ரொம்ப தேங்க்ஸ் தம்பி.. வீட்டுக்கு போறப்போக்கில் சிஎஸ்கே’வின் மோசமான சாதனையை தனதாக்கிய ஆர்சிபி

RCB and CSK
- Advertisement -

பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எலிமினேட்டர் போட்டியில் தோற்று வெளியேறியது. இந்த வருடம் முதல் 7 போட்டிகளில் 6 தோல்வியை பதிவு செய்த பெங்களூரு முதல் அணியாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி 5 போட்டிகளில் 6 வெற்றிகள் பெற்ற அந்த அணி நடப்பு சாம்பியன் சென்னையை நாக் அவுட் செய்தது.

அதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு 4வது அணியாக தகுதி பெற்ற ஆர்சிபி தங்களின் மகளிரணியை போல இம்முறை கோப்பையை வெல்லும் என்று நம்பப்பட்டது. ஆனால் மே 22ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தானிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு தோல்வியை சந்தித்தது. அதனால் தொடர்ந்து 17வது வருடமாக ஐபிஎல் கோப்பையை தொட முடியாமலேயே பெங்களூரு பரிதாபமாக வீட்டுக்கு கிளம்பியது.

- Advertisement -

தேங்க்ஸ் ஆர்சிபி:
முன்னதாக மே 18ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே அணியை தோற்கடித்த பெங்களூரு அணியினர் அதை கோப்பையை வென்றது போல் வெறித்தனமாக கொண்டாடினர். அதே போல ஆர்சிபி ரசிகர்களும் களத்திலும் களத்திற்கு வெளியே தெருக்களிலும் சிஎஸ்கே ரசிகர்களை வம்படியாக கலாய்த்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் தற்போது தோல்வியை சந்தித்து வெளியேறியதால் ஆர்சிபி ரசிகர்களை சிஎஸ்கே ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக சந்தித்த தோல்வியை சேர்த்து ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றில் ஆர்சிபி அணி மொத்தம் 10 தோல்விகளை பதிவு செய்துள்ளது. இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆஃப் சுற்றில் அதிக தோல்விகளை பதிவு செய்த அணி என்ற சென்னை மற்றும் டெல்லி ஆகிய அணிகளின் மோசமான சாதனையை பெங்களூரு தற்போது தங்களுடைய பெயரில் எழுதிக் கொண்டுள்ளது.

- Advertisement -

இதற்கு முன் டெல்லி அணி 11 பிளே ஆஃப் போட்டிகளில் விளையாடி 9 தோல்விகளை சந்தித்துள்ளது. அதே போல சிஎஸ்கே அணி 26 பிளே ஆஃப் போட்டிகளில் வெறும் 9 தோல்விகளை மட்டுமே பதிவு செய்துள்ளது. ஆனால் 2008 முதல் இதுவரை 16 பிளே ஆஃப் போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி அதில் 10 தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் சென்னை மற்றும் டெல்லி அணிகள் பகிர்ந்து கொண்டிருந்த மோசமான சாதனை தற்போது பெங்களூரு அணிக்கு சொந்தமாகியுள்ளது.

இதையும் படிங்க: ஐ.பி.எல் வரலாற்றில் யாரும் தகர்க்க முடியாத தரமான சாதனையை நிகழ்த்திய விராட் கோலி – விவரம் இதோ

அதனால் ஆர்சிபி அணிக்கு ரொம்ப தேங்க்ஸ் தம்பி என்று சிஎஸ்கே ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். இது போக இந்த வருடம் ஹைதெராபாத் அணிக்கு எதிராக 287 ரன்கள் வாரி வழங்கிய பெங்களூரு ஒரு ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் வாரி வழங்கிய அணி என்ற மோசமானயும் சாதனை படைத்தது. அந்த வகையில் இந்த வருடம் பிளே ஆஃப் சென்றதைத் தவிர்த்து பெங்களூரு அணிக்கு எதுவுமே நன்றாக அமையவில்லை.

Advertisement