IPL 2023 : சஞ்சு சாம்சனை மிஞ்சி சாதனை படைத்தாலும் – சொதப்பல் லெஜெண்டாக உருவெடுத்த ரியன் பராக், கலாய்க்கும் ரசிகர்கள்

Riyan Parag
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 8ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 11வது லீக் போட்டியில் டெல்லியை 57 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ராஜஸ்தான் தங்களுடைய 2வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. கௌகாத்தியில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 199/4 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் 79 (51) ரன்களும் யசஸ்வி ஜெய்ஸ்வால் 60 (31) ரன்களும் எடுக்க டெல்லி சார்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை தொடர்ந்து 200 ரன்களை துரத்திய டெல்லிக்கு பிரிதிவி ஷா 0, மனிஷ் பாண்டே 0, ரோசவ் 14, அக்சர் படேல் 2 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ராஜஸ்தானின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டானதால் மெதுவாக விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட டேவிட் வார்னர் போராடி 65 (55) ரன்கள் எடுத்தும் 20 ஓவர்களில் 142/9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்தலாக செயல்பட்ட ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் மற்றும் சஹால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்து வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

சொதப்பல் லெஜெண்ட்:
முன்னதாக இப்போட்டியில் இளம் வீரர் ரியன் பராக் தன்னுடைய 50வது ஐபிஎல் போட்டியை ராஜஸ்தானுக்காக விளையாடினார். உள்ளூர் கிரிக்கெட்டில் ஓரளவு சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் கடந்த 2019 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக 20 லட்சத்துக்கு வாங்கப்பட்ட அவர் ஹைதராபாத்துக்கு எதிரான ஒரு போட்டியில் அரை சதமடித்து வெற்றி பெற வைத்து நடனமாடியதை ரசிகர்களால் மறக்க முடியாது.

அந்த போட்டியில் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் இளம் வயதில் அரை சதமடித்த வீரர் என்ற சாதனையும் படைத்த அவரிடம் ஏதோ ஒரு திறமை இருப்பதாக எண்ணிய ராஜஸ்தான் நிர்வாகம் மீண்டும் தக்க வைத்து தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தது. ஆனால் அந்த வாய்ப்பில் 2020 சீசனில் 86 ரன்கள், 2021 சீசனில் 93 ரன்கள் என சுமாராக செயல்பட்டும் மீண்டும் 2022 சீசனில் 3.80 கோடி என்ற பெரிய தொகைக்கு ராஜஸ்தான் அவரை வாங்கியது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. இருப்பினும் 2022 சீசனில் முழுமையாக 17 போட்டிகளில் வாய்ப்பு பெற்ற அவர் வெறும் 183 ரன்களை மட்டுமே எடுத்து செயல்பட்டு ராஜஸ்தானின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இல்லாமல் சுமாராக செயல்பட்டார்.

- Advertisement -

ஆனால் வாய்ப்புக்கு திண்டாடும் பல வீரர்களுக்கு மத்தியில் இவ்வளவு வாய்ப்புகள் கிடைக்கும் அதை வீணடிக்கும் அவரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து விமர்சித்தனர். ஏனெனில் ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவும் விராட் கோலி சாதனை செய்தது போல் ட்விட்டரில் வாய்ச்சவடால் பேசும் அவர் கடந்த வருடம் கேட்ச் பிடிக்கும் போது சரியான தீர்ப்பையே வழங்கிய நடுவர் என்னமோ அநியாயமாக தவறான தீர்ப்பு வழங்கியது போல் அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும் இவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்று அறிவுரை வழங்கிய ஆஸ்திரேலிய ஜாம்பவான் மேத்தியூ ஹைடனை கலாய்க்கும் வகையிலும் நடந்து கொண்ட அவரை வாயில் பேசாமல் செயலில் காட்டுங்கள் என்று ரசிகர்கள் சரமாரியாக விமர்சித்தனர்.

அந்த நிலையில் இந்த வருடம் மீண்டும் 3.80 கோடிக்கு தக்கவைத்து ராஜஸ்தான் கொடுத்த வாய்ப்பில் இதுவரை களமிறங்கிய 3 போட்டிகளில் 34 ரன்களை மட்டுமே எடுத்துள்ள அவர் எந்த மாற்றத்தை முன்னேற்றத்தையும் காணாமல் தொடர்ந்து சொதப்பி வருகிறார். குறிப்பாக டெல்லிக்கு எதிரான இந்த போட்டியில் பட்லர் – ஜெய்ஸ்வால் அதிரடியான தொடக்கத்துக்கு பின் களமிறங்கிய அவர் தடவலாக செயல்பட்டு 7 (11) ரன்களில் அவுட்டாகி ராஜஸ்தான் 200 ரன்கள் தொட முடியாத வகையில் பின்னடைவை ஏற்படுத்தினார்.

- Advertisement -

இருப்பினும் 50 போட்டிகளில் விளையாடிய அவர் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் இளம் வயதில் 50 போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சஞ்சு சாம்சன் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. ரியான் பராக் : 21 வருடம் 159 நாட்கள்
2. சஞ்சு சாம்சன் : 21 வருடம் 188 நாட்கள்
3. ரிஷப் பண்ட : 21 வருடம் 210 நாட்கள்

இதையும் படிங்க:CSK vs MI : தோனி கொடுத்த அந்த சலுகை தான் எனது இந்த அதிரடிக்கு காரணம் – அஜிங்க்யா ரஹானே பேட்டி

ஆனாலும் 5 வருடங்களில் அந்த 50 போட்டிகளில் வெறும் 556 ரன்களை 16.35 என்ற படுமோசமான சராசரியில் 124.48 என்ற தடவல் ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ள அவர் சொதப்பல் லெஜெண்ட்டாக உருவாகி வருவதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement