இன்னும் 36 மணிநேரம் டைம் இருக்கு. சுப்மன் கில் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட – ராகுல் டிராவிட்

Dravid-and-Gill
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் விளையாட தயாராகி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி தங்களது முதலாவது போட்டியில் அக்டோபர் 8-ஆம் தேதி ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருக்கிறது.

இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ள வேளையில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடித்து விளையாடுவார்கள்? என்கிற எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் கடந்த 2019-ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது இந்திய மண்ணில் இந்து தொடர் நடைபெற உள்ளதால் இந்திய அணியே கோப்பையை வெல்லும் என்று பலராலும் பேசப்பட்டு வரும் வேளையில் இந்த தொடரில் இந்திய அணி தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று அனைவரும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த தொடரின் முதலாவது போட்டியில் துவக்கவீரர் சுப்மன் கில் பங்கேற்பதில் சிக்கல் இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியது. அதன்படி சென்னை வந்த சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் அவரால் பயிற்சி ஈடுபட முடியவில்லை என்று கூறப்பட்டது.

- Advertisement -

அதோடு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் என்று கூறப்பட்ட வேளையில் இந்திய அணியில் தலைமைப் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் அவரது நிலைமை குறித்து தற்போது தெளிவான கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

இதையும் படிங்க : பாகிஸ்தான் அணிக்கு எதிராக அசத்தலான சாதனையை பதிவு செய்த நெதர்லாந்து வீரர் – விவரம் இதோ

சுப்மன் கில் நேற்று இருந்ததை விட இன்று நலமாக இருக்கிறார். அவரது உடல் நிலையை மருத்துவ குழு கண்காணித்து வருகிறது. நாளை நடைபெறும் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான போட்டியில் இருந்து நாங்கள் இன்னும் அவரை முழுவதுமாக விலக்கவில்லை. இன்னும் 36 மணி நேரம் மீதம் உள்ளதால் அவர் எப்படி உணருகிறார் என்பதை பொருத்தே அவரது இடம் தேர்வு செய்யப்படும் என டிராவிட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement