2007இல் தோனி அதை செய்வாருன்னு யாருமே எதிர்பாக்கல.. ருதுராஜிடம் அந்த திறமை இருக்கு.. சேவாக் கருத்து

Virender Sehwag 3
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய முதல் 5 போட்டிகளில் 3 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. இந்த வருடம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்த ஜாம்பவான் எம்எஸ் தோனி சாதாரண விக்கெட் கீப்பராக மட்டும் விளையாடி வருகிறார்.

அந்த நிலையில் ருதுராஜ் தலைமையில் இதுவரை சேப்பாக்கத்தில் விளையாடிய 3 போட்டிகளிலும் சென்னை வெற்றி கண்டுள்ளது. இருப்பினும் தோனிக்கு நிகரான அனுபவம் ருதுராஜ் கைக்வாட் பெற்றிருக்கவில்லை. எனவே சாம்பியன் பட்டத்தை தக்க வைப்பது கடினம் என்றாலும் ருதுராஜ் தலைமையில் முதல் சீசனிலேயே பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றால் அதுவே சிஎஸ்கே அணியை பொறுத்த வரை பெரிய வெற்றியாக அமையும்.

- Advertisement -

சேவாக் கருத்து:
இந்நிலையில் 2007 டி20 உலகக் கோப்பையை கேப்டனாக தோனி இந்தியாவுக்கு வென்று கொடுப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை என வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கிட்டத்தட்ட தோனியை போலவே ருதுராஜூம் கேப்டன்ஷிப் பொறுப்பில் அமைதியாக செயல்பட்டு வெற்றிகளை கொண்டு வருவதாக சேவாக் பாராட்டியுள்ளார்.

எனவே தோனிக்கு பின் சிஎஸ்கே அணியை வழி நடத்துவதற்கு அவர் தான் பொருத்தமானவர் என்றும் சேவாக் தெரிவித்துள்ளார். அதனால் இப்படியே செயல்பட்டால் தோனி போல கோப்பையை வெல்லும் தகுதியை ருதுராஜ் கொண்டிருப்பதாக தெரிவிக்கும் சேவாக் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “2021லயே ருதுராஜ் சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று நான் கணித்தேன்”

- Advertisement -

“ஏனெனில் அவர் அந்த அறிகுறிகளையும் திறன்களையும் காட்டினார். நீங்கள் வெற்றிகளை அடிப்படையாக வைத்து அவரை கேப்டனாக பார்க்கலாம் அல்லது அவரிடம் கேப்டன்ஷிப் திறன் இருக்கிறதா என்றும் பார்க்கலாம். என்னை பொறுத்த வரை அவரிடம் அந்த இரண்டும் இருக்கிறது. முதலில் 2007 டி20 உலகக் கோப்பையை தோனி வெல்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை”

இதையும் படிங்க: 2014இல் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற நான் தான் காரணம்.. மனைவி ஷாக்சி பேட்டி

“ஆனால் அதை வென்றதும் எதிர்பார்ப்புகள் அதிகரித்தது. அதனால் தோனியை ஒருநாள் கேப்டனாகவும் நியமிப்பது பற்றி அவர்கள் பேசினார்கள். கைக்வாட் விஷயத்திலும் அதே போல இருக்கிறது. அவருடைய தலைமையில் வெற்றி முடிவுகள் நேரத்திற்கு வரும். ஆனால் கண்டிப்பாக அவர் களத்தில் குளிர்ச்சியாகவும் அமைதியாகவும் இருப்பதற்கான அறிகுறிகளை காட்டியுள்ளார். மேலும் அவர் பவுலர்களை நன்றாக பயன்படுத்துகிறார். எனவே அவர் தான் தற்போது சிஎஸ்கே கேப்டனாக செயல்பட தகுதியான சிறந்த வீரர்” என்று கூறினார்.

Advertisement