பாண்டியாவுக்கு இடமில்லை.. தனது 2024 டி20 உ.கோ இந்திய பிளேயிங் லெவனை தேர்ந்தெடுத்த சேவாக்

Virender Sehwag 4
- Advertisement -

உலக டி20 கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கப் போகும் 2024 ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. அதில் விளையாடப் போகும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் இடம் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.

அதன் அடிப்படையில் சிஎஸ்கே அணியில் சிறப்பாக விளையாடி வரும் சிவம் துபே இந்தியாவுக்காக தேர்வு செய்யப்பட வேண்டும் என்று யுவராஜ் சிங், வீரேந்திர சேவாக் சமீபத்தில் கேட்டுக்கொண்டனர். இதற்கிடையே சற்று குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடும் வழக்கத்தை வைத்துள்ள விராட் கோலியை தேர்வுக் குழு தேர்ந்தெடுக்குமா என்ற கேள்வியும் காணப்படுகிறது.

- Advertisement -

சேவாக் லெவன்:
அதே சமயம் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் நேரடியாக ஓப்பனிங்கில் விளையாட வேண்டும் என்று சமீபத்தில் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையில் முதல் போட்டியில் களமிறங்குவதற்கு தகுதியான 11 பேர் கொண்ட இந்திய அணியை முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தேர்ந்தெடுத்துள்ளார்.

ஆச்சரியப்படும் வகையில் அதில் முதன்மை வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக கருதப்படும் ஹர்திக் பாண்டியாவை அவர் தேர்ந்தெடுக்கவில்லை. மேலும் தற்போது தடுமாற்றமாக செயல்படுவதால் 15 பேர் கொண்ட இந்திய அணியில் மட்டுமே ஹர்திக் பாண்டியா இருப்பார் என்றும் சேவாக் தெரிவித்துள்ளார். இது பற்றி ஆடம் கில்கிறிஸ்ட் யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“யசஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட், 6வது இடத்தில் ரிங்கு சிங் அல்லது சிவம் துபே ஆகியோரில் ஒருவர் விளையாட வேண்டும். அவர்களைத் தொடர்ந்து ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், சந்திப் ஷர்மா, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா. ஹர்திக் பாண்டியா கண்டிப்பாக 15 பேர் கொண்ட அணியில் இருக்க வேண்டும். ஆனால் பிளேயிங் லெவனில் சந்தேகம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: டி20 கிரிக்கெட்ல மலிங்கா, பும்ரா போன்ற பவுலர்கள் இவ்ளோ சக்ஸஸ்ஸாக காரணமே இதுதான் – பிராவோ பேட்டி

இந்த வருட ஐபிஎல் தொடரில் மும்பையின் கேப்டனாக விளையாடி வரும் ஹர்டிக் பாண்டியா பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டிலும் சிறப்பாக செயல்படவில்லை. அதனால் சுமாரான ஃபார்மில் தவிக்கும் அவருக்கு பதிலாக சிவம் துபேவை தேர்ந்தெடுக்கலாம் என்று இர்பான் பதான் போன்ற சில முன்னாள் வீரர்கள் தெரிவித்திருந்தனர். அந்த சூழ்நிலையில் அவரை சேவாக் தனது பிளேயிங் லெவனில் தேர்ந்தெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement