CSK vs MI : தோனி கொடுத்த அந்த சலுகை தான் எனது இந்த அதிரடிக்கு காரணம் – அஜிங்க்யா ரஹானே பேட்டி

Rahane-csk
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான நடப்பு ஐபிஎல் தொடரின் 12-வது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது, இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை அசத்தலாக பதிவு செய்துள்ளது.

Rahane 1

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியானது சென்னை அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர் ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது 18.1 ஓவரில் 159 ரன்களை குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதல் ஓவரிலேயே துவக்க வீரர் கான்வே ஆட்டமிழந்த வேளையில் மூன்றாவது வீரராக களம் புகுந்த ரஹானே இதுவரை வெளிப்படுத்தாத அதிரடியான ஆட்டத்தை இந்த போட்டியில் வெளிப்படுத்தி 19 பந்துகளில் அரைசதம் அடித்தது மட்டுமின்றி 27 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 61 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த அதிரடியே சென்னை அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது என்றால் அதுமிகையல்ல. அவரது இந்த அதிரடியை எதிர்பாராத ரசிகர்கள் தற்போது அவரை பாராட்டி வருகின்றனர்.

Rahane

இவ்வேளையில் தனது இந்த சிறப்பான ஆட்டத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து ரஹானே போட்டி முடிந்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : நான் இந்த போட்டியில் என்னுடைய பேட்டிங்கை மிகவும் ரசித்து விளையாடினேன். டாஸ் போடுவதற்கு முன்னதாக தான் மொயின் அலி உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் என்றும் அதன் காரணமாக இன்றைய போட்டியில் நீ விளையாட போகிறாய் என ஸ்டீபன் பிளமிங் என்னிடம் கூறினார். நான் இந்த ஆண்டு உள்ளூர் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளையாடி உள்ளேன். எனவே நிச்சயம் என்னுடைய அந்த ஃபார்மை இந்த போட்டியில் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தேன்.

- Advertisement -

அதுமட்டுமின்றி இந்த போட்டியில் பந்தை சரியாக டைமிங் செய்தாலே போதும் என்று நினைத்தேன். அதனால் என்னால் சில சூப்பரான ஷாட்டுகளை விளையாட முடிந்தது. ஐபிஎல் போட்டிகளில் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியாது. அப்படி கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். நான் எப்போதுமே மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடுவதில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன்.

இதையும் படிங்க : IPL 2023 : பட்லர் வார்னரிடம் சென்ற ஆரஞ்சு தொப்பியை தன்வசமாக்கிய ருதுராஜ் – ராகுல், ரெய்னாவை மிஞ்சி புதிய ஆல் டைம் அதிவேக சாதனை

இங்கு நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியதே கிடையாது. இந்த மைதானத்தில் ஒரு டெஸ்ட் போட்டியிலாவது விளையாட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இந்த போட்டியில் என்னுடைய அதிரடிக்கு முக்கியமான காரணம் யாதெனில் : தோனியும் சரி, பிளமிங்கும் சரி வீரர்களுக்கு நல்ல சுதந்திரத்தை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தோனி என்னை இந்த போட்டியை ரசித்து விளையாடும் படியும், சுதந்திரமாக உங்களுக்கு எப்படி தோன்றுகிறதோ அதே போன்று பிரிப்பேர் செய்து விளையாடுங்கள் என்று கூறினார். அவரது அந்த வார்த்தைகள் எனது அதிரடிக்கு காரணமாகவும் அமைந்தது என ரஹானே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement