2014இல் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற நான் தான் காரணம்.. மனைவி ஷாக்சி பேட்டி

Sakshi Dhoni
- Advertisement -

நட்சத்திர முன்னாள் வீரர் எம்.எஸ். தோனி 2004இல் இந்தியாவுக்காக அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே நிரந்தர இடத்தை பிடிக்கும் அளவுக்கு அசத்தினர். அத்துடன் 2007ஆம் ஆண்டு அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பொறுப்பில் அனைத்து வீரர்களையும் சிறப்பாக வழி நடத்திய அவர் இந்தியாவுக்கு டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்தார்.

அதன் பின் 2010ஆம் ஆண்டு தோனி தலைமையில் வரலாற்றில் முதல் முறையாக டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக முன்னேறிய இந்தியா சொந்த மண்ணில் 28 வருடங்கள் கழித்து 2011 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து 2013 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற தோனி 3 விதமான வெள்ளைப்பந்து ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்தார்.

- Advertisement -

டெஸ்ட்டில் ஓய்வு:
ஆனால் அதே காலகட்டத்தில் சச்சின், டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் ஓய்வு பெற்றதால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி தலைமையில் இந்தியா படுமோசமான தோல்விகளை சந்தித்தது. அப்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2014 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தது அனைவருக்கும் ஆச்சரியமாக அமைந்தது.

அதன் பின் கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் வெற்றிகளை பெற்றுக் கொடுத்து இந்தியாவை 2016 – 2021 வரை உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்க வைத்தது வேறு கதை. இந்நிலையில் திருமண வாழ்க்கையில் கவனம் செலுத்துவதற்காக நீங்கள் குறைந்தது ஒரு ஃபார்மட்டில் ஓய்வு பெற வேண்டும் என்று 2014இல் தோனியிடம் சொன்னதாக அவருடைய மனைவி ஷாக்சி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி இன்ஸ்டாகிராமில் வைரலாகும் வீடியோவில் ஷாக்சி பேசியுள்ளது பின்வருமாறு. “டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விலகிய போது அவர் ஓய்வு பெறப் போகிறார் என்ற குறிப்பு எங்களிடம் இருந்தது. மேலும் “உங்களுக்கு குழந்தை வேண்டுமென்றால் நீங்கள் ஒரு ஃபார்மட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டும். ஏனெனில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடினால் உங்கள் குழந்தையுடன் ரசிக்க நேரம் கிடைக்காது” என்று அவரிடம் நான் சொன்னது நியாபகம் இருக்கிறது”

இதையும் படிங்க: தலைப்பு செய்திக்காக அதைப் பற்றி ஒன்னுமே தெரியாம முட்டாள்தனமா பேசாதீங்க.. விராட் கோலி கோச் பதிலடி

“ஜீவா பிறந்து போது. “இப்போதும் உங்கள் கணவர் வரவில்லையே” என்று அனைவரும் மருத்துவமனையில் என்னிடம் சொன்னார்கள். அதற்கு பரவாயில்லை என்று நான் சொன்னேன். அவருக்கு கிரிக்கெட் முக்கியம் என்றால் எனக்கு தோனி முக்கியம். அவருடைய முன்னுரிமை எதுவோ அதுவே எனது முன்னுரிமை. அவருடைய மனைவியாக நீங்கள் தியாகம் செய்ய வேண்டியுள்ளது என்று பலரும் என்னிடம் கூறினார்கள். இது தியாகம் இல்லை காதல் என்று நான் சொல்வேன். நீங்கள் மனதுக்குள் இருக்கும் போது அதை தியாகம் என்று சொல்ல முடியாது” எனக் கூறினார்.

Advertisement