வீடியோ : வீ வான்ட் தோனி – அம்பானியின் சதிகளை உடைத்த தானா சேர்ந்த தல சிஎஸ்கே கூட்டம், மும்பையில் ஒலித்த சென்னை குரல்

dhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கோடைகாலத்தில் மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 தொடரில் ஏப்ரல் 8ஆம் தேதியன்று நடைபெற்ற 12வது லீக் போட்டியில் வெற்றிகரமான மும்பையை அதன் சொந்த ஊரான வான்கடே மைதானத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த சென்னை தன்னுடைய 2வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை சென்னையின் தரமான பந்து வீச்சில் 20 ஓவர்களில் 157/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக இசான் கிசான் 32 (31) ரன்கள் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்களை எடுத்தார்.

அதை தொடர்ந்து 158 ரன்களை துரத்திய சென்னைக்கு டேவோன் கான்வே டக் அவுட்டானாலும் அடுத்ததாக களமிறங்கிய அஜிங்க்ய ரகானே யாருமே எதிர்பாராத வகையில் சரவெடியாக விளையாடி 7 பவுண்டரி 3 சிக்சருடன் 61 (27) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார். குறிப்பாக மும்பையைச் சேர்ந்த அவர் முதல் முறையாக சென்னைக்கு களமிறங்கிய இந்த அறிமுக போட்டியிலேயே 19 பந்துகளில் இந்த சீசனில் அதிவேகமாக அரை சதமடித்து வெற்றியை உறுதி செய்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

- Advertisement -

தானா சேர்ந்த தல கூட்டம்:
அவருடன் ருதுராஜ் 40* ரன்களும் சிவம் துபே 28 ரன்களும் ராயுடு 20* ரன்களும் எடுத்ததால் 18.1 ஓவரிலேயே எளிதான வெற்றி பெற்ற சென்னை பரம எதிரியான மும்பையை தோற்கடித்து அசத்தியது. சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா – பாகிஸ்தான் போல ஐபிஎல் தொடரில் பரம எதிரிகளாக கருதப்படும் மும்பையும் சென்னையும் மொத்தமாக 9 கோப்பைகளை வென்று வரலாற்றில் வெற்றிகரமான அணியாக ஜொலித்து வருகின்றன. அதில் ஆரம்ப காலங்களில் தோனி தலைமையில் வெற்றிகரமாக செயல்பட்ட சென்னையை ரோகித் சர்மா பொறுப்பேற்றதும் மும்பை சற்று அதிகமாக வீழ்த்தி வருகிறது.

அந்த நிலையில் இப்போட்டி நடைபெற்ற வான்கடே மைதானத்தில் தங்களது செல்வாக்கை காட்ட விரும்பிய அம்பானி தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் சச்சின் டெண்டுல்கர் ஸ்டேண்ட் பகுதியில் இருக்கும் ப்ளாக் வி மற்றும் திலீப் வெங்சர்க்கார் ஸ்டேண்ட் பகுதியில் இருக்கும் பிளாக் டபுள்யு ஆகியவற்றில் சென்னை ரசிகர்களுக்கு அனுமதி இல்லாமல் முழுக்க முழுக்க மும்பை ரசிகர்களுக்காக ஒதுக்கியது. அது போக அந்த பகுதிகளில் வரும் ரசிகர்களுக்கு மும்பை இந்தியன்ஸ் சார்பாக இலவச டி-ஷர்ட் மற்றும் கொடி ஆகியவை கொடுக்கப்படும் என்று மும்பை நிர்வாகம் என்று அறிவித்தது.

- Advertisement -

அத்துடன் அந்த பகுதிகளில் வேறு வண்ண உடைகளை அணிந்து வரும் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்றும் மும்பை நிர்வாகம் டிக்கெட் வழங்கும் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகவே தெரிவித்திருந்தது. அப்படி சொந்த மைதானத்தில் ரசிகர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில் தவறில்லை என்றாலும் அதற்காக வான்கடே மைதானத்தின் எஞ்சிய பகுதிகளிலும் குறிப்பிட்ட அளவு மட்டுமே சென்னை ரசிகர்களுக்கு அனுமதி கொடுக்குமாறு மைதான நிர்வாகத்திடம் மும்பை அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டது.

மொத்தத்தில் இப்போட்டி நடைபெற்ற வான்கடே மைதானம் முழுவதும் நீல நிற வண்ணத்தில் காட்சியளிக்க வேண்டும் என்பதற்கு தேவையான அனைத்து வேலைகளையும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் செய்தது. ஆனால் இறுதியில் அவை அனைத்தையும் உடைத்த சென்னை ரசிகர்கள் வான்கடே மைதானத்தில் நீல நிறத்தை மிஞ்சும் அளவுக்கு மஞ்சள் நிற உடையுடன் அணிந்து எம்எஸ் தோனிக்காக மெகா ஆதரவு கொடுத்தார்கள். அதனால் வான்கடே மைதானத்தை கழுகு பார்வையில் பார்த்த போது நீல நிறத்தை விட மஞ்சள் நிற ஜெர்ஸிகள் தான் அதிகமாக தெரிந்தது.

இதையும் படிங்க:IPL 2023 : சஞ்சு சாம்சனை மிஞ்சி சாதனை படைத்தாலும் – சொதப்பல் லெஜெண்டாக உருவெடுத்த ரியன் பராக், கலாய்க்கும் ரசிகர்கள்

ஏனெனில் அதே வான்கடே மைதானத்தில் 2011 உலகக் கோப்பை ஃபைனலில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற வைத்த தோனிக்கு மும்பையிலேயே ஏராளமான ரசிகர்கள் இருப்பதே இதற்கு காரணமாகும். அப்படி அன்பால் தோனிக்காக தாமாக சேர்ந்த ரசிக கூட்டம் இறுதியில் அவர் பேட்டிங் செய்வதை பார்ப்பதற்காக ஒரு கட்டத்தில் “வீ வாண்ட் தோனி, வீ வாண்ட்” என விண்ணதிர முழங்கி மும்பை அணி நிர்வாகத்தை கதிகலங்க வைத்தனர். அதே போல் வான்கடே மைதான பராமரிப்பாளர்களும் ரசிகர்களைப் போல் தோனியுடன் புகைப்படம் எடுத்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டனர்.

Advertisement