ஜெய்ஸ்வால் என்னை மாதிரி வரமுடியாது.. ஆனா அவருக்கு அந்த வாய்ப்பை கொடுங்க.. சேவாக் ஓப்பன்டாக்

Virender Sehwag 3
- Advertisement -

மும்பையைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் யாசஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன்களில் ஒருவராக அறியப்படுகிறார். 2020 அண்டர்-19 உலகக் கோப்பையில் 400 ரன்கள் அடித்து இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடினார். குறிப்பாக 2023 சீசனில் அதிவேகமான அரை சதமடித்து சாதனை படைத்த அவர் 625 ரன்கள் விளாசினார்.

அப்படி ஐபிஎல் தொடரில் அட்டகாசமாக செயல்பட்டதால் இந்தியாவுக்காக அறிமுகமான அவர் முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து ஆட்டநாயகன் விருது வென்றார். அதைத் தொடர்ந்து சீனாவில் நடைபெற்ற 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நேபாளுக்கு எதிரான காலிறுதியில் சதமடித்து சிறப்பாக விளையாடிய அவர் இந்தியா தங்கப்பதக்கம் வெல்ல உதவினார்.

- Advertisement -

சேவாக் பாராட்டு:
அதே வேகத்தில் கடந்த மாதம் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் 712 ரன்கள் அடித்த ஜெய்ஸ்வால் 4 – 1 (5) கணக்கில் இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றி தொடர்நாயகன் விருதை வென்றார். அதை விட அத்தொடரில் பெரும்பாலான போட்டிகளில் 50, 100, 150, 200 ரன்களை ஜாம்பவான் சேவாக் போல சிக்ஸர் அல்லது பவுண்டரியுடன் தொட்ட அவர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக பயமின்றி ஹாட்ரிக் சிக்ஸர்களை தெறிக்க விட்டார்.

அத்துடன் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில், ஒரு தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராகவும் ஜெய்ஸ்வால் 2 உலக சாதனை படைத்தார். அதனால் லெப்ட் ஹேண்ட் சேவாக் போல ஜெயஸ்வால் அசத்துள்ளதாக ஒப்பீடுகளும் பாராட்டுகளும் காணப்படுகின்றன. இந்நிலையில் ஜெய்ஸ்வால் எப்போதும் தம்மை போல் வர முடியாது என்று தெரிவிக்கும் சேவாக் அவருக்கு 2024 டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

இது பற்றி க்ரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய ஆரம்ப காலத்தில் நான் சச்சினுடன் ஒப்பிடப்பட்டேன். ஆனால் அதை சீக்கிரமாக உங்கள் மனதில் இருந்து வெளியே வைத்தால் சிறந்தவராக வர முடியும். ஒப்பிடுகள் உங்களுக்கு வலியை கொடுக்கும். என்னால் சச்சின் போல செயல்பட முடியாது. அப்படி ஒப்பிட்ட போது நான் என்னுடைய பேட்டிங்கில் சில மாற்றங்களை செய்தேன். அப்போது நான் சச்சின் போல பேட்டிங் செய்வதாக சொல்வதை மக்கள் நிறுத்தினார்கள்”

இதையும் படிங்க: பாண்டியாவுக்கு இடமில்லை.. தனது 2024 டி20 உ.கோ இந்திய பிளேயிங் லெவனை தேர்ந்தெடுத்த சேவாக்

“இந்தப் பையன் (ஜெய்ஸ்வால்) மீது எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. சிறிய ஊரிலிருந்து நீங்கள் வரும் போது கடினமாக உழைக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் மீண்டும் அங்கேயே சென்று விடுவீர்கள். இந்த நேரத்தில் உலகக் கோப்பையில் அவர் விளையாடுவதற்கான விசா மற்றும் டிக்கெட் உறுதி செய்யப்பட்டிருக்கும் என்று நான் நம்புகிறேன்” எனக் கூறினார்.

Advertisement