அந்த இளம் வீரர்களை நம்புங்க ஆனா கேஎல் ராகுலை நம்பிடாதீங்க – டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பு பற்றி சபா கரீம் அதிரடி

Saba Karim
- Advertisement -

2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி வரும் ஜூன் 7 முதல் 11 வரை லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதற்காக கடந்த 2021 முதல் நடைபெற்று வந்த லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள் ஃபைனலில் மோதுவதற்கு தகுதி பெற்றுள்ளன. அதில் குறிப்பாக கடந்த 2021ஆம் ஆண்டு இதே இங்கிலாந்தின் சௌதம்டன் நகரில் நடைபெற்ற ஃபைனலில் விராட் கோலி தலைமையில் சொதப்பலாக செயல்பட்டு நியூசிலாந்திடம் கோப்பையை கோட்டை விட்ட இந்தியா இம்முறை ரோகித் சர்மா தலைமையில் எப்படியாவது சாம்பியன் பட்டத்தை வென்று 2013க்குப்பின் ஒரு ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போராட உள்ளது.

KS Bharat 1

அதற்கு இங்கிலாந்து கால சூழ்நிலைக்கு தகுந்தார் போல் சரியான தரமான 11 பேர் அணியை தேர்வு செய்வது அவசியமாகிறது. அந்த நிலையில் இங்கிலாந்தில் ஏற்கனவே இதற்கு முன் 2 சதங்களை அடித்து தோனியால் படைக்க முடியாத சாதனைகளை செய்துள்ள ரிஷப் பண்ட் காயத்தால் விளையாட மாட்டார் என்ற நிலைமையில் அவருக்கு பதில் நடைபெற்று முடிந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் தேர்வான கேஎஸ் பரத் இந்திய மைதானங்களிலேயே சுமாராக விக்கெட் கீப்பிங் செய்து பேட்டிங்கிலும் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை.

- Advertisement -

தப்பு பண்ணிடாதீங்க:
அதனால் கடந்த 2021ஆம் ஆண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடக்க வீரராக சதமடித்து 2018 சுற்றுப்பயணத்தில் இதே லண்டன் ஓவல் மைதானத்தில் மிடில் ஆர்டரில் சதமடித்து 149 ரன்கள் குவித்த கேஎல் ராகுல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விக்கெட் கீப்பராக விளையாடவேண்டும் என்று தினேஷ் கார்த்திக், சுனில் காவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். குறிப்பாக தற்போது பார்மின்றி தவித்தாலும் க்ளாஸ் மற்றும் இங்கிலாந்தில் அசத்திய அனுபவம் கொண்ட ராகுல் நிச்சயம் ஃபைனலில் கோப்பையை வென்று கொடுப்பார் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

KL Rahul Sunil Gavaskar

இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சுமாராக செயல்பட்டு வரும் ராகுலை விட தற்போது தான் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்துள்ள கேஎஸ் பரத்துக்கு நம்பி ஃபைனலில் வாய்ப்பு கொடுக்க வேண்டுமென முன்னாள் வீரர் சபா கரீம் கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக சீனியர் வீரர்களால் பல தோல்விகளை சந்தித்து இளம் வீரர்களை நோக்கி நகர்ந்துள்ள இந்தியா இந்த முக்கிய போட்டியில் பரத் போன்ற இளம் வீரரை நம்பாமல் ராகுலுக்கு வாய்ப்பு கொடுத்து தவறு செய்த விடக்கூடாது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இவை அனைத்தும் அணி நிர்வாகத்தை பொறுத்தது. ஆனால் சமீப காலங்களில் இந்திய அணி நிர்வாகம் இளம் வீரர்களை நோக்கி நகர்ந்துள்ளது. அவர்களது இடத்திற்கு இந்திய அணி நிர்வாகம் பாதுகாப்பு கொடுக்க நினைக்கிறது. குறிப்பாக அடுத்த தலைமுறையை வளர்க்கும் சூழலை அவர்கள் உருவாக்கியுள்ளனர். அதனால் சில சுமாரான செயல்பாடுகளுக்காக அவர்கள் கடினமான முடிவை எடுப்பதில்லை. ஏனெனில் அவர்கள் கடினமாக போராடி அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள இளம் வீரர்களை நம்புவதாக முடிவெடுத்துள்ளனர்”

Karim

“எனவே கேஎஸ் பரத்துக்கு இந்திய அணி நிர்வாகம் இன்னும் அதிகமான வாய்ப்பு கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இங்கிலாந்தில் இருக்கும் கடினமான சூழ்நிலைகள் அவரைப் போன்ற இளம் விக்கெட் கீப்பருக்கு சவாலை கொடுக்கும். எனவே அவர் சில அம்சங்களில் முன்னேற வேண்டியுள்ளது. ஆனால் முதல் தரம், இந்தியா ஏ என உள்ளூர் அளவில் பல சவால்களைக் கடந்து இந்தளவுக்கு வந்துள்ள அவருக்கு நாம் தேவையான வாய்ப்புகளை கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:IND vs AUS : முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா ஏன் விளையாடல தெரியுமா? – வெளியான உண்மை காரணம்

அவர் கூறுவது போல ஏற்கனவே பேட்டிங்கில் திண்டாடும் ராகுல் கடந்த டிசம்பரில் விக்கெட் கீப்பராக எளிதான கேட்ச்சை கோட்டை விட்டது 2 – 1 (3) என்ற கணக்கில் வங்கதேசத்திடம் இந்தியாவுக்கு அவமான தோல்வி பெற்று கொடுத்தது. எனவே உள்ளூர் அளவில் பல சவால்களை கடந்து போராடி வந்துள்ள பரத்துக்கு 4 போட்டிகளுடன் வாய்ப்பை நிறுத்தாமல் ஃபைனலில் நம்பி தைரியமாக வாய்ப்பு கொடுப்பது வெற்றியை பெற்றுக் கொடுக்கலாம்.

Advertisement