ஐ.பி.எல் வரலாற்றில் யாரும் தகர்க்க முடியாத தரமான சாதனையை நிகழ்த்திய விராட் கோலி – விவரம் இதோ

Kohli
- Advertisement -

டூபிளெஸ்ஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியானது இந்தியாவில் நடைபெற்று வரும் 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் அடுத்த அடுத்த தோல்விகளை சந்தித்து மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. அதன் காரணமாக நிச்சயம் இந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு கூட அந்த அணி செல்லாது என்று பலராலும் பேசப்பட்டு வந்தது.

ஆனால் இந்த தொடரில் பிற்பகுதியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு அணி தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கும் தகுதி பெற்றது. குறிப்பாக சென்னை அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு சென்ற பெங்களூரு அணி நிச்சயம் இந்த ஆண்டு கோப்பையை கைப்பற்றும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

- Advertisement -

ஆனால் அகமதாபாத் நகரில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக எலிமினேட்டர் போட்டியில் தோல்வியை சந்தித்து இந்த தொடரில் இருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெளியேறியது.

இப்படி 16 ஆண்டுகளாக ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றாத அணியாக இருந்து வரும் பெங்களூரு இந்த முறையாவது கோப்பை கைப்பற்றும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த தோல்வி ஏமாற்றத்தை அளித்தது.

- Advertisement -

இருப்பினும் இந்த போட்டியில் விளையாடிய பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி ஐபிஎல் தொடரில் முதல் வீரராக மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் நடைபெற்று முடிந்த அந்த போட்டியில் 24 பந்துகளை சந்தித்து மூன்று பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என 33 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

இதையும் படிங்க : அதை செய்ய ரெடியா இல்லாத.. இந்தியாவுக்கு டி20 உலக கோப்பையில் ஏமாற்றமே கிடைக்கும்.. டேவிட் லாய்ட் கணிப்பு

இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 8000 கண்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையும், 8000 கண்களையும் ஒரே அணிக்காக விளாசிய வீரர் என்ற சாதனையும் அவர் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement