தோனியை புகழ்ந்தா பிடிக்காது.. அப்போ பழியை கம்பீர் மேல போடுவீங்களா? ரசிகரை விளாசிய இயன் பிஷப்

Ian Bishop 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 11 போட்டிகளில் 8 வெற்றிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. அதனால் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை 99% செய்துள்ளது. கொல்கத்தா அணியின் இந்த வெற்றிக்கு ஆலோசகர் கௌதம் கம்பீர் முக்கிய காரணமாக திகழ்கிறார் என்றே சொல்லலாம்.

எடுத்துக்காட்டாக கொல்கத்தா அணியின் ஆலோசகராக வந்துள்ள அவர் மீண்டும் சுனில் நரேனை ஓப்பனிங்கில் களமிறக்கினார். அதை பயன்படுத்திய சுனில் நரேன் 400க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து கொல்கத்தாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டு வருகிறார். மேலும் 2012, 2014 ஆகிய வருடங்களில் கொல்கத்தாவுக்கு 2 கோப்பைகளை வென்று கொடுத்த கம்பீர் 3வது வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

பிஷப் பதிலடி:
எனவே கொல்கத்தா அணியின் இந்த வெற்றிக்கு கௌதம் கம்பீர் தான் முக்கிய காரணமாக திகழ்வதாக அந்த அணி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதை ட்விட்டரில் பார்த்த முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் இயன் பிஷப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு எந்த கொல்கத்தா ரசிகராவது அன்பை காட்டுவார்களா? என்று பதிவிட்டார். அப்போது கௌதம் கம்பீர் தான் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு காரணம் என்று ரசிகர்கள் அவருக்கு பதிலளித்தனர்.

அந்த ரசிகரில் ஒருவருக்கு இயன் பிஷப் கொடுத்த பதில் பின்வருமாறு. “2018இல் கௌதம் கம்பீர் முதல் 6 போட்டியில் 5 தோல்விகளை சந்தித்த பின் டெல்லி அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது ஸ்ரேயாஸ் ஐயர் டெல்லியின் கேப்டனாக பொறுப்பேற்றார். அவருடைய தலைமையில் அடுத்த 8 போட்டிகளில் டெல்லி 4 வெற்றிகளை பெற்றது. 2019இல் 3வது இடத்தை பிடித்த டெல்லி 2020இல் ஃபைனல் வரை சென்றது”

- Advertisement -

“2021இல் அவர் காயமடைந்ததால் ரிஷப் பண்ட் கேப்டனாக பொறுப்பேற்றார். அதைத்தொடர்ந்து தற்போது கொல்கத்தா அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் அசத்தி வருகிறார்” என்று கூறினார். ஆனால் அப்போதும் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு கம்பீர தான் காரணம் என்று ரசிகர்கள் தொடர்ந்து பதிலளித்தனர். அதற்கு பிஷப் கடைசியாக பதிலளித்தது பின்வருமாறு. “வெற்றி பெறும் போது கௌதம் கம்பீர் பாராட்டப்படுகிறார். எனவே தோல்வி பெறும் போது அதற்கு காரணமாக கம்பீரை விமர்சிப்பீர்களா? அல்லது ஸ்ரேயாஸை குற்றம் சொல்வீர்களா?” என்று பதிலளித்துள்ளார்.

இதையும் படிங்க: மொத்தமாக டேமேஜான சிஎஸ்கே அணி.. போற போக்கை பாத்தா பிளே ஆஃப் போகுமா? ரசிகர்கள் கவலை

முன்னதாக 2011 உலகக் கோப்பை வெற்றிக்கு கேப்டன் தோனி காரணம் பாரட்டும் போதெல்லாம் அது மொத்த இந்தியாவின் வெற்றி என்று கம்பீரும் அவருடைய ரசிகர்களும் விமர்சிப்பது வழக்கமாகும். ஆனால் இங்கே மட்டும் கொல்கத்தாவின் வெற்றிக்கு கௌதம் கம்பீர் காரணம் என்று அந்த அணி ரசிகர்கள் பாராட்டுகின்றனர். எனவே தோல்வியின் பழியையும் அவர் மீது போடுவீர்களா என்று கம்பீர் ரசிகர்களுக்கு இயன் பிஷப் பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement