IPL 2023 : சேவாக் மாதிரி மிரட்டுவாருன்னு பாத்தா முதல் வீரராக மோசமான ஐபிஎல் சாதனை படைத்த பிரிதிவி ஷா – ரசிகர்கள் அதிருப்தி

- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு பெறுவதற்காக போராடும் பல வீரர்களுக்கு மத்தியில் டெல்லியை சேர்ந்த இளம் வீரர் பிரிதிவி ஷா சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்துவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஏனெனில் 2018 அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக வென்று சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து அதிரடியாக விளையாடும் தொடக்க வீரராக தன்னை அடையாளப்படுத்தினார். அதனால் சச்சின், சேவாக், லாரா ஆகியோர் கலந்த கலவை என அப்போதிய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டிய நிலையில் ரசிகர்களும் குட்டி சேவாக் என்று கொண்டாடத் துவங்கினர்.

ஆனால் நாளடைவில் தொடர்ந்து சிறப்பாக செயல்படத் தவறியதால் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட அவர் உடல் எடையை குறைத்து சயீத் முஷ்டாக் அலி கோப்பை போன்ற உள்ளூர் தொடரில் சிறப்பாக செயல்பட்டும் தேர்வுக்குழு தொடர்ந்து கண்டுகொள்ளாமல் இருந்தது. இருப்பினும் மனம் தளராமல் போராடிய அவர் சமீபத்திய ரஞ்சிக்கோப்பையில் முச்சதம் அடித்து அசத்தியதால் ஒருவழியாக கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற நியூசிலாந்து டி20 தொடரில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு பெறாத அவர் மீண்டும் இந்திய அணியில் நிலையான வாய்ப்பு பெறுவதற்கு இந்த ஐபிஎல் தொடரில் அசத்தலாக செயல்பட வேண்டிய நிலையில் களமிறங்கினார்.

- Advertisement -

மோசமான சாதனை:
அந்த நிலையில் முன்பை விட ஃபிட்டாக இருப்பதுடன் எக்ஸ்ட்ராவாக பயிற்சி செய்து வருவதால் இந்த சீசனில் கேரியரிலேயே உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்துவார் என்று ரிக்கி பாண்டிங்க்கும் இந்தியாவுக்காக விளையாட தயாராக இருக்கிறார் என்று சௌரவ் கங்குலியும் அவரை வெளிப்படையாக பாராட்டினர். அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்த நிலையில் லக்னோக்கு எதிரான முதல் போட்டியில் மார்க் வுட் வேகத்தில் 12 (9) ரன்களில் க்ளீன் போல்டான அவர் குஜராத்துக்கு எதிரான 2வது போட்டியில் முகமது சமியின் அதிரடியான வேகத்தில் 7 (5) ரன்களில் நடையை கட்டினார்.

அப்படி அதிரடியான தொடக்கத்தை கொடுக்க வேண்டிய அவர் அதிரடியான வேகத்தில் பந்து வீசும் வேகப்பந்து வீச்சாளர்களிடம் சொற்ப ரன்களில் அவுட்டானது டெல்லி அடுத்தடுத்த தோல்விகளை சந்திக்க முக்கிய காரணமானது. அதனால் சாட்டையை சுழற்றிய ரிக்கி பாண்டிங் ராஜஸ்தானுக்கு எதிரான 3வது போட்டியில் நேரடியாக 11 பேர் அணியில் தேர்வு செய்யாமல் 200 ரன்கள் இலக்கை துரத்தும் போது இம்பேக்ட் வீரராக தேர்வு செய்து வாய்ப்பு கொடுத்தார்.

- Advertisement -

ஆனால் ட்ரெண்ட் போல்ட் வீசிய ஸ்விங் வேகப்பந்தில் முதல் ஓவரின் 3வது பந்திலேயே சஞ்சு சாம்சனிடம் கேட்ச் கொடுத்து சென்ற அவர் இம்முறை டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் டக் அவுட்டான முதல் இம்பேக்ட் வீரர் என்ற பரிதாப சாதனையை படைத்த அவர் காலத்திற்கும் அந்த பட்டியலை புரட்டி போட்டால் தனது பெயர் முதலில் வரும் அளவுக்கு மோசமான சாதனையை படைத்துள்ளார்.

முன்னதாக டி20, ஒருநாள், டெஸ்ட் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பெரும்பாலான போட்டிகளில் சோயப் அக்தர், ப்ரெட் லீ போன்ற அதிரடியான வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்ட சேவாக் முதல் ஓவரிலேயே பவுண்டரிகளை பறக்க விட்டு தனது அணிக்கு அபாரமான தொடக்கத்தை கொடுப்பார். அந்த நிலையில் இத்தொடரின் 3 போட்டிகளிலும் மார்க் வுட், முகமது ஷமி, ட்ரெண்ட் போல்ட் ஆகிய 3 அதிரடியான வேகப்பந்து வீச்சாளர்களின் ஸ்விங் பந்துகளுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பிரிதிவி ஷா இப்படி அவுட்டாகியுள்ளதை பார்க்கும் ரசிகர்கள் இவர் எந்த காலத்திலும் சேவாக்கிற்கு பாதியளவு கூட நிகராக விளையாட முடியாது என்று ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

இதையும் படிங்க:வீடியோ : வீ வான்ட் தோனி – அம்பானியின் சதிகளை உடைத்த தானா சேர்ந்த தல சிஎஸ்கே கூட்டம், மும்பையில் ஒலித்த சென்னை குரல்

குறிப்பாக 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இதே போல வேகப்பந்து வீச்சாளர்களிடம் அவுட்டான காரணத்தாலே அவர் இந்திய அணியில் கழற்றி விடப்பட்டார். ஆனால் 2 வருடங்கள் கழித்தும் 140 – 150 வேகத்தில் வீசும் பவுலர்களை எதிர்கொள்வதில் இன்னும் முன்னேறாத அவர் கங்குலி கூறியதை போல இப்போதைக்கு இந்திய அணிக்கு விளையாட தயாராக இல்லை என்பதும் நிரூபணமாகிறது.

Advertisement