தலைப்பு செய்திக்காக அதைப் பற்றி ஒன்னுமே தெரியாம முட்டாள்தனமா பேசாதீங்க.. விராட் கோலி கோச் பதிலடி

Rajkumar Sharma
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 316* ரன்கள் குவித்துள்ள அவர் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். இருப்பினும் கிளன் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன் போன்ற மற்ற பேட்ஸ்மேன்கள் போதுமான ரன்கள் அடிக்கவில்லை.

அதே போல விராட் கோலி போராடி அடிக்கும் ரன்களையும் ஆர்சிபி பவுலர்கள் பந்து வீச்சில் எதிரணிக்கு வாரி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் மற்ற வீரர்கள் சிறப்பாக செயல்படத் தவறுவதால் விராட் கோலியின் போராட்டம் பெங்களூரு அணியின் வெற்றிக்கு கை கொடுக்கவில்லை. அதனால் 5 போட்டிகளில் 4 தோல்விகளை பதிவு செய்துள்ள அந்த அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் திண்டாடி வருகிறது.

- Advertisement -

முட்டாள்தனத்திற்கு பதிலடி:
ஆனால் பெங்களூருவின் இந்த தோல்விக்கு குறைவான ஸ்டிரைக் ரேட்டில் மெதுவாக விளையாடும் விராட் கோலி தான் முக்கிய காரணம் என்று விமர்சனங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக ராஜஸ்தானுக்கு எதிராக 67 பந்துகளில் 100 ரன்கள் தொட்ட அவர் ஐபிஎல் வரலாற்றில் மெதுவான சதமடித்த வீரராக சாதனை படைத்தார். அதை வைத்து ஒரு தரப்பு ரசிகர்கள் விராட் கோலி தான் பெங்களூருவின் தோல்விக்கு 100% காரணம் என்று அப்பட்டமாக பேசுகின்றனர்.

இந்நிலையில் விராட் கோலியை பற்றி விமர்சிப்பவர்கள் கிரிக்கெட்டின் அடிப்படை தெரியாதவர்கள் என்று அவருடைய பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இப்படி முட்டாள்தனமாக சொல்பவர்களுக்கு போட்டியின் சூழல், நிலைமை, அணி எப்படி போராடுகிறது என்பதைப் பற்றி தெரியாது என்று நினைக்கிறேன்”

- Advertisement -

“அவர்கள் செய்திகளில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் விளம்பரத்திற்காக மட்டுமே பேசுகின்றனர். நீங்கள் ஒரு சாதாரண வீரரைப் பற்றி பேசினால் அது உங்களை தலைப்புச் செய்திகளில் கொண்டு வருவதில்லை. ஆனால் விராட் கோலி போன்ற ஒருவரைப் பற்றி பேசினால் அது உங்களை தலைப்புச் செய்தியில் கொண்டு வரும். அப்படி பேசுபவர்களை சிலர் இயக்குகின்றனர்”

இதையும் படிங்க: 20 வயதிலேயே ஐபிஎல் வரலாற்றில் தனித்துவ சாதனை.. பஞ்சாப்பை வீழ்த்திய யார் இந்த நிதிஷ் ரெட்டி?

“எனவே ரசிகர்கள் அல்லது உண்மையான ஆய்வாளர்கள் என்ற பெயரில் விமர்சிப்பவர்களை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் கிங் என்பவர் எப்போதும் கிங்’காகவே இருப்பார். ஆனால் கிரிக்கெட்டின் சி என்ற எழுத்துக்கான அர்த்தத்தை தெரிந்த உண்மையான ரசிகர்கள் யாரும் இது போன்ற முட்டாள்தனத்தை செய்ய மாட்டார்கள்” என்று கூறினார்.

Advertisement