CSK vs MI : நல்லா ஸ்டார்ட் பண்ணியும் சி.எஸ்.கே-வுக்கு எதிரா நாங்க தோக்க இதுவே காரணம் – ரோஹித் வருத்தம்

Rohit Sharma 1
- Advertisement -

மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 12-ஆவது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது மும்பை அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த மும்பை அணியானது இந்த போட்டியில் சொந்த மைதானத்தில் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் சென்னை அணியிடம் சிக்கி அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.

CskvsMi

- Advertisement -

அதன்படி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 157 ரன்களை மட்டுமே குவித்தது. அதனை தொடர்ந்து 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது 18.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 159 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் மும்பை அணி பெற்ற தோல்வி மும்பை ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் சந்தித்த மோசமான தோல்வி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் : இந்த போட்டியில் எங்களுக்கு நல்ல துவக்கம் கிடைத்தும். அதனை பெரிய ஸ்கோராக நாங்கள் மாற்ற தவறவிட்டு விட்டோம். பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் இன்னும் கூடுதலாக 30 முதல் 40 ரன்கள் குவித்திருக்க வேண்டும்.

Jadeja

ஆனால் மிடில் ஓவர்களில் எங்களால் ரன் குவிக்க முடியாமல் போனது. அதற்கு காரணம் சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி எங்களை அழுத்தத்திற்குள் தள்ளினர். நாங்கள் புதுப்புது விடயங்களை முயற்சி செய்தாலும் அது பலிக்காமல் போனது. இந்த போட்டியில் சென்னை அணியின் பந்துவீச்சாளர்களாலே நாங்கள் அழுத்தத்திற்கு தள்ளப்பட்டோம்.

- Advertisement -

அதேபோன்று இந்த போட்டியில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் சீனியர் வீரர்கள் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டியது அவசியம். நான் என்னையும் சேர்த்து சொல்கிறேன் நானும் இனிவரும் போட்டிகளில் என்னுடைய பங்களிப்பை வழங்குவது முக்கியம். தற்போது இரண்டு போட்டிகள் மட்டுமே முடிந்துள்ளன. அதில் இரண்டிலும் நாங்கள் தோல்வியை சந்தித்துள்ளோம். ஆனால் ஒரு வெற்றியை பெற்று விட்டால் போதும் நிச்சயம் எங்களால் இதிலிருந்து வெளிவர முடியும்.

இதையும் படிங்க : IPL 2023 : இந்த சீசன்ல சொதப்பினால் உ.கோ சான்ஸ் அந்த தமிழக வீரருக்கு போய்டும் – குல்தீப், சஹாலை எச்சரிக்கும் சேவாக்

நிச்சயம் அடுத்த போட்டியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புவதாக ரோகித் சர்மா கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்த இரண்டு போட்டிகளில் ஏற்பட்ட தோல்வியினால் நாங்கள் எந்த ஒரு வியூகத்தையும் மாற்றப் போவதில்லை. இந்த தோல்விகளிலிருந்து கிடைத்த பாடங்களை எடுத்துக் கொண்டு இனிவரும் போட்டிகளில் களத்தில் எங்களது வீரத்தை வெளிப்படுத்துவோம் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement