2023 உ.கோ தொடரில் விளையாடும் தனது டாப் 5 கனவு வீரர்களை வெளியிட்ட வீரேந்தர் சேவாக் – லிஸ்ட் இதோ

Virender Sehwag
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் பட்டத்தை தீர்மானிக்க போகும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் துவங்க உள்ளது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் மட்டுமே நடைபெறும் இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் மொத்தம் 48 போட்டிகளில் மோத உள்ளன. அதில் சொந்த மண்ணில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வென்று சரித்திரம் படைக்கும் என்று எதிர்பார்ப்பு உச்சமாக காணப்படுகிறது.

அதற்கு இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மிகச் சிறப்பாக செயல்படுவது அவசியமாகிறது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ள நிறைய வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவின் கால சூழ்நிலைகளை தெரிந்து வைத்திருப்பதால் இந்த உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு பெரிய சவாலை கொடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

சேவாக்கின் டாப் 5:
இந்நிலையில் இத்தொடரில் சிறந்து செயல்படப்போகும் தம்முடைய டாப் 5 கனவு வீரர்களை விரேந்திர சேவாக் தேர்வு செய்துள்ளார். பாபர் அசாம், மிட்சேல் ஸ்டார்க் போன்ற நட்சத்திரங்களை தேர்வு செய்யாத அவர் தேர்ந்தெடுத்துள்ள 5 கிரிக்கெட் வீரர்கள் பின்வருமாறு.

1. விராட் கோலி: முதலாவதாக இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலி தொடரில் சிறப்பாக செயல்படுவார் என்று சேவாக் கணித்துள்ளார். குறிப்பாக டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளை விட ஒருநாள் கிரிக்கெட்டில் ஏற்கனவே 46 சதங்கள் அடித்து வேகமாக 10000 ரன்கள் அடித்த வீரராக உலக சாதனை படைத்துள்ள அவர் இத்தொடரில் சொந்த மண்ணில் அசத்துவார் என்று சேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

2. ரோஹித் சர்மா: அதற்கடுத்தபடியாக ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்களை அசால்டாக அடித்து 2019 உலகக்கோப்பையில் 5 சதங்கள் அடித்து மாபெரும் உலக சாதனை படைத்துள்ள தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்தியா கோப்பையை வெல்வதற்கு போராடுவார் என்றும் சேவாக் கூறியுள்ளார்.

3. டேவிட் வார்னர்: அதே போல ஆஸ்திரேலியாவின் நட்சத்திர துவக்க வீரர் வார்னர் ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவத்தால் இத்தொடரில் அசத்துவார் என்று சேவாக் உறுதியான நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

4. கிளன் பிலிப்ஸ்: அவர்களுடன் நியூசிலாந்தின் வளர்ந்து வரும் அதிரடி வீரரான கிளன் பிலிப்ஸ் கடத்த டி20 உலக கோப்பையில் அசத்தியதை போல் இம்முறையும் சிறப்பாக செயல்படுவார் என்று சேவாக் கூறியுள்ளார்.

5. ஜஸ்ப்ரித் பும்ரா: இந்திய பவுலிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் பும்ராவை அவர் தம்முடைய ஒரே பவுலராக இந்த பட்டியலில் தேர்ந்தெடுத்துள்ளார். குறிப்பாக காயத்திலிருந்து குணமடைந்து வந்துள்ள பும்ரா இத்தொடரில் கருப்பு குதிரையாக செயல்பட்டு வெற்றிக்கு போராடுவர் என்று சேவாக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 2024 ஜனவரியில் நடக்கும் இந்திய டெஸ்ட் தொடரிலிருந்து விலகுகிறாரா? இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் – அவரே அளித்த பேட்டி

இந்த பட்டியலை ஐசிசி இணையத்தில் தேர்ந்தெடுத்த அவர் கூறியது பின்வருமாறு. “இந்த திறமையான அனைத்து வீரர்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். குறிப்பாக தங்களுடைய தோள் மீது தங்களின் அணியை சுமந்து வெற்றியை பெற்றுக் கொடுக்கும் அளவுக்கு அவர்களிடம் திறமை இருக்கிறது. அவர்கள் சிறப்பாக செயல்பட்டால் அவர்களின் அணியும் வெல்லும்” என்று கூறினார்.

Advertisement