டி20 உ.கோ : விராட் கோலிக்கு நோ, தனது கனவு முதல் 3 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்த சேவாக் – யார்யார் பாருங்க

Sehwag
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வந்த இந்தியா 2 – 2 என்ற கணக்கில் ஆரம்பத்தில் பின் தங்கினாலும் அதன்பின் அற்புதமாக செயல்பட்டு சமன் செய்தது. அதைத்தொடர்ந்து அயர்லாந்துக்கு சென்றுள்ள இந்தியா அந்த அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. அந்த தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக ஜூலை 1இல் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பங்கேற்பதால் ஐபிஎல் 2022 கோப்பையை வென்ற ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் இந்தியா விளையாடி வருகிறது.

chahal deepak hooda IND vs IRE

- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த அடுத்தடுத்த தொடர்களில் திறமையான வீரர்களுக்கு தேவையான வாய்ப்பளித்து அதில் தரமானவர்களை கண்டறிய வேண்டிய பொறுப்பில் இந்திய அணி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே சமீபத்திய ஐபிஎல் தொடரில் அசத்திய உம்ரான் மாலிக் போன்றவர்களுடன் ருதுராஜ் கைக்கவாட், இஷான் கிசான், தீபக் ஹூடா போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஸ்டார் ரிட்டர்ன்ஸ்:
அதேபோல் வயதானாலும் தரத்தில் ஜொலிக்கும் தினேஷ் கார்த்திக், புவனேஸ்வர் குமார் போன்ற வீரர்கள் ஏற்கனவே ஐபிஎல் மற்றும் தென் ஆப்ரிக்க தொடரில் அற்புதமாக செயல்பட்டு கிட்டத்தட்ட டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தங்களது இடத்தை உறுதி செய்து விட்டனர். இதுபோக அடுத்ததாக இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக டி20 தொடர்களில் பங்கேற்கும் இந்தியா ஆசிய கோப்பையில் களமிறங்குகிறது. இந்த அடுத்தடுத்த தொடர்களில் தொடர்ச்சியாக மிகச் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு மட்டுமே டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சந்தேகமற்ற வாய்ப்பு கிடைக்க உள்ளது.

Dinesh-Karthik

ஏனெனில் கேப்டன் ரோகித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் ஏற்கனவே முதன்மை வீரர்களாக தேர்வு செய்யப்படுவது 100% உறுதியாகியுள்ளது. எனவே உலக கோப்பை அணியில் அந்த ஸ்டார் வீரர்கள் திரும்பும்போது தென்னாபிரிக்கா, அயர்லாந்து போன்ற தொடர்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டாலும் இஷான் கிசான், தீபக் ஹூடா போன்ற வீரர்களுக்கு 11 பேர் அணியில் இடம் கிடைக்காது. வேண்டுமானால் பேக் அப் வீரர்களாக பெஞ்சில் அமர்ந்து முக்கிய வீரர்கள் காயமடைந்தால் விளையாடும் வாய்ப்புக்காக காத்திருக்கலாம்.

- Advertisement -

சேவாக்கின் டாப் 3:
அதிலும் ஐபிஎல் 2022 தொடரில் சுமாராக செயல்பட்டு கடுமையான விமர்சனங்களை சந்தித்த இஷான் கிசான் இந்தியாவுக்காக மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து டி20 உலக கோப்பையில் விளையாடும் அளவுக்கு பெரிய ரன்களை எடுத்துள்ளார். சொல்லப் போனால் 2022 சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய பேட்ஸ்மேன்களின் பட்டியலில் அவர் தான் (408) முதலிடத்தில் உள்ளார். அதுபோக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிக இளம் வயதிலும் அதிவேகமாகவும் 500 ரன்களை கடந்த 2-வது வீரர் என்ற சாதனையையும் அவர் சமீபத்தில் படைத்தார். எனவே ரோஹித் சர்மா – கேஎல் ராகுல் ஆகிய தொடக்க வீரர்கள் காயமடைந்தால் களமிறங்கும் பேக் அப் வீரராக அவர் தனது இடத்தை ஏறத்தாழ உறுதி செய்துள்ளார்.

ishan kishan 2

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டிங் அதாவது முதல் 3 இடங்களில் விளையாடப் போகும் தன்னுடைய கனவு பேட்ஸ்மேன்களை முன்னாள் இந்தியா அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் தேர்வு செய்துள்ளார். தற்சமயத்தில் ரோகித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி ஆகிய மூவரே இந்திய டாப் ஆர்டரில் விளையாட போகும் வீரர்களாக பார்க்கப்படுகின்றனர். ஆனால் கடந்த 3 வருடங்களாக சர்வதேச அளவில் சதமடிக்க முடியாமல் திணறி வரும் விராட் கோலி சமீபத்திய ஐபிஎல் தொடரில் வரலாற்றில் முதல்முறையாக 3 கோல்டன் டக் அவுட்டானார்.

- Advertisement -

அப்படிப்பட்ட பார்மின்றி தவிக்கும் அவரை கண்டுக்காத வீரேந்திர சேவாக் இளமையுடனும் துடிப்புடனும் பேட்டிங் செய்வது வரும் இஷான் கிஷனை ரோகித் சர்மாவுடன் இடது – வலது கை ஓபனிங் தொடக்க ஜோடியாக தேர்வு செய்துள்ளார். இதுபற்றி சோனி தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

Sehwag

“டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாட வேண்டுமென்று பார்த்தால் இந்தியாவுக்கு நிறைய பேர் உள்ளனர். இருப்பினும் நான் ரோகித் சர்மா, இஷான் கிசான், கேஎல் ராகுல் ஆகிய மூவரை ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் விளையாடப் போகும் டாப் 3 பேட்ஸ்மேன்களாக தேர்வு செய்வேன்.

இதையும் படிங்க : IND vs IRE : போராடிய அயர்லாந்து, கடைசி ஓவரில் மிரட்டிய உம்ரான் மாலிக், இந்தியா த்ரில் வைட்வாஷ் வெற்றி பெற்றது எப்படி – முழுவிவரம்

ரோஹித் சர்மா – இஷான் கிசான் என்ற வலது – இடது கை காம்பினேஷன் முக்கியமானது. இஷான் மற்றும் ராகுல் ஆகியோர் உலககோப்பையில் சுவாரசியமானவர்களாக இந்தியாவின் வெற்றிக்கு செயல்படுவார்கள்” என்று கூறினார்.

Advertisement