2007 பாகிஸ்தானுக்கு எதிரான பவுல் அவுட்டில் அந்த ஐடியாவை தோனிக்கு நான் தான் கொடுத்தேன் – பின்னணியை பகிர்ந்த சேவாக்

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளாக இருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டிகள் பரபரப்பாக இருக்கும் என்பதாலேயே அது உலக அளவில் புகழ்பெற்றதாக இருக்கிறது. குறிப்பாக கிரிக்கெட்டை கௌரவமாக கருதி அதில் வெற்றி காண்பதற்கு இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் போராடுவார்கள் என்பதால் இவ்விரு அணிகள் மோதும் உலகக்கோப்பை போட்டிகள் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அந்த வரிசையில் கடந்த டி20 உலக கோப்பையில் தனி ஒருவனாக மகத்தான இன்னிங்ஸ் விளையாடிய விராட் கோலி 82* ரன்கள் விளாசி பாகிஸ்தானை வீழ்த்தியது காலத்திற்கும் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது.

அதை விட தென்னாபிரிக்காவில் நடைபெற்ற வரலாற்றின் முதல் உலக கோப்பையில் அனல் பறந்த ஃபைனலில் மிஸ்பா போராட்டத்தையும் தாண்டி கடைசி பந்தில் பாகிஸ்தானை வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றதை யாராலும் மறக்க முடியாது. அதே போல அந்த தொடரில் பாகிஸ்தானை எதிர்கொண்ட தன்னுடைய முதல் போட்டியே டையில் முடிந்ததால் வித்தியாசமான பவுல் அவுட் முறையில் இந்தியா வென்றது இப்போதும் ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கிறது. அப்போட்டியில் தாங்கள் எடுத்த ரன்களை எடுக்க விடாமல் கடைசி பந்தில் ரன் அவுட் செய்த இந்தியா போராடி டை செய்தது.

- Advertisement -

சேவாக் ஐடியா:
அதைத்தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக வரலாற்றிலேயே முதல் முறையாக பவுல் அவுட் முறை கொண்டுவரப்பட்டது. அதில் வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங், ராபின் உத்தப்பா ஆகிய 3 இந்திய பவுலர்களும் சரியாக ஸ்டம்ப்பை போல்டாக்கிய நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த யாருமே 3 வாய்ப்புகளில் ஸ்டம்ப்களை கொஞ்சம் கூட உரசாததால் இந்தியா அற்புதமான வெற்றி பெற்றது. அந்த சமயத்தில் இந்திய பவுலர்கள் குறி பார்த்து அடிப்பதற்கு உதவியதாக ஸ்டம்ப்களுக்கு பின்னால் கேப்டன் தோனி விக்கெட் கீப்பராக மண்டியிட்டு அமர்ந்த டெக்னிக்கை பாகிஸ்தானின் கம்ரான் அக்மல் பின்பற்ற தவறினார்.

அந்த வகையில் தோனியின் அந்த முடிவு பலரையும் ஆச்சரியப்பட வைத்து பாராட்ட வைக்கிறது. இந்நிலையில் அந்த சமயத்தில் பவுல் அவுட்டில் முதல் பந்தை தாம் வீசுவதாக தோனிக்கு ஆலோசனை கொடுத்ததாக வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். குறிப்பாக முதல் கோணம் முற்றிலும் கோணமாகி விடக்கூடாது என்பதற்காக பவுலர்களை விட பேட்ஸ்மேனான தாம் முதல் பந்தை வீசுவதற்கு கேட்ட போது தோனியும் அனுமதி கொடுத்ததாக தெரிவிக்கும் அவர் அந்த உலகக்கோப்பையில் பவுல் அவுட் செய்வதற்காக இந்திய வீரர்கள் எடுத்த பயிற்சிகளை பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“முதல் முறையாக அந்தப் போட்டி தான் பவுல் அவுட்டில் முடிந்தது. அப்போது தோனியிடம் நான் முதலாவதாக பந்து வீசுகிறேன் என்று தெரிவித்தேன். குறிப்பாக ஸ்டம்ப்களை குறி பார்த்து அடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகமாக இருந்ததால் நான் அவ்வாறு கூறினேன். அத்துடன் பவுலர்களிடம் முதல் பந்தை கொடுக்காதீர்கள் என்று தோனியிடம் கேட்டுக்கொண்டேன். அதற்கு அவர் ஏன் என்று கேட்டார். அப்போது பவுலர்கள் பதற்றத்தில் தங்களுடைய ரன் அப்பில் சொதப்புவதற்கு வாய்ப்புள்ளதாக அவருக்கு பதிலளித்தேன்”

“அதை தொடர்ந்து நாங்கள் ஏற்கனவே அதற்காக பயிற்சிகளை எடுத்திருந்ததால் அதை வெற்றிகரமாக செய்தோம். அதை வேறு எந்த அணியும் வெற்றிகரமாக செய்ததாக நான் நினைக்கவில்லை. அந்த உலகக் கோப்பையில் போட்டி டையில் முடிந்தால் பவுல் அவுட் கடைபிடிக்கப்படும் என்ற புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டது. அப்போது நாங்கள் எப்படி டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டி டையில் முடியும்? என்று குழப்பமாக இருந்தோம்”

இதையும் படிங்க:WTC Final : இங்கிலாந்தில் மட்டும் உங்களையே நீங்க நம்பக்கூடாது, அதுக்கு நாங்க தயாரா இருக்கோம் – ஃபைனலுக்கு முன் ரோஹித் பேட்டி

“இருப்பினும் வெங்கடேஷ் பிரசாத், ராபின் சிங் ஆகியோர் தினம்தோறும் குறிப்பிட்ட சில நேரங்களில் பந்து வீசி ஸ்டம்ப்களை அடியுங்கள் யார் அதிகமாக அடிக்கிறீர்கள் என்று பார்ப்போம் என சொன்னார்கள். அப்போது பவுலர்களை விட நான் சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா, ரோகித் சர்மா போன்ற பேட்ஸ்மேன்கள் தான் ஸ்டம்ப்புகளை அதிகமாக அடித்தோம்” என்று கூறினார்.

Advertisement