2024 ஜனவரியில் நடக்கும் இந்திய டெஸ்ட் தொடரிலிருந்து விலகுகிறாரா? இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் – அவரே அளித்த பேட்டி

Ben Stokes 2
- Advertisement -

நட்சத்திர இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் நவீன கிரிக்கெட்டில் உலக அளவில் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக போற்றப்படுகிறார். குறிப்பாக 2019 உலகக்கோப்பை ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்று கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் 2022 டி20 உலகக் கோப்பை ஃபைனலிலும் அரை சதமடித்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அதன் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக கடந்த வருடம் நியமிக்கப்பட்ட அவர் பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு 33 வயதிலேயே ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென்று அறிவித்தார்.

ஆனாலும் தற்போது நடப்பு சாம்பியனாக இருக்கும் இங்கிலாந்து கோப்பையை வெல்வதற்கு ஆல் ரவுண்டராக அவருடைய பங்கு மிகவும் முக்கியம் என்று கருதிய கேப்டன் ஜோஸ் பட்லர் மீண்டும் விளையாடுமாறு கேட்டுக் கொண்டார். அதை ஏற்றுக்கொண்ட அவர் ஒருநாள் போட்டிகளில் அறிவித்த ஓய்வு முடிவை வாபஸ் பெற்று இந்தியாவில் நடைபெறும் 2023 உலகக்கோப்பையில் விளையாட உள்ளதாக அறிவித்துள்ளது அந்நாட்டு ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

விலகும் ஸ்டோக்ஸ்:
இருப்பினும் கடந்த பிப்ரவரியில் முழங்கால் காயத்தை சந்தித்த அவர் ஐபிஎல் 2023 தொடரில் சென்னை அணிக்காக பெரும்பாலும் விளையாடாமல் நடைபெற்று முடிந்த ஆஷஸ் தொடரிலும் பந்து வீசவில்லை. இந்நிலையில் 2023 உலகக்கோப்பைக்கு பின் முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கும் பென் ஸ்டோக்ஸ் அதிலிருந்து குணமடைவதற்கு சில மாதங்கள் தேவைப்படும் என்பதால் 2024 பிப்ரவரி மாதம் இந்திய மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவதற்கு வாய்ப்புள்ளதாக மறைமுகமாக கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியும். இருப்பினும் அதைப் பற்றி நான் சொல்ல முடியாது. இப்போதைக்கு சில நிபுணர்களிடம் நான் நல்ல உரையாடல்களை நிகழ்த்தியுள்ளேன். அதனால் அறுவை சிகிச்சைக்கான திட்டங்கள் தயாராகியுள்ளன. எனவே அதை உலகக்கோப்பை முடிந்த பின் செய்வது சிறந்த திட்டமாக இருக்கும். ஏனெனில் அடுத்த கோடைகாலத்தில் நான் முழுமையான வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக விளையாட விரும்புகிறேன்”

- Advertisement -

“அதனால் இந்த மழை காலத்தில் உலக கோப்பையில் முழுமையாக விளையாடி முடித்து விட்டு அதன் பின் முழங்கால் பற்றிய விஷயத்தில் கவனத்தை செலுத்த உள்ளேன்” என்று கூறினார். பொதுவாக முழங்கால் வலிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டால் 2 – 3 மாதங்கள் குணமடைவதற்கு தேவைப்படும் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: தோனியை கடவுள் மாதிரி அங்க பாக்குறாங்க. நானே நேர்ல பாக்கும்போது தான் அது தெரிஞ்சது – கேமரூன் க்ரீன் நெகிழ்ச்சி

அந்த நிலைமையில் நவம்பர் மாத இறுதியில் நிறைவு பெறும் உலகக் கோப்பைக்கு பின் அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டால் 2024ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக துவங்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விளையாடுவது சந்தேகமாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement