20 வயதிலேயே ஐபிஎல் வரலாற்றில் தனித்துவ சாதனை.. பஞ்சாப்பை வீழ்த்திய யார் இந்த நிதிஷ் ரெட்டி?

Nitish Reddy 2
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஒன்பதாம் தேதி நடைபெற்ற 23வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 2 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் வீழ்த்தியது. சண்டிகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 20 ஓவரில் 182/9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 64 (37) ரன்கள் எடுக்க பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதன் பின் 183 ரன்களை சேசிங் செய்த பஞ்சாப்புக்கு ஜானி பேர்ஸ்டோ, கேப்டன் ஷிகர் தவான், சாம் கரண், சிக்கந்தர் ராசா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் கடைசியில் சசாங் சிங் 46* (25) அசுடோஸ் சர்மா 33* (15) ரன்கள் அடித்து போராடியும் பஞ்சாப்பை 180/6 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வென்ற ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமாஏ 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

அசத்தல் சாதனை:
முன்னதாக இந்த போட்டியில் 39/3 என தடுமாறிய போது களமிறங்கிய 20 வயது இளம் வீரர் நித்திஷ் ரெட்டி 4 பவுண்டரி 5 சிக்சருடன் 64 (37) ரன்கள் விளாசி ஹைதெராபாத் 182 ரன்கள் குவிப்பதற்கு முக்கிய பங்காற்றினார். அதே போல பந்து வீச்சில் 3 ஓவர்களை வீசிய அவர் 1 விக்கெட்டை ஃபீல்டிங்கில் 1 கேட்ச்சையும் பிடித்தார்.

இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் 50+ ரன்கள், 1 கேட்ச், 1 விக்கெட் எடுத்த முதல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர் என்ற சாதனையையும் நித்திஷ் ரெட்டி படைத்துள்ளார். அத்துடன் 20 வருடம் 319 நாட்கள் வயதாகும் அவர் ஐபிஎல் போட்டியில் மிகவும் இளம் வயதில் ஒரு போட்டியில் 50+ ரன்கள், 1 கேட்ச், 1 விக்கெட் எடுத்த வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். அப்படி வெற்றியில் ஆல் ரவுண்டராக பங்காற்றிய அவர் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

- Advertisement -

2003 மே 26இல் ஹைதராபாத் மாநிலத்தில் பிறந்த அவர் அண்டர்-19 அளவில் இந்தியா பி அணிக்காக 17 முதல் தர போட்டிகளில் 566 ரன்கள் எடுத்தார். அதே போல 22 லிஸ்ட் ஏ போட்டிகளில் 403 ரன்கள் எடுத்த அவர் பின்னர் தன்னுடைய மாநில அணியான ஆந்திராவுக்கு 2023 ரஞ்சிக் கோப்பையில் 7 போட்டிகளில் 366 ரன்கள் அடித்து 25 விக்கெட்டுகளையும் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்தினார்.

இதையும் படிங்க: துல்லியமான 2 யார்க்கர்.. ஹைதராபாத்தின் 2 ரன் திரில் வெற்றிக்கு வித்திட்ட நடராஜன்.. இதை கவனிச்சீங்களா

அதன் காரணமாக கடந்த வருடம் ஹைதராபாத் அணிக்காக 20 லட்சத்திற்கு வாங்கப்பட்ட அவர் இந்த வருடம் முதல் முறையாக சென்னைக்கு எதிராக பேட்டிங் செய்த கடந்த போட்டியிலேயே 14* (8) ரன்கள் அடித்தார். விராட் கோலியை தனது ரோல் மாடலாக கொண்டிருக்கும் அவர் தற்போது ஐபிஎல் தொடரிலும் ஆல் ரவுண்டராக அசத்தத் துவங்கியுள்ளார்.

Advertisement