கொஞ்சம் உடம்பு சரில்ல.. அதை ஸ்விட்ச் பண்றது கஷ்டம்.. ஆர்சிபி’க்காக 110% கொடுப்பேன்.. ஆட்டநாயகன் சிராஜ் பேட்டி

Mohammed Siraj
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 52வது லீக் போட்டியில் குஜராத்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அதனால் 4வது வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 10வது இடத்திலிருந்து 7வது இடத்திற்கு முன்னேறிய பெங்களூரு பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. பெங்களூருவில் மே 4ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக ஷாருக்கான் 37, டேவிட் மில்லர் 30, ராகுல் திவாடியா 35 ரன்கள் எடுத்தனர். பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ், யாஸ் தயாள், விஜயகுமார் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 148 ரன்களை துரத்திய பெங்களூரு அணிக்கு கேப்டன் டு பிளேஸிஸ் சரமாரியாக அடித்து நொறுக்கி 64 (23), விராட் கோலி 42 (27) ரன்கள் விளாசி அற்புதமான துவக்கத்தை கொடுத்தனர்.

- Advertisement -

ஆட்டநாயகன் சிராஜ்:
ஆனால் அடுத்ததாக வந்த வில் ஜேக்ஸ் 1, கிளன் மேக்ஸ்வெல் 4, கேமரூன் கிரீன் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் கடைசியில் தினேஷ் கார்த்திக் 21*, ஸ்வப்னில் சிங் 15* ரன்கள் அடித்து 13.4 ஓவரில் வெற்றி பெற வைத்தனர். அதனால் ஜோஸ்வா லிட்டில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை சந்தித்த குஜராத் ஒன்பதாவது இடத்திற்கு சரிந்தது.

இந்த வெற்றிக்கு 2 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் கடந்த போட்டிகளில் சுமாராக செயல்பட்டதால் கொஞ்சம் உடல்நிலை சரியில்லை என்று தெரிவிக்கும் சிராஜ் டெஸ்ட் போட்டியிலிருந்து டி20 கிரிக்கெட்டுக்கு மாறுவது மிகவும் கடினமான வேலை எனக் கூறியுள்ளார். இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“உண்மையில் கடந்த சில தினங்களாக எனக்கு உடல்நலம் சரியில்லை. அதனால் இன்று நான் விளையாட மாட்டேன் என்று நினைத்தேன். ஆனால் உண்மையாக அணிக்காக விளையாட விரும்பினேன். எனவே அதை செய்தது மிகவும் சிறந்தது. இந்த வருடம் புதிய பந்தை வைத்து நிறைய பயிற்சி செய்தது இன்று வெற்றிகரமாக செயல்பட உதவியது. இது எனக்கு கடந்த வருடத்தை நினைவுபடுத்துகிறது”

இதையும் படிங்க: 92/0 டூ 117/6.. குஜராத்திடம் சொதப்பலான மாஸ் காட்டிய ஆர்சிபி.. பிளே ஆஃப் செல்ல வாய்ப்பிருக்கா?

“இன்று காலை எழுந்த போது என்னால் விளையாட முடியாது என நினைத்ததால் ஓய்வு எடுக்கலாம் என்று விரும்பினேன். இருப்பினும் காலை எழுந்ததும் என்ன செய்ய வேண்டும் என்று நான் வேண்டிக்கொண்டேன். களத்தில் அது கச்சிதமாக நடந்தது. டெஸ்ட் மற்றும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு இடையே மாறுவது சுலபமல்ல. இங்கே விளையாடும் போது நீங்கள் உங்களுடைய 110% பங்களிப்பை கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement