப்பு என்று விமர்சிக்கும் முன்னாள் வீரர் விரேந்திர் சேவாக் அதிரடியாக இல்லாமல் இதே போல் மெதுவாக பேட்டிங் செய்தால் தயவு செய்து ஐபிஎல் தொடரில் விளையாடாதீர்கள் என்று வெளிப்படையாக கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

மேலும் 3வது தோல்வியை கொடுத்த ராஜஸ்தான் அணிக்காக 30 பந்தில் 61 ரன்களை விளாசிய இளம் இந்திய வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வாலை போல் அதிரடியாக விளையாடுங்கள் இல்லையேல் சென்று விடுங்கள் என்று நேரடியாக விமர்சித்துள்ள சேவாக் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “இது புரியும் படியாக ஆங்கிலத்தில் சொல்ல வேண்டிய நேரமென்று நினைக்கிறேன். அப்போது தான் டேவிட் வார்னர் இதைக் கேட்டு மனம் உடையும் வகையில் உணர்வார். டேவிட் நீங்கள் இதை கேட்டால் தயவு செய்து சிறப்பாக விளையாடுங்கள்”

“25 பந்தில் 50 ரன்கள் எடுங்கள். குறிப்பாக 25 பந்தில் பெரிய ரன்களை குவித்த ஜெய்ஸ்வாலை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள். ஒருவேளை அதை உங்களால் செய்ய முடியாவிட்டால் ஐபிஎல் தொடரில் விளையாட வராதீர்கள். என்னைப் பொறுத்த வரை டேவிட் வார்னர் 55 பந்துகளில் 60 ரன்கள் எடுப்பதை விட அதிரடியாக 30 ரன்கள் எடுத்து அவுட்டாவது சிறந்ததாகும். மேலும் ரோவ்மன் போவல் இசான், போரெல் போன்ற வீரர்கள் முன்கூட்டியே களமிறங்கியிருக்க வேண்டும். ஏனெனில் அதிரடி வீரர்களான அவர்களுக்கு சந்திக்க தேவையான பந்துகள் கிடைக்கவில்லை”

இதையும் படிங்க:IPL 2023 : சேவாக் மாதிரி மிரட்டுவாருன்னு பாத்தா முதல் வீரராக மோசமான ஐபிஎல் சாதனை படைத்த பிரிதிவி ஷா – ரசிகர்கள் அதிருப்தி

“நீங்கள் 8 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து அவுட்டானால் பரவாயில்லை. ஆனால் கேப்டனாக இருக்கும் உங்களிடம் அனுபவமும் உள்ளது. குறிப்பாக அதிவேகமாக 6000 ஐபிஎல் ரன்கள் எடுத்துள்ளதாக புள்ளிவிவரம் கூறும் வார்னர் இவ்வாறு விளையாடுவதை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. ஒருவேளை அவர் கேப்டனாக இல்லாமல் இருந்திருந்தால் பாதியிலேயே ரிட்டயர்டு ஹர்ட்டாகியிருக்க வேண்டும். ஒருவேளை அவரது இடத்தில் ஒரு இளம் இந்திய வீரர் விளையாடினால் அவரது கேரியர் முடிந்திருக்கும். எனவே இந்த தோல்விக்கு வார்னர் தான் பொறுப்பேற்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement