நான் இப்போ சொல்றது இதுதான். அரையிறுதிக்கு தகுதிபெறப்போகும் 4 அணிகள் இதுதான் – சேவாக் கணிப்பு

Sehwag
- Advertisement -

இந்தியாவில் அக்டோபர் 5-ஆம் தேதி கோலாகலமாக துவங்கிய ஐசிசி-யின் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் இந்தியாவில் உள்ள 10 மைதானங்களில் நடைபெற உள்ள வேளையில் இந்த போட்டியில் இந்த தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லப் போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் இன்று தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்தும் அணியும், நெதர்லாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணியும் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கினாலும் தங்களது முதல் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 282 ரன்கள் குவித்தும் அந்த அணி தோல்வியை சந்தித்துள்ளது அவர்களது பலவீனத்தை வெளிக்காட்டுவதாக உள்ளது.

இந்நிலையில் இந்த தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் அணிகள் குறித்து ஏற்கனவே பேசியிருந்த இந்திய அணியின் முன்னாள் வீரேந்திர சேவாக் : தற்போது மீண்டும் அரையிறுதி சுற்றுற்கு தகுதி பெறும் அணிகள் குறித்த தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

நான் ஏற்கனவே இங்கிலாந்து அணியை அரையிறுதிக்கு தகுதிபெறும் அணி என்று குறிப்பிட்டு இருந்தேன். தற்போது இந்த போட்டியில் அவர்களை தோல்வியை சந்தித்து இருந்தாலும் என்னை பொறுத்தவரை நான் இன்னும் அவர்களை முழுமையாக நம்புகிறேன். இனிவரும் போட்டிகளில் இரண்டில் அவர்கள் தோற்றாலும் அரையிறுதிக்கு நிச்சயமாக வருவார்கள்.

இதையும் படிங்க : இன்னும் 36 மணிநேரம் டைம் இருக்கு. சுப்மன் கில் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட – ராகுல் டிராவிட்

குறிப்பாக இன்னும் சில தவறுகள் இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்டாலும் அதனை அவர்களால் சரி செய்து அரையிறுதிக்கு முன்னேற முடியும். அதே போன்று தற்போது நியூசிலாந்து அணி விளையாடுவது பார்க்கும்போது அவர்களும் ஈடு கொடுத்து அரையிறுதிக்கு போட்டி போடும் அணியாகவே இருப்பதாக சேவாக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement