திறமைய பாருங்க, இந்த ரூல் அப்போ இருந்திருந்தா பல ஜாம்பவான்கள் காணாம போயிருப்பாங்க – பிசிசிஐயை விளாசும் சேவாக்

Sehwag
- Advertisement -

காலத்தின் வளர்ச்சிக்கேற்ப நவீன கிரிக்கெட்டில் வேகமாக ஓடி சிறப்பாக ஃபீல்டிங் செய்து வெற்றிகரமாக செயல்படுவதற்கு அதில் விளையாடும் வீரர்கள் நல்ல ஃபிட்னஸ் கடைபிடிப்பது அவசியமாகிறது. கடந்த 2012 காமன்வெல்த் தொடரின் போது சேவாக் போன்ற சற்று பொறுமையுடன் ஓடக்கூடிய சீனியர் வீரர்களை விமர்சனங்களை தாண்டி தைரியமாக கழற்றி விட்ட முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி இந்திய கிரிக்கெட்டில் முதல் முறையாக உடல் தகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஆனால் அவருக்கு பின் பொறுப்பேற்ற விராட் கோலி அதை மிகவும் கண்டிப்புடன் கடைபிடித்து ஃபிட்டாக இருக்கும் வீரர்களுக்கு மட்டுமே இந்திய அணியில் இடம் என்ற நிலைமையை ஏற்படுத்தினார்.

yoyotraining

- Advertisement -

அதன் காரணமாக உலக அரங்கில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு ஃபீல்டிங் துறையில் இந்தியா அபார வளர்ச்சி கண்டது. மேலும் வேகமாக ஓடும் கடினமான பயிற்சிகளை கொண்ட யோ-யோ டெஸ்ட் இந்திய அணிக்கு மிகவும் அவசியமானது என்று விராட் கோலி வலியுறுத்தினார். இருப்பினும் அவருக்கு பின் கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா உடல் தகுதியை விட திறமை தான் முக்கியம் என்ற கண்ணோட்டத்துடன் கொஞ்சம் கொஞ்சமாக அந்த டெஸ்டை மூட்டை கட்டி கட்டினார்.

சேவாக் அதிருப்தி:
ஆனால் அவரது தலைமையில் சமீப காலங்களில் ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹர் ஆகியோர் காயமடைந்து குணமடைந்து வந்தாலும் மீண்டும் காயமடைந்து வெளியேறினர். குறிப்பாக குணமடைந்து வரும் வீரர்கள் எப்படி ஓரிரு போட்டிகளில் விளையாடுவதற்குள் மீண்டும் காயமடைகிறார்கள் என்ற குழப்பம் இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டது. சொல்லப்போனால் இதர வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் வகையில் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் உடல் எடையை குறைத்து ஃபிட்னஸ் கடை பிடிக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் கடுமையாக விமர்சித்தார்.

yoyo

அதன் காரணமாக இந்திய அணியில் தேர்வாவதற்கான அளவுகோலில் யோயோ டெஸ்ட் மீண்டும் கொண்டு வரப்படுவதாக கடந்த ஜனவரி மாதம் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு திறமை தான் தேவையே தவிர வேகமாக ஓடுவதற்கு இது ஒன்றும் மராத்தான் விளையாட்டு இல்லை என்று முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் விமர்சித்துள்ளார். மேலும் யோயோ டெஸ்ட் இருந்திருந்தால் இப்போது ஜாம்பவான்களாக கொண்டாடப்படும் அளவுக்கு தமது காலத்தில் அபாரமாக செயல்பட்ட நிறைய வீரர்கள் காணாமல் போயிருப்பார்கள் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்திய அணியில் யோ-யோ டெஸ்டில் தோற்றால் உங்களுக்கு வாய்ப்பு கிடையாது என்ற ட்ரெண்ட் இருந்து வருகிறது. ஆனால் இந்த நிலைமை எனது காலத்தில் இருந்திருந்தால் பல ஜாம்பவான் வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடியிருக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் யோ-யோ டெஸ்டில் தோல்வியை சந்தித்திருப்பார்கள். எங்களது காலத்தில் திறமை மற்றும் நுணுக்கங்களில் மட்டுமே அனைவரது கவனம் இருந்தது. குறிப்பாக யார் சிறப்பாக ரன்கள் அடிக்கிறார் யார் சிறப்பாக செயல்படுகிறார்கள்? என்று மட்டுமே அனைவரும் பார்த்தனர்”

sehwag

“எனவே ஒருவேளை உங்களுக்கு வேகமாக ஓடுபவர்கள் தேவையென்றால் அவர்களை மரத்தான் விளையாட்டில் பயன்படுத்துங்கள். கிரிக்கெட் விளையாட தேவையில்லை என்பதே என்னுடைய நம்பிக்கையாகும். இருப்பினும் இப்போது காலம் மாறிவிட்டது. எங்களது காலங்களில் பேட்டிங், பவுலிங் அல்லது ஃபீல்டிங் என எந்த துறையாக இருந்தாலும் பயிற்சி எடுத்து நுணுக்கங்களில் முன்னேறுவதில் மட்டுமே எங்களது கவனம் இருந்தது. மேலும் உடற்பயிற்சி கூடங்கள் என்னுடைய கேரியரை நீட்டிக்க உதவியதால் மிகவும் முக்கியமானது”

இதையும் படிங்க:அவர் மட்டும் எங்க காலத்துல விளையாடிருந்தா 35 சதங்களை கூட தாண்டிருக்க மாட்டாரு – இந்திய வீரர் பற்றி அக்தர் அதிரடி கருத்து

“ஆனால் அது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறானது. அதாவது உங்களது உடல் ஒத்துழைத்தால் அதிகமான பளுவை தூக்குங்கள். ஆனால் உங்களிடம் முதுகு அல்லது முழங்காலில் பிரச்சனை இருந்தால் தூக்கும் இடையில் லிமிட் வேண்டும். ஆனால் அதை அனைத்தையும் காட்டிலும் திறமை தான் முக்கியமாகும்” என்று கூறினார். அவர் கூறுவது போல அதிகமான உடல் எடையுடன் அர்ஜுனா ரணதுங்கா இலங்கைக்கு உலக கோப்பையும் இன்சமாம்-உல்-ஹக் 10,000 ரன்கள் அடித்த பாகிஸ்தான் வீரராகவும் அபார சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement