பாத்து பத்திரமா போய்ட்டு வாங்க.. மன்னிச்சுடுங்க ஸ்ரீலங்கா.. பாகிஸ்தானை ஓப்பானாக கலாய்த்த சேவாக்

Virender Sehwag 5
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 1992 போல சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைக்கும் முனைப்புடன் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் களமிறங்கியது. குறிப்பாக எல்லை பிரச்சினை காரணமாக 2016க்குப்பின் 7 வருடங்கள் கழித்து முதல் முறையாக இந்தியாவுக்கு வந்த அந்த அணிக்கு ரசிகர்கள் இந்திய வீரர்களுக்கு நிகராக அமோகமான வரவேற்பு கொடுத்தனர்.

அதை தொடர்ந்து ஹைதராபாத் பிரியாணியை சுவைத்த பாகிஸ்தான் அணியினர் நெதர்லாந்து மற்றும் இலங்கைக்கு எதிராக எளிதான வெற்றிகளை பெற்று நல்ல துவக்கத்தை பெற்றனர். ஆனால் பரம எதிரி இந்தியாவுக்கு எதிராக 191 ரன்களுக்கு சுருண்டு உலகக் கோப்பையில் தொடர்ந்து 8வது முறையாக தோல்வியை சந்தித்த அந்த அணி ஆஸ்திரேலியாவிடமும் டேவிட் வார்னர் கேட்ச்சை கோட்டை விட்டு தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

கலாய்த்த சேவாக்:
அதை விட கத்துக்குட்டியான ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வரலாற்றில் முதல் முறையாக தோற்ற பாகிஸ்தான் சென்னையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு விக்கெட் வித்தியாசத்தில் கடுமையாக போராடி வெற்றியை நழுவ விட்டது. இருப்பினும் அதன் பின் இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக வென்றதால் கொஞ்சம் தன்னம்பிக்கையை பெற்ற அந்த அணியின் செமி ஃபைனல் கனவு தற்போது 99.99% தகர்ந்துள்ளது.

அதாவது நேற்று இலங்கையை தோற்கடித்த நியூசிலாந்து 99% செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது. அதன் காரணமாக இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய கடைசி போட்டியில் 287 ரன்கள் அல்லது 284 பந்துகள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே செமி ஃபைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற அசாத்தியமான சூழ்நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது. அதனால் அந்த அணி லீக் சுற்றுடன் வெளியேறுவது உறுதியாகியுள்ளதால் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

- Advertisement -

ஏனெனில் எப்போதுமே விமர்சிப்பதை வழக்கமாக வைத்துள்ள பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் இத்தொடரில் அதிக ஸ்விங்கை பயன்படுத்துவதற்காக ஐசிசி இந்தியாவுக்கு புதிய பந்துகளை கொடுப்பதாகவும், டிஆர்எஸ் விதிமுறைகள் சாதகமாக மாற்றுவதாகவும் விமர்சித்தனர். இந்நிலையில் பத்திரமாக நாட்டுக்கு செல்லுங்கள் என்று பாகிஸ்தானை வீரேந்திர சேவாக் கலாய்த்துள்ளார்.

இதையும் படிங்க: எல்லாரும் நினைக்கிற மாதிரி ஈஸி கிடையாது.. இந்தியாவுடன் செமி ஃபைனலில் மோதுவது பற்றி வில்லியம்சன் பேட்டி

அத்துடன் பாகிஸ்தான் செமி ஃபைனல் செல்ல நியூசிலாந்தை எப்படியாவது இலங்கை தோற்கடிக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் அந்நாட்டு ரசிகர்கள் இலங்கைக்கு ஆதரவு கொடுத்தனர். ஆனால் அப்போட்டியில் பாகிஸ்தானை போல் இலங்கை விளையாடி காலை வாரியாதாகவும் கலாய்க்கும் சேவால் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “பாகிஸ்தான் ஜிந்தாபாக் (உயிருடன் தப்பியுங்கள்). நாட்டுக்கு விமானத்தில் பத்திரமாக செல்லுங்கள். பிரியாணி மற்றும் வசதிகள் நன்றாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். பாகிஸ்தானுக்காக பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எந்த அணிக்கெல்லாம் ஆதரவு கொடுக்கிறார்களோ அவர்கள் பாகிஸ்தானை போலவே விளையாடுகிறார்கள். மன்னிக்கவும் ஸ்ரீலங்கா” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement