இதை விட நல்ல சான்ஸ் கிடைக்காது.. இது தரம்சாலா கிடையாது.. செமி ஃபைனல் பற்றி இந்தியாவை எச்சரித்த ட்ரெண்ட் போல்ட்

trent boult
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 8 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று செமி ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. அதே போல லீக் சுற்றில் தேவையான வெற்றிகளை பெற்று தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளும் அரையிறுதி சுற்றின் 2வது போட்டியில் மோதுவதற்கு தகுதி பெற்றுள்ளன.

அந்த நிலைமையில் நேற்று இலங்கையை தோற்கடித்த நியூசிலாந்து நவம்பர் 15ஆம் தேதி மும்பையில் நடைபெறும் முதல் செமி ஃபைனல் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்வதற்கு 99% தகுதி பெற்றுள்ளது. அதனால் பாகிஸ்தான் இத்தொடரிலிருந்து வெளியேறியதை நினைத்து மகிழ்ச்சியடையும் இந்திய ரசிகர்கள் நியூசிலாந்தை எதிர்கொள்வதை நினைத்து கலக்கமடைந்துள்ளனர் என்று சொல்லலாம்.

- Advertisement -

நல்ல சான்ஸ்:
ஏனெனில் 2019 உலகக்கோப்பை செமி ஃபைனலில் காலத்திற்கும் மறக்க முடியாத அளவுக்கு நெஞ்சை உடைக்கும் தோல்வியை பரிசளித்த நியூசிலாந்து 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலிலும் விராட் கோலி தலைமையிலான இந்தியாவை தோற்கடித்ததை ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை. இருப்பினும் இம்முறை அட்டகாசமான ஃபார்மில் இருக்கும் இந்தியா கடந்த சில வாரங்களுக்கு முன் தரமசாலாவில் நடைபெற்ற லீக் போட்டியில் 20 வருடங்கள் கழித்து நியூசிலாந்தை ஐசிசி தொடர்களில் தோற்கடித்ததை போல் இம்முறை நிச்சயம் வெல்லும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

இந்நிலையில் தரம்சாலாவை விட செமி ஃபைனல் நடைபெறும் மும்பை மைதானம் தங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை கொண்டிருப்பதால் நிச்சயம் வெல்வோம் என்று இந்தியாவுக்கு எப்போதுமே அச்சுறுத்தலை கொடுக்கக்கூடிய ட்ரெண்ட் போல்ட் தெரிவித்துள்ளார். அதற்கான திட்டங்களும் தயாராக இருப்பதாக தெரிவிக்கும் அவர் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் உலகக்கோப்பையில் வீழ்த்துவதை விட வேறு நல்ல வாய்ப்பு கிடைக்காது என்று இலங்கை போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்தியா தற்போது கிரிக்கெட்டை நேர்மறையான பாணியில் விளையாடி வருகிறார்கள். ஆனால் அவர்களை எப்படி சமாளிக்க போகிறோம் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கப் போகிறோம். அந்த சவாலில் வாய்ப்பும் மிகுந்த உற்சாகமும் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். 1.5 பில்லியன் மக்கள் முன்னிலையில் இந்தியாவை அவர்களுடைய சொந்த மண்ணில் எதிர்கொள்வதை விட பெரிய வாய்ப்பு இருக்காது”

இதையும் படிங்க:பாகிஸ்தான் செமி ஃபைனல் செல்ல இதான் ஒரே வழி.. சிரிக்க வைக்கும் வாசிம் அக்ரம் ஐடியா

“குறிப்பாக சொந்த மண்ணில் உச்சகட்ட ஃபார்மில் நல்ல கிரிக்கெட்டை விளையாடி வரும் நாட்டுக்கு எதிராக வெற்றி காண்பதை விட உங்களுக்கு நல்ல கதை இருக்காது. இந்தியாவுக்கு எதிராக நாங்கள் நிறைய விளையாடியுள்ளோம். அவர்களுடைய வீரர்கள் மற்றும் இங்குள்ள சூழ்நிலைகளையும் நாங்கள் நன்கு அறிவோம். மேலும் மும்பை நல்ல மைதானம் என்று வரலாறு சொல்கிறது. குறிப்பாக தரம்சாலா மைதானத்தில் இருந்ததை விட இங்கு வித்தியாசமான கால சூழ்நிலைகளும் வசதிகளும் இருக்கும். எனவே இந்த போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம்” என்று கூறினார்.

Advertisement