IPL 2023 : பட்லர் வார்னரிடம் சென்ற ஆரஞ்சு தொப்பியை தன்வசமாக்கிய ருதுராஜ் – ராகுல், ரெய்னாவை மிஞ்சி புதிய ஆல் டைம் அதிவேக சாதனை

Ruturaj Gaikwad CSk.jpeg
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 8ஆம் தேதியன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 12வது லீக் போட்டியில் மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த சென்னை தன்னுடைய 3 போட்டிகளில் 2வது வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை சென்னையின் தரமான பந்து வீச்சில் 20 ஓவர்களில் போராடி 157/8 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக இசான் கிசான் 32 (21) ரன்களும் டிம் டேவிட் 31 (22) ரன்களும் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை தொடர்ந்து 158 ரன்களை துரத்திய சென்னைக்கு முதல் ஓவரிலேயே டேவோன் கான்வே டக் அவுட்டாகி ஏமாற்றினாலும் அடுத்து களமிறங்கிய அஜிங்க்ய ரகானே யாருமே எதிர்பாரா வகையில் சரவெடியாக பேட்டிங் செய்து 7 பவுண்டரி 3 சிக்சருடன் 61 (27) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்த ஆட்டமிழந்தார். குறிப்பாக சற்று மெதுவாக விளையாடக்கூடிய அவர் சென்னைக்காக முதல் முறையாக களமிறங்கிய இப்போட்டியில் 19 பந்துகளிலேயே இந்த சீசனில் அதிவேகமாக அரை சதமடித்த வீரராக சாதனை படைத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

- Advertisement -

அதிவேகமான ருதுராஜ்:
அவருடன் மறுபுறம் நங்கூரமாக நின்ற தொடக்க வீரர் ருதுராஜ் கைக்வாட் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 40* (36) ரன்களும் ராயுடு 3 பவுண்டரியுடன் 20* (16) ரன்களும் எடுத்ததால் 18.1 ஓவரிலேயே 159/3 ரன்கள் எடுத்த சென்னை எளிதான வெற்றி பெற்று பரம எதிரியான மும்பையை தோற்கடித்தது. முன்னதாக இந்த தொடரில் சென்னையின் நம்பிக்கை நட்சத்திரம் ருதுராஜ் கைக்வாட் 92, 57 என முதலிரண்டு போட்டியில் பெரிய ரன்களைக் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்திருந்தார்.

அந்த நிலையில் நேற்று 2 போட்டிகள் நடைபெற்ற நிலையில் மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 11வது லீக் போட்டியில் ராஜஸ்தானுக்கு 79 ரன்கள் விளாசிய ஜோஸ் பட்லர் அவரை முந்தி மாலை 5 மணியளவில் ஆரஞ்சு தொப்பியை தன்வசமாக்கினார். அதைத்தொடர்ந்து ராஜஸ்தான் நிர்ணயித்த 200 ரண்களை துரத்திய டெல்லிக்கு தனி ஒருவனாக சற்று மெதுவாக விளையாடி போராடிய டேவிட் வார்னர் 65 ரன்கள் குவித்து பட்லரிடம் இருந்த ஆரஞ்சு தொப்பியை மாலை 7.30 மணியளவில் தன்வசமாக்கினார்.

- Advertisement -

ஆனால் இந்த போட்டியில் மீண்டும் அசத்தலாக பேட்டிங் செய்த ருதுராஜ் 3 போட்டிகளில் மொத்தமாக 189 ரன்களை 94.50 என்ற சிறப்பான சராசரியில் குவித்து முதலிடம் பிடித்து பட்லர், வார்னர் ஆகியோரது தலைகளுக்கு சென்ற ஆரஞ்சு தொப்பியை மீண்டும் தனதாக்கியுள்ளார். தற்போதைய ஆரஞ்சு தொப்பி பட்டியல் இதோ:
1. ருதுராஜ் கைக்வாட் : 189*
2. டேவிட் வார்னர் : 158*
3. ஜோஸ் பட்லர் : 152*

முன்னதாக கடந்த 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி பிளே ஆஃப் சுற்றை தவற விட்ட சென்னையை புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடிக்கும் அவமானத்திலிருந்து காப்பாற்றிய ருதுராஜ் 2021 சீசனில் அதிரடியாக விளையாடி 635 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்று 4வது கோப்பையை வெல்ல கருப்பு குதிரையாக செயல்பட்டார். இருப்பினும் கடந்த சீசனில் அவர் சற்று சுமாராக செயல்பட்ட காரணத்தால் புள்ளி பட்டியலில் சென்னைக்கு 9வது இடம் மட்டுமே கிடைத்தது.

- Advertisement -

அந்த நிலையில் முதல் 3 சீசங்களில் முதல் 3 போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி வந்த அவர் இந்த சீசனில் முதல் 3 போட்டிகளிலேயே 189 ரன்கள் விளாசி ஆரஞ்சு தொப்பியை வென்று வருவதால் 2021 போல சென்னைக்கு 5வது கோப்பையை வென்று கொடுப்பார் என்று அந்த அணி ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர். மேலும் முன்பை விட பவுண்டரிகளை விட அதிக சிக்ஸர்களை பறக்க விட்டு அதிரடியாக விளையாட துவங்கியுள்ள அவர் இதுவரை ஐபிஎல், உள்ளூர் டி20 மற்றும் சர்வதேச டி20 என அனைத்து வகையான டி20 போட்டிகளையும் சேர்த்து வெறும் 91 இன்னிங்ஸில் 3025* ரன்களை குவித்துள்ளார்.

இதையும் படிங்க: CSK vs MI : நல்லா ஸ்டார்ட் பண்ணியும் சி.எஸ்.கே-வுக்கு எதிரா நாங்க தோக்க இதுவே காரணம் – ரோஹித் வருத்தம்

இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 3000 ரன்கள் கடந்த இந்திய வீரர் என்ற கேஎல் ராகுல் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனையும் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ருதுராஜ் கைக்வாட் : 91 இன்னிங்ஸ்*
2. கேஎல் ராகுல் : 93 இன்னிங்ஸ்
3. சுரேஷ் ரெய்னா/கௌதம் கம்பீர் : தலா 107 இன்னிங்ஸ்
4. ரிஷப் பண்ட் : 108 இன்னிங்ஸ்

Advertisement