199 ரன்னில் இருந்தப்போ என்னை செல்பிஷ்னு சொன்ன அவர் அடுத்த 2 பந்துல அவுட்டானாரு – 2008 பின்னணியை பகிர்ந்த சேவாக்

Sehwag
Advertisement

டெல்லியை சேர்ந்த நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தன்னுடைய அதிரடியான ஆட்டத்தால் உலகில் அனைத்து டாப் பந்து வீச்சாளர்களையும் தெறிக்க விட்டு இந்தியாவுக்கு நிறைய மகத்தான வெற்றிகளை பெற்றுக் கொடுத்த பெருமைக்குரியவர். குறிப்பாக மெதுவாக விளையாட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அதிரடியாக விளையாடி ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்த அவர் 2 முச்சதங்களை அடித்த ஒரே இந்திய வீரராக சாதனை படைத்துள்ளார்.  அப்படி பல ஸ்பெஷலான திறமைகளை கொண்ட வீரேந்திர சேவாக் 90களில் இருக்கும் போது கொஞ்சமும் பயப்படாமல் சிக்ஸர் அடித்து சதத்தை தொடுவதில் உலகப் புகழ் பெற்றவர்.

Sehwag

பொதுவாக வரலாற்றில் சச்சின் உட்பட பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் 90 ரன்களை தொட்டதும் எப்படியாவது சதத்தை அடித்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் சிங்கிள், டபுள் எடுத்து 100 ரன்களை தொடுவார்கள். அதில் பதற்றமடைந்து அவுட்டாகி செல்லும் பல வீரர்களுக்கு மத்தியில் 90, 190, 290 ரன்களில் இருக்கும் போது அதை பவுண்டரி அல்லது சிக்சரை பறக்க விட்டு தொடுவதில் அவருக்கு நிகர் யாரும் கிடையாது. இந்நிலையில் கடந்த 2008ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நடைபெற்ற 2வது போட்டியில் முரளிதரன் போன்ற தரமான பவுலர்களுக்கு எதிராக தாக்குப்பிடிக்க முடியாமல் சச்சின், கங்குலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

செல்பிஷ் வார்த்தை:
இருப்பினும் அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய வீரேந்திர சேவாக் 199* ரன்களில் இருந்த போது 9 விக்கெட் விழுந்ததால் எதிர்ப்புறமிருந்த இசாந்த் சர்மா தாக்குப் பிடிக்க மாட்டார் என்று கருதி சிங்கிள் எடுத்து இரட்டை சதத்தை தொட்டார்.  ஆனால் அப்போது நீங்கள் ஏன் சுயநலமாக சிங்கிள் எடுத்து இரட்டை சதத்தை தொட்டீர்கள் என்று இசாந்த் சர்மா தம்மை கேட்டது கடுப்பாக வைத்ததாக வீரர்கள் சேவாக் தெரிவித்துள்ளார்.

Ishanth

அதனால் அடுத்த பந்தில் சிங்கிள் எடுத்து 201* ரன்கள் எடுத்து ஸ்ட்ரைக் கொடுத்த 2வது பந்தில் இஷாந்த் சர்மா அவுட்டானாதாக தெரிவிக்கும் சேவாக் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “நீங்கள் ரன்கள் அடிக்கும் போது மற்றவர்கள் அடிக்கக்கூடாது என்று நினைப்பது மோசமான எண்ணமாகும். அதனால் நான் எப்போதுமே நானும் எதிரில் இருப்பவரும் ரன்கள் அடிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் தான் வளர்ந்தேன். அதில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதை நம்பினேன்”

- Advertisement -

“அதனால் நான் ஏன் சுயநலமாக இருக்க வேண்டும்? இது பற்றி உங்களுக்கு ஒரு கதையை சொல்கிறேன். ஒரு போட்டியில் நாள் 199 ரன்களில் இருந்த போது இஷாந்த் சர்மா என்னுடைய பார்ட்னராக இருந்தார். முரளிதரன், அஜந்தா மெண்டிஸ் ஆகியோருக்கு எதிராக அவர் தாக்குப் பிடிக்க மாட்டார் என்பது எனக்கு தெரியும். எனவே அந்த இடத்தில் நான் சுயநலமாக நடந்து கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டதால் ஆரம்பத்திலேயே நான் சிங்கிள் எடுத்து 200 ரன்கள் எடுத்து இஷாந்த்துக்கு ஸ்ட்ரைக் கொடுத்திருக்க முடியும். ஆனால் நான் முரளிதரனின் 5 பந்துகளை எதிர்கொண்டு கடைசிப்பந்தில் சிங்கள் எடுத்தேன்”

Sehwag

“இருப்பினும் அப்போது என்னிடம் வந்த இஷாந்த் சர்மா “பைய்யா நானும் பேட்டிங் செய்வேன் என்பதால் நீங்கள் எதற்காகவும் பயப்பட தேவையில்லை” என்று கூறினார். அதற்கு சரி என்று பதிலளித்த நான் 200 ரன்கள் அடித்த பின் சிங்கிள் எடுத்து 201 ரன்கள் எடுத்து ஸ்ட்ரைக்கை அவருக்கு கொடுத்தேன். ஆனால் அடுத்த 2 பந்துகளை தாக்குப் பிடிக்க முடியாமல் அவர் அவுட்டானார். அப்போது நீங்கள் எதிரணி பவுலர்களை விளையாடி விட்டீர்களா? என்று அவரிடம் கோபத்தை வெளிப்படுத்தினேன். அந்த இடத்தில் நான் அணிக்காக அதிக ரன்கள் குவிக்க நினைத்தேன்”

இதையும் படிங்க:அந்த இளம் வீரர்களை நம்புங்க ஆனா கேஎல் ராகுலை நம்பிடாதீங்க – டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பு பற்றி சபா கரீம் அதிரடி

“ஆனால் இஷாந்த் சர்மா தம்மால் விளையாட முடியும் என்று நினைத்தார். மேலும் 200 ரன்கள் எனக்கு முக்கியம் கிடையாது. மாறாக அதிக பந்துகளை எதிர்கொண்டு அணிக்காக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். எனவே நான் சுயநலமாக நடந்து கொள்ளவில்லை” என்று கூறினார். அந்த போட்டியில் 201* ரன்கள் அடித்த சேவாக் 170 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

Advertisement